Tuesday, October 7, 2008

ஆசை மேகங்கள் 2

நீண்ட அந்த 5 நிமிடங்கள் முடிவுக்கு வந்த போது நான் வசமிழந்து விட்டிருந்தேன். அவளும் தான்... அருகாமையில் கடந்தன பல அற்புத நொடிகள்.. நாங்கள் சிலையென நிற்க... என்னிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள் "போயிட்டு வரேன்டா" என்று என் கண்களை தவிர்த்து எங்கெங்கோ பார்த்து சொன்னவள் மின்னலாய் மறைந்தே போனாள். அடுத்த நாள் ஆபீசில் அபி என்னிடம் சரியாகவே பேசவில்லை. நெருக்கம் அதிகமான சமயம் ஏன் விலகி போகிறாள் என்று புதிராக இருந்தது. அருகே சென்று "அபி" என மெதுவாக அழைத்தேன். "ம்" என்று நிமிர்ந்தவள் கண்களில் மெல்லிய நீர்த்திரை."என்னடா" என்று பதறினேன். "பயமாயிருக்குடா இது ஃப்ரென்ட்ஷிப்பா இல்லையானு" என்றாள். விடைத் தெரிந்தே அவள் கேட்ட கேள்விக்கு "ஃப்ரென்ட்ஷிப் தான் அபி.கவலைப்படாதே" என்றேன்.


அடுத்து வந்த நாட்களில் நாங்கள் ஒன்றாய் கழித்த பொழுதுகளில் தீண்டல்கள் அதிகமாக நட்பு கரைந்து கொண்டே வந்தது. இப்படியே பல நாட்கள் செல்ல, எனக்கு இது நட்பு இல்லை என்று அவளிடம் தெளிவுப்படுத்த தோன்றியது. நட்பு போர்வையில் எல்லைமீறல்கள் நட்பை களங்கப்படுத்துவதாய் தோன்ற, அந்த வெள்ளி அன்று மாலை என் வீட்டில் அவளிடம் இதைப்பற்றி பேசத்தொடங்கினேன்."ஏன் அபி, நாம பழகறது வெறும் ஃப்ரன்ட்ஷிப் தான்னு நீ நினைக்கிறியா" என்ற என் கேள்விக்கு "ஆமாம்" என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு... அவள் தாடையை விரல்களால் பிடித்து திருப்பி என் விழிகளைப் பார்த்த அவள் கண்களைப் பார்த்து. "பாருடா! இது ஃப்ரன்ட்ஷிப் இல்ல.. அதுக்கும் மேல.. " என்றேன். "ஏன் அப்படி சொல்ற" என்றவளிடம் "நிஜமா உனக்கு புரியலியா அபி" என்று கேட்டேன். "புரியுது!ஃப்ரன்ட்ஸ் தொட்டுப் பேசவே மாட்டாங்களா ரவி? எந்த சென்சுரில இருக்கே நீ? ப்ராட் மைன்டட்‍ ஆ இருந்தா இப்படிலாம் தோணாது. பையனும் பொண்ணும் பேசினாலே லவ் தானா?" என்றுப் பேசிக்கொண்டே போனவளை கையமர்த்தினேன். "போதும் அபி! உனக்கு நட்பும் தெரியல!காதலும் புரியல" என்றேன். "போடா fool! உனக்குத்தான் பொண்ணுகளை புரிஞ்சுக்கவே முடியல" என்று பதிலளித்து விட்டு விருட்டென்று வெளியேறினாள். 2 மணி நேரம் கழித்து என் கோபம் தெளிந்து கால் செய்தால் தவிர்த்துக் கொண்டே இருந்தவள் பின்பு மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்தே விட்டாள்.சில நாட்களில் தன்னால் பேசுவாள் என்றெண்ணினேன்







சனிக்கிழமை ஆபீஸ் வரவேயில்லை அபி. திஙகளன்று வந்தவள் என்னை கண்டும் காணாதது போல் இருக்க நானே அவளிடம் சென்று "அபி! ஏன் பேச மாட்டேங்கிற?" என்றதும் முறைத்தவள் "இனி உங்களுக்கும் எனக்கும் ஒன்றும் இல்லை மிஸ்டர் ரவி! என் பின்னாடி வராதீங்க ப்ளீஸ்" என்று சத்தமாய் இரைந்த போது ஆபீஸே என்னை திரும்பிப்பார்த்தது.அவமானத்தில் முகம் கன்றிப்போனது.













வீட்டுக்குப்போய் அவள் மொபைலை தொடர்பு கொண்ட போது தான் நம்பரையே மாற்றி விட்டிருப்பது புரிந்தது. இரண்டு நாட்களாக ஆபீஸ் பக்கமே போகாமல் என் மேஜை மேல் இப்போது தலை சாய்த்து ஜன்னலின் வழியே வானத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அவளது அருகாமையும் ஸ்பரிசங்களும் மென்மையான அதரங்களும் பஞ்சு போன்ற உள்ளங்கைகளும் நினைவில் தோன்றி தோன்றி வெகுவாய் இம்சித்துக்கொண்டிருந்தன.

















