Monday, October 6, 2008

ஆசை மேகங்கள் 1



ஜன்னல் கம்பிகளின் வெளியே பார்த்த போது வானம் மேக மூட்டமாய் சாம்பல் நிறத்தில் காட்சி அளித்தது.... இப்படி ஆகாயம் கருக்கும் போதெல்லாம் றெக்கை கட்டி கொண்டு மழைக்கு தயார் ஆகி விடும் மனசு. இன்று உற்சாகம் இன்றி ஊமையாய் படுத்து கிடந்தது. காரணம்... ஒரு மாதத்திற்குள் முன்பு நான் இப்படி இருந்தவன் அல்ல...


அன்று


பெங்களூரின் ஒரு மாநகர பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன். "ஹாய் ரவி" என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தேன். திரும்பி பார்க்கும் முன்பு உங்களுக்கு என்னை பற்றி சொல்லி விடுகிறேன். நான் ரவி... சென்னையில் கடந்த வருடம் பி.ஈ படித்து முடித்து விட்டு, ஒரு உருப்படியான வேலை கிடைத்து விட்டதால் ரெண்டு மாதங்களாக பெங்களூர்-இல் இருக்கிறேன். இந்த ஊரே எனக்கு மிகவும் புதியதாக இருக்கிறது. இங்கு நண்பர்கள் யாருமே இல்லை என்பதால் தனிமை அதிகமாகவே தெரிகிறது. எனவே, வார இறுதிகளில் சென்னை செல்வது தவறாத வழக்கம் ஆகி விட்டது. இன்று, வெள்ளிக்கிழமை.. நாளை ஊருக்கு போக வேண்டியது தான்.. என் அம்மாவுக்கும் என்னை பார்க்காமல் இருக்க முடியாது. அடடா யார் கூப்பிட்டது என்று திரும்பி பார்க்கணும் ல? அட.. அது அபிலாஷினி.. என் ஆபீஸ்-இல் வேலை செய்பவள் தான்... பெங்களூர்-இல் சிறு வயதிலேயே செட்டில் ஆகிய தமிழ் பெண். மிக நாகரிகமானவள்; சகஜமாக பழகுபவள். எல்லாருக்கும் செல்லமாக ‘அபி’





"ஹாய் அபி " என்று கூறும் போதே அவள் அந்த பேருந்தில் ஏறி என்னருகே வந்து விட்டாள். "இங்கே உட்காரட்டுமா"? என்று கேட்டவள் நான் பதில் சொல்லும் முன்பே அங்கே உட்கார்ந்தும் விட்டாள். எத்தனை வேகமான பெண் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அபி மிக அழகானவளும் கூட... படபடக்கும் இமைகள், பாதாம் நிறம், அழகிய உதடுகள், சற்றே மேடேறிய‌ நெற்றி.. எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை என்று... ரொம்ப ரசித்து விட்டேனோ என்று நான் யோசித்து கொண்டு இருக்கையில் "என்ன ரவி? ? எதுவுமே பேச மாட்டேன்கிறிங்க?" என்று விரல்களை என் முன்னால் அழகாய் ஏன் என்பது போல் அசைத்து கேட்டாள் அபி.. நம்ம கெத்தை விட்டு கொடுக்க முடியுமா? ஏதோ யோசனை? என்று கூறி தப்பித்து விட்டேன். நாங்களிற‌ங்க வேண்டிய நிறுத்தம் வந்ததால் இருவரும் இறங்கினோம். "நீங்களும் இந்திரா நகர் ல தான் இருக்கீங்களா?" என்றாள். "ஆமாம், நீங்க?" என்றேன். " கொஞ்சம் interior ஆ போகணும்" என்றாள். :அப்படியா? என் பிளாட் இங்க பக்கத்துல தான். வாங்களேன் ஒரு கப் காபி சாப்பிட்டு போகலாம் என்றேன். எனக்கே ஆச்சர்யம் தான் என் அழைப்பு . “ஒ sure” என்று அவள் இணங்கியது அதை விட ஆச்சர்யம் .








5 நிமிட நடையில் வீடு வந்து சேர்ந்தோம்."பரவால்ல! bacelor பிளாட் சுத்தம்மா இருக்கு " என்று கண் சிமிட்டி சிரித்தாள் அபி. காபி சாப்பிட்டுக்கொண்டே ரொம்ப நேரம் கதை பேசிவிட்டு கிளம்பினாள். பிரிய மனம் இன்றி விடை கொடுத்தேன். சில நாட்க‌ள் சென்ற‌ன‌. ஒரு நாள் "ஏன் ரவி இனிக்கு movie போலாமா?” என்று அபி கேட்டபோது மறுக்கத் தோன்றவில்லை எனக்கு... அன்று நாங்கள் சினிமா பார்த்து விட்டு திரும்பும் போது இரவு பத்து மணி ஆகி விட்டது. அவளை அவள் வீடு வரை பத்திரமாய் சேர்த்து விட்டு நான் வந்த போது தான் அன்று சனிக்கிழமை என்பதும் நான் சென்னைக்கு செல்ல வில்லை என்பதும் உறைத்தன. மொபைலை எடுத்து பார்த்தால் அம்மாவிடமிருந்து பல missed calls. வீட்டுக்கு போனதும் பேசி சமாதானப்படுத்தி விட வேண்டும் என்று வீடு வந்தேன். வீடு வருவதற்குள்ளேயே "reached home da?" என்று அவளிடமிருந்து sms. அவளுக்கு பதில் அனுப்ப ஆரம்பித்தவன் நள்ளிரவு 2.30 வரை chat செய்து கொண்டிருந்தேன். பின்வந்த நாட்களில் sms கள் அதிகமாயின. இரவுகளில் நெடுநேரம் தொலைபேசி அழைப்புக்கள் வாடிக்கை ஆகி விட்டன. எங்கள் இணக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. அந்த ஒரே வாரத்தில் நாங்கள் பேசாத விஷயங்களே இல்லை எனலாம். குளிப்பது, சாப்பிடுவது என எதையுமே சொல்லாமல் செய்வதில்லை. அடுத்து வந்த நாட்களில் என் ஃப்ளாட்டுக்கு வந்து மாலை நேரங்களில் கதை அடிப்பது வழக்கமாகி விட்டது.அவள் அவளின் அக்காவோடு தனியே வசித்து வந்ததால் கட்டுப்பாடுகள் இன்றி சமாளித்து விடுவாள்.











