Monday, March 9, 2009

பெண் என்றொரு கவிதை



நகரப்பேருந்து ரோமியோக்களின் காதற்பெருக்கினால் ஏற்படும் அவதிகளும்,
பணிபுரியும் இடங்களில் உடனுறையும் ஜொள்ளர்களால் ஏற்படும் சங்கடங்களும்,
பணத்துக்காய் ஆடை துறக்கும் நமீதாக்களும் நயந்தாராக்களும்,
அன்னக்கரண்டியே கைகளாய் மாறிப்போன பல அம்மாக்களும்,
அலுவலகம், வீடு என அயராமல் அல்லல்படும் அணங்குகளும்,
தானே விலை கொடுத்து அடிமையாய் போகும் மணப்பெண்களும்,
இன்னமும் கண‌வனின் சந்தேகத்துக்காய் தீக்குளிக்கும் சீதைகளும் என,
யுகங்கள் கடப்பினும்,
இதிகாசங்கள் மறப்பினும்,
பெண்களின் நிலையில் அவ்வளவாய் மாற்றமில்லை,
எங்கள் இந்தியத்திருநாட்டில்...
எனினும் இங்கு நாங்களும் விமரிசையாய் கொண்டாடி முடித்தோம் மகளிர் தினத்தை...

8 comments:

  1. ////
    யுகங்கள் கடப்பினும்,
    இதிகாசங்கள் மறப்பினும்,
    பெண்களின் நிலையில் அவ்வளவாய் மாற்றமில்லை,
    எங்கள் இந்தியத்திருநாட்டில்...
    எனினும் இங்கு நாங்களும் விமரிசையாய் கொண்டாடி முடித்தோம் மகளிர் தினத்தை...
    //////

    கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது
    அதே சமயம் ஒரு பெண்ணாய் பிறந்ததால் நீங்கள் என்ன என்னஇழந்ததாக உணர்கிறீர்களோ அவையெல்லாம் உட்பட எல்ல சுதந்தரமும் உங்களிம் பெண் குழந்தைகளுக்கு தரவேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்
    மற்றவை தானாக மாறும்
    கலாச்சார மாற்றம் ஒரு இரவில் நடந்துவிடாது

    நல்ல பதிவு

    ReplyDelete
  2. மிக அழகான வார்த்தைகளால் கோர்த்த கவிதை மாலை.....
    ரசிக்க வைக்கிறது வார்த்தை பிரயோகங்கள் ரீனா...!!
    வாழ்த்துக்கள்...!!! :)))

    ReplyDelete
  3. //யுகங்கள் கடப்பினும்,
    இதிகாசங்கள் மறப்பினும்,
    பெண்களின் நிலையில் அவ்வளவாய் மாற்றமில்லை,
    எங்கள் இந்தியத்திருநாட்டில்...//

    உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன் ரீனா...!!
    எனக்கு தெரிந்து நல்ல மாற்றங்கள் கண்டிப்பாக‌
    இருக்கின்றது.... எப்பொழுது
    ஒத்துக்கொள்ளப்போகின்றீர்கள் ??:)))))

    ReplyDelete
  4. பிரியமுடன் பிரபு said...
    //உறுதியாக இருங்கள்
    மற்றவை தானாக மாறும்
    கலாச்சார மாற்றம் ஒரு இரவில் நடந்துவிடாது

    நல்ல பதிவு//

    நன்றி பிரபு... உண்மை தான் தங்கள் கருத்து... யுகங்களே போதவில்லை எனும் போது ஓர் இரவில் எதுவும் நடந்து விடாதுதான்.

    தங்கள் வருகையும் தருகையும் மகிழ்ச்சி அளிக்கிறது:)))

    ReplyDelete
  5. //எனக்கு தெரிந்து நல்ல மாற்றங்கள் கண்டிப்பாக‌
    இருக்கின்றது.... எப்பொழுது
    ஒத்துக்கொள்ளப்போகின்றீர்கள் ??:))))
    //
    நன்றி நவீன் ப்ரகாஷ்... மாற்றங்கள் உண்டு என்பதை மறுதலிப்பதற்கில்லை... ஆயினும், அந்த மாற்றங்களுக்கு தக்கவாறு புதியதாய் பெண்ணுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன. உங்களுக்கு தெரியாததா என்ன?

    ReplyDelete
  6. //எனக்கு தெரிந்து நல்ல மாற்றங்கள் கண்டிப்பாக‌
    இருக்கின்றது.... எப்பொழுது
    ஒத்துக்கொள்ளப்போகின்றீர்கள் ??:))))
    //
    நன்றி நவீன் ப்ரகாஷ்... மாற்றங்கள் உண்டு என்பதை மறுதலிப்பதற்கில்லை... ஆயினும், அந்த மாற்றங்களுக்கு தக்கவாறு புதியதாய் பெண்ணுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன. உங்களுக்கு தெரியாததா என்ன?

    ReplyDelete
  7. தன் மான தமிழ் பெண்ன்னின் சாட்டையடி

    ReplyDelete