Thursday, October 23, 2008

காதலின் சிரிப்பலைகள்



கடற்கரையில் உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள்...

அவர்கள்? அவனும் அவளும்...

அமைதியாய் ரசித்துக்கொண்டு...
"எனக்கு இந்த அலைகளைத்தான் மிகவும் பிடிக்கும்" என்றாள் அவள்...

"எனக்கு ஆழக்கடல்தான் விருப்பம்" என்றான் அவன்...

"அலைகளில் கால் நனைகையில் உயிர் வரை நனையும்" என்றாள் அவள்...

"நடுக்கடலின் நீள் அமைதி மனதின் ஆழத்தை பேசும்" எனறான் அவன்...

"அலைகளின் ஆர்ப்பரிப்பு பருவப்பெண்ணின் மனதைப் போல குதூகலமானது" இது அவள்...

"நீலக்கடலின் அமைதி பக்குவப்பட்ட மனதைப்போன்று அருமையானது" இது
அவன்...

காதலர்களின் விவாதம் வலுத்தது...

"அட என் செல்ல முட்டாள்களே! எப்படி சொல்லி உங்களுக்கு புரிய வைப்பேன்?

கடலின்றி கரை அழகில்லை!

கரையின்றி கடல் அழகில்லை!

ஏனெனில் அவையும் காதலர்தான் உங்களைப்போல..." என்று

எள்ளி நகைத்தது காதல் அவர்களைப் பார்த்து....

14 comments:

  1. நல்லாருக்குங்க கவிதை

    ReplyDelete
  2. ஹாய் ரீனா... உங்களுடைய இந்த கவிதை மிக நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அதிஷா said..
    "நல்லாருக்குங்க கவிதை"

    வணக்கம் அதிஷா... மிக்க நன்றி.ரொம்ப சந்தோஷமாயிருக்கு உங்க மறுமொழி பார்த்துட்டு...

    ReplyDelete
  4. சக்தி said...
    "ஹாய் ரீனா... உங்களுடைய இந்த கவிதை மிக நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்"

    நன்றி சக்தி:)

    ReplyDelete
  5. //கடலின்றி கரை அழகில்லை!

    கரையின்றி கடல் அழகில்லை! //

    :))

    அழகு கவிதை ரீனா... மேலும் கவியுங்கள்... :))

    ReplyDelete
  6. உண்மைதான் ...கரையில்லாமல் கடலு, கடல் இல்லாமல் கரையும் ஏது? நல்ல கவிதை.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  7. நல்லா இருக்குது... எல்லாரும் கவிதைனு சொல்லிருக்குறதுனால நானும் கவிதை நல்லா இருக்குதுன்னே சொல்லிக்கிறேன் :))

    ReplyDelete
  8. அருணா said...

    "உண்மைதான் ...கரையில்லாமல் கடலு, கடல் இல்லாமல் கரையும் ஏது? நல்ல கவிதை.
    அன்புடன் அருணா"

    ரீனா said...

    "நன்றி அருணா:))) தங்கள் மறுமொழி மகிழ்ச்சி அளிக்கிறது...."

    ReplyDelete
  9. நவீன் ப்ரகாஷ் said...
    //கடலின்றி கரை அழகில்லை!

    கரையின்றி கடல் அழகில்லை! //

    :))

    அழகு கவிதை ரீனா... மேலும் கவியுங்கள்... :))

    ரீனா said...

    "வாங்க நவீன் ப்ரகாஷ்... ஆச்சரியமான வருகை... அழகான தருகை... இரண்டிற்குமே நன்றி:)))"

    ReplyDelete
  10. ஜி said...
    நல்லா இருக்குது... எல்லாரும் கவிதைனு சொல்லிருக்குறதுனால நானும் கவிதை நல்லா இருக்குதுன்னே சொல்லிக்கிறேன் :))

    reena said...

    நன்றி ஜி:)))

    ReplyDelete
  11. //"அட என் செல்ல முட்டாள்களே! எப்படி சொல்லி உங்களுக்கு புரிய வைப்பேன்?

    கடலின்றி கரை அழகில்லை!

    கரையின்றி கடல் அழகில்லை!//

    அழகான வரிகள்...தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. மழைச்சாரலில் நனைந்ததுப்போன்று இருந்தது,"காதலின் சிரிப்பலைகள்" படித்தபோது.நல்ல.......கவிதை

    ReplyDelete
  13. well written :) I really enjoyed reading :)

    ReplyDelete