அன்றொரு நாள் அப்படித்தான் எங்கள் வீட்டு டைனிங் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.மிகவும் அருகாமையில் எங்கள் விழிகள் சந்தித்த போது பேச்சு திடீரென நின்று மௌனம் நிலவியது. நாங்கள் அவ்வளவு நேரம் பேசியதை விட அந்த மௌனம் அதிகமாய் பேசியது. என் கைகளை பிடித்து அழுத்திய அபி "வீட்டுக்கு கிளம்பட்டுமா டா?" என என் கண்களை பார்த்து கேட்ட போது தடுமாறி போனேன். "ம்ம்" என்ற என் பதில் எனக்கே கேட்கவில்லை.



















சட்டென்று என்னை நெருங்கிய அபி என் முகத்தை அருகில் இழுத்து அவள‌ருகே சாய்த்து என் இதழ்களில் இதழ் பதித்தாள். அந்த கணம்... அத்துடன் உலகம் நின்றிருக்கலாம். என் முதல் முத்தம் அது தான்... அம்மா சிறு வயதில் நெற்றியில் பதித்த முத்தங்களுக்கு பிறகு...

7 comments:

  1. ஆசை மேகம் ஆரம்பத்திலயே என்னைய ரொம்ப நனைச்சுடுச்சு ரீனா.!!! துவட்டிக்கொள்ள டவல் ப்ளீஸ்... :))))

    ReplyDelete
  2. //அபி மிக அழகானவளும் கூட... படபடக்கும் இமைகள், //

    அந்த கால சரோஜா தேவி மாதிரி இமை பட படக்குமோ...?? ;)))

    //பாதாம் நிறம், அழகிய உதடுகள், சற்றே மேடேறிய‌ நெற்றி.. எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை //

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியேதான் பசங்க மனச ரணகளமாக்குறாவ...ம்ம்ம்ம்... ;)))))

    நல்ல வர்ணனை... !!

    ReplyDelete
  3. சூப்பரா போகுது கதை... நீங்க நல்லா எழுதறீங்க ரீனா... நடை அருமை...

    கலக்குது... சீக்கிரம் அடுத்த பகுதி எழுதுங்க... சரியா..?

    ( ஆனா இன்னும் கொஞ்சம் தள்ளி தொடரும் போட்டு இருக்கலாம்.. ) ;))

    ReplyDelete
  4. ஜொள்ளுப்பாண்டி said...
    "//அபி மிக அழகானவளும் கூட... படபடக்கும் இமைகள், //

    அந்த கால சரோஜா தேவி மாதிரி இமை பட படக்குமோ...?? ;)))"

    இல்லீங்க பொண்ணுங்க நார்மலா கண் இமைக்கறதே உங்கள மாதிரி ஜொள்ளுப்பசங்களுக்கு இப்படில்லாம் தெரியுதுல... அதத்தான் சொல்ல முயற்சி பண்றோம்

    //பாதாம் நிறம், அழகிய உதடுகள், சற்றே மேடேறிய‌ நெற்றி.. எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை //

    ஜொள்ளுப்பாண்டி said...
    "இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியேதான் பசங்க மனச ரணகளமாக்குறாவ...ம்ம்ம்ம்... ;)))))"

    என்ன ரணகளமானாலும் யாரும் அடங்கமாட்டேங்கிறிங்களேப்பா... அதுதானே பிரச்சினையே

    ReplyDelete
  5. ஜொள்ளுப்பாண்டி said...
    "ஆசை மேகம் ஆரம்பத்திலயே என்னைய ரொம்ப நனைச்சுடுச்சு ரீனா.!!! துவட்டிக்கொள்ள டவல் ப்ளீஸ்... :))))"

    வணக்கம் ஜொள்ளுப்பாண்டி சார்... தங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது:))) அடிக்கடி வந்துட்டே இருங்க‌

    ReplyDelete
  6. //"reached home da?" //

    //பாதாம் நிறம்//

    I liked these very much... :))

    ஒரு கதையோட வெற்றியே வாசிப்பாளனை கதாபாத்திரத்தோட ஒன்றிப் போக வைப்பதுதான்... அந்த விடயத்துல கலக்கிட்டீங்க...

    ReplyDelete
  7. ஜி said...

    "reached home da?" //

    //பாதாம் நிறம்//

    I liked these very much... :))

    ஒரு கதையோட வெற்றியே வாசிப்பாளனை கதாபாத்திரத்தோட ஒன்றிப் போக வைப்பதுதான்... அந்த விடயத்துல கலக்கிட்டீங்க...

    ஜி said...
    ரீனா said...
    "நன்றி ஜி... தங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. தங்க‌ள் தருகை உற்சாகத்தைக் கூட்டுகிறது... புது bloggerக்கு எழுத்து முயற்சிக்கு உங்களோட இந்த தருகைகள் உண்மையாவே உற்சாக டானிக் தான்...."

    ReplyDelete