எதிர்வீட்டின் பால்கனியில் காற்றில் படபடத்துக் கொண்டிருந்த சிகப்பு காட்டன் சேலை, அவள் சேலை அணிந்து அன்றொரு நாள் இதே வீட்டில் என் எதிரில் உட்கார்ந்து என்னிடம் பேசிக் கொண்டிருந்த பொழுதுகளை நினைவுக்கு கொண்டு வந்தன. கறுத்துப் போயிருந்த வானத்தில் இடியும் மின்னலும் தோன்றிய போது அவள் அருகிலிருந்து என்னை கட்டிக்கொள்வதாய் கற்பனை தோன்றியது. சே... என்ன மனசு இது... வேண்டாம் என்பதையே சுற்றி சுற்றி வட்டமிட்டுக்கொண்டு... மனதிற்குள் அசாத்தியமாய் வெறுமை சூழ்ந்தது அவளிருந்த இடத்திலெல்லாம்... வாழ்க்கையே பிடிக்கவில்லை எனக்கு... பக்கத்து வீட்டு அங்கிள் அவருக்காக வாங்கி வரச்சொன்ன தூக்கமாத்திரைகள் நினைவுக்கு வந்தன. ... அவற்றில் பத்தை எடுத்து விழுங்கி விட்டால் என்ன? அதற்கு பின் நான் யாரையும் எண்ணி மறுக வேண்டியதில்லை. எழுந்துப்போய் அந்த மாத்திரைகளை எடுத்து வந்தேன்.




















அப்போது தான் மூன்று நாட்களாய் மொபைலை ஸ்விட்ச் ஆன் செய்யக்கூட இல்லை என்பது நினைவுக்கு வர, ஒரு வேளை அவள் ஏதாவது call/msg செய்திருப்பாளோ என்று ஒரு நப்பாசை உதித்தது. ஓடிப்போய் மொபைலை தேடி எடுத்து ஆன் செய்தேன். ஆன் செய்ததுமே "amma calling" என்ற பச்சை நிற எழுத்துக்கள் ஒளிர்ந்தன. யாரோ தலையில் சம்மட்டியால் அடித்தது போலிருந்தது எனக்கு. எத்தனை நாளாகி விட்டது அம்மாவிடம் பேசி...பொத்தானை அழுத்தி போனை காதில் வைத்தேன். "ரவி... எப்படிடா கண்ணு இருக்கே? ஏண்டா இத்தனை நாளா போனே பண்ணல அம்மாவுக்கு? அங்க ஏதாவது பிரச்சனையா? நாலு வாரமாச்சுப்பா நீ என் கிட்ட பேசி... நைட்ல வீட்டில் தானே இருப்பே, பேசலாம்னு போன் பண்ணா எப்பவுமே லைன் பிசியாவே இருந்துச்சு. 3 நாளா ஸ்விட்ச்டு ஆஃப் வேற! பயந்தே போயிட்டேன் ரவி!உனக்காக 3 ஞாயித்துக்கிழமையும் சமைச்சுட்டு காத்திருந்தேன் டா.என்னடா இவன் கிட்டருந்து கவலையாப்போச்சு! நேத்து தான் உன் பேர்ல கோவில்ல அர்ச்சனை பண்ணினேன். இன்னிக்கு உன் கூட பேசிட்டேன். ஒழுங்கா சாப்பிடறியாப்பா? வேலை வேலைனு உட‌ம்பை கெடுத்துக்காத கண்ணா! எப்போ ஊருக்கு வருவ? கண்ல 'glaucoma' டெஸ்ட்டுக்காக டாக்டர் கிட்ட போகணும்ல? நீ வந்தா போகலாம்னு காத்துக்கிட்டு இருந்தேன். என்னப்பா ஒண்ணுமே பேச மாட்டேங்கிற? ஹலோ ரவி..." ‍ அம்மாவின் குரல் பேசிக் கொண்டே போனது.
கண்களினின்று கண்ணீர் மழையாய் கொட்டிக்கொண்டிருந்தது. ஜன்னல் வழியே வானத்தை ஏறிட்டுப்பார்த்தேன். மழை வராமலேயே மேகங்கள் கலைந்து, வானம் தெள்ளென தெளிந்து விட்டிருந்தது, நீர் திரையிட்ட விழிகளின் வழியே தெரிந்தது. தெளிந்த மனதுடன் "ஹலோ அம்மா" என்றேன்.

16 comments:

  1. ரீனா...மிக அழகாக கொண்டு சென்றிருக்கிறீர்கள்... சிக்கலான உறவுகளின் நிகழ்வுகளை மிக யதார்த்தமாக சொல்லியிருக்கும்விதம் மிக அருமை... :)))

    ReplyDelete
  2. சரி இப்போ கொஞ்சம் கலாய்ப்பு... :)))

    ஏணுங்க அம்மணி என்னதான் சொல்ல வாறீய..? நட்பு இல்லையாமா..? அப்போ என்னதானாம்..? நெம்ம கொழப்புறாளே உங்க ஈரோயினி... :))))

    ReplyDelete
  3. //"போடா fool! உனக்குத்தான் பொண்ணுகளை புரிஞ்சுக்கவே முடியல" //

    நெசமாலுமே இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலையே.. ஆண்டவா.... இந்த ஜொள்ளுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடேன்... ;))))

    ReplyDelete
  4. ஜொள்ளு said...
    ரீனா...மிக அழகாக கொண்டு சென்றிருக்கிறீர்கள்... சிக்கலான உறவுகளின் நிகழ்வுகளை மிக யதார்த்தமாக சொல்லியிருக்கும்விதம் மிக அருமை... :)))

    வணக்கம் ஜொள்ளுப்பாண்டி சார்... வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. சரி இப்போ கொஞ்சம் கலாய்ப்பு... :)))

    ஏணுங்க அம்மணி என்னதான் சொல்ல வாறீய..? நட்பு இல்லையாமா..? அப்போ என்னதானாம்..? நெம்ம கொழப்புறாளே உங்க ஈரோயினி... :))))

    என்ன‌ ஜொள்ளுப்பாண்டி சார்... இப்படி கேட்டுட்டிங்க? ஈரோயின்னாலே கொழப்பம் தானே? உங்களுக்கு தெரியாததா?

    ReplyDelete
  6. இப்போவாவது வானம் தெளிந்ததே....
    நல்ல கதை.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  7. மிக அழகாக இருந்தது கதை... உணர்வுகளையும் காட்சிகளோடு ஒன்றிணைத்து எழுதுவது இதுவரையில் எனக்கு வசப்படவே இல்லை :(( உங்கள் கதைகளின் பலமே அதுதான்னு நெனக்கிறேன்... இன்னும் நெறய எழுதி கலக்குங்க :)))

    கண் பரிசோதனை ரெண்டு கதைல வந்திடிச்சு... நீங்களும் கண் மருத்துவரா?? :))...

    ஆனாலும் உங்களுக்கு தைரியம் அதிகம்ங்க.. நீங்களும் பசங்க பண்ற மாதிரியே பொண்ணுங்கள வில்லியாக்கி பையன கவுத்துட்டீங்களே... ;)))

    //நெசமாலுமே இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலையே.. ஆண்டவா....//

    Repeatye :)))

    ReplyDelete
  8. அருணா said...
    "இப்போவாவது வானம் தெளிந்ததே....
    நல்ல கதை.
    அன்புடன் அருணா"

    ரீனா said...

    "வணக்கம்அருணா:))) தங்கள் தருகைக்கும் வருகைக்கும் மிக்க நன்றி"

    ReplyDelete
  9. ஜி said...
    "மிக அழகாக இருந்தது கதை... உணர்வுகளையும் காட்சிகளோடு ஒன்றிணைத்து எழுதுவது இதுவரையில் எனக்கு வசப்படவே இல்லை :(( உங்கள் கதைகளின் பலமே அதுதான்னு நெனக்கிறேன்... இன்னும் நெறய எழுதி கலக்குங்க :)))"

    ரீனா said...

    "வாங்க ஜி... மிக்க நன்றி... தங்கள் கதைகளுக்கு காட்சிகள் தேவையே இல்லை.. அது படிப்பவர் மனதில் தானே விரியும்... உங்கள் தேர்ந்த நடையே போதும். எங்க கதைக்கெல்லாம் தான் இதெல்லாம் தேவை:)))))"

    ReplyDelete
  10. ஜி said...
    "கண் பரிசோதனை ரெண்டு கதைல வந்திடிச்சு... நீங்களும் கண் மருத்துவரா?? :))..."

    ரீனா said...

    "அப்படிலாம் இல்லீங்க ஜி... எல்லாம் ஒரு சமுதாய சிந்தனை தான். சரி அதென்ன நீங்களும் கண் மருத்துவரா என்று கேட்டிருக்கிருக்கிறீர்கள். வேற blogger யாராவது கண் மருத்துவரா?"

    ReplyDelete
  11. UNGAL EZHUTHAAZHUMAI KAVANATHIRKURIYATHU....

    AAZHNDHA PORULGALUDAN KAI KORKKAVUM...

    VAAZHTHUGALUDAN-

    ReplyDelete
  12. actually i toooooo took a decision like ur story then i realised my place. if i do stupidity like that in an abroad that even spoil our country and it will leads to lots and lots of problems so i stoped at final moment then recently i read ur story and just asked why girls mind set like this wt they really thinks thats it

    ReplyDelete
  13. actually i toooooo took a decision like ur story then i realised my place. if i do stupidity like that in an abroad that even spoil our country and it will leads to lots and lots of problems so i stoped at final moment then recently i read ur story and just asked why girls mind set like this wt they really thinks thats it

    ReplyDelete
  14. and thanks to add my blog tooooooooo on ur profile in ur blogs follow list i really felt soooooooooooo happy bye

    ReplyDelete
  15. you definitely put a smile on my face by that climax of yours! I loved the way you indirectly expressed about how Ravi changed his decision! good one :)

    ReplyDelete