Sunday, July 19, 2009

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது
இப்போது வலையுலகில் சுவாரஸ்யமாய் ஓடிக் கொண்டிருக்கும் சுவாரஸ்ய வலைபதிவர் விருது வைபவத்தில் என்னையும் கூட சேர்த்து விட்டிருக்கிறார் பதிவர் சக்தி அவர்கள்(ஹி ஹி ஹி..) நன்றி சக்தி. இது உண்மையிலேயே என்னை ஊக்கப்படுத்துகிறது. இத்னை தொடங்கி வைத்த செந்தழல் ரவி அவர்களுக்கும் நன்றி.

இன்னும் அறுவருக்கு இந்த விருதை நான் அளிக்கலாமாம். நான் பரிந்துரைக்கும் அறுவர்...
1. புதியவன் ‍ http://puthiyavanonline.blogspot.com/
மிக அழகாக காதல் கவிதைகள் எழுதுபவர். உயர்காதலை கருவாக, தன் காதலியை மட்டுமே கருப்பொருளாய் கொண்டு அருமையான கவிதைகளை தருப‌வர். உங்கள் காதலும் கவிதைகளும் இப்போது போல் எப்போதும் செழிப்பாய் வளர வாழ்த்துக்கள் புதியவன்.
2. வருத்தப்படாத வாலிபர் சங்கம் http://www.vvsangam.com/
சீரியஸாக பலப்பதிவர்கள் எழுதிக்கொண்டிருக்க சிரிக்க வைப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும் ஒரு வலைப்பூ. சிபி, சிவா, கைபுள்ள, ஜொள்ளுப்பாண்டி,இளா, தேவ் என பலர் சேர்ந்து அமைத்த சங்கத்தில் மாதம் ஒருவரை அட்லாஸ் சிங்கமாக தேர்வு செய்து எழுத வைத்து பல பணிகளுக்கு நடுவில் சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டுள்ளனர்(இதுவே ரொம்ப பெரிய விஷய‌மாச்சே). எனவே இந்த விருது இவர்களது சங்கத்து சிங்கங்கள் ஒவ்வொருக்கும் தனியாகவும், மொத்தமாக இவர்கள் சங்கத்துக்கும் தரப்படுகிறது. இவர்களது பணி தொடர வாழ்த்துக்கள்.

3.கரையோரக்கனவுகள் ஸ்ரீமதி‍ http://karaiyoorakanavugal.blogspot.com/
மெல்லிய‌ வலியை சொல்லும்‌ காத‌ல் க‌விதைக‌ளை எழுதுப‌வ‌ர். பின்னூட்ட‌மிடும் ப‌திவ‌ர்க‌ளை 'அண்ணா அக்கா' என‌ அழைத்து காலி செய்ப‌வ‌ர். இவ‌ர‌து க‌விதைக‌ள் ஒவ்வொன்றுமே மிக‌ அழ‌கான‌வை. தொட‌ர்ந்து ப‌ல‌ காத‌ல் க‌விதை புனைய‌ வாழ்த்துக்க‌ள்

4.ம‌ன‌சுக்குள் ம‌த்தாப்பூ திவ்யா http://manasukulmaththaapu.blogspot.com/
திவ்யா காத‌ல் க‌தைக‌ள் எழுதுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர். இவ‌ர‌து க‌தைக‌ள் ப‌டிக்க, திரைக்கதைகளுக்கு நிகராக, அத்த‌னை சுவார‌ஸிய‌மாக‌ இருக்கும். க‌தைக்கு பொருத்தமான‌ ப‌ட‌ங்க‌ளை எப்ப‌டித்தான் தேடிப்பிடிப்பாரோ தெரியாது.கதை நெடுக அழகிய கவிதைகள் வேறு இருக்கும். இவ‌ர‌து க‌தைக‌ளை ப‌டித்துத்தான் என‌க்கும் வ‌லைப்பூ ஆர‌ம்பிக்கும் ஆசை வ‌ந்த‌து. நீங்க‌ள் இன்னும் ப‌ல‌ அழ‌கான‌ க‌தைக‌ள் ப‌டைக்க‌ வாழ்த்துக்க‌ள் திவ்யா

5. ந‌ட்புட‌ன் ஜ‌மால் http://adiraijamal.blogspot.com/
ஜமாலின் வ‌லைப்பூவை காட்டிலும் மிக‌ பிர‌சித்தியான‌வை அவ‌ர‌து பின்னூட்ட‌ங்க‌ள். மிக‌ அதிக‌மான‌ வ‌லைப்பூக்க‌ளில் இவ‌ர‌து பின்னூட்ட‌ங்க‌ளை காண‌லாம். மிக‌ முக்கிய‌மான விஷ‌ய‌ம் என்ன‌வென்றால், எவ‌ர் ம‌ன‌மும் நோகாமல்,படைப்பை மட்டுமே விமர்சித்து, பாரபட்சமின்றி பின்னூட்ட‌ம் இடுவார். அது அவ்வ‌ள‌வு எளிதான‌ ஒன்று அல்ல‌. என‌வே ஜ‌மால் உங்க‌ளுக்கு இந்த‌ விருது. த‌ங்க‌ள் ப‌ணி மேலும் சிற‌க்க‌ வாழ்த்துக்க‌ள்.

6. மை தாட்ஸ் டா ம‌ச்சி காய‌த்ரி http://enpoems.blogspot.com/
க்தை, க‌விதை, திரை விம‌ர்ச‌ன‌ம், த‌ற்போது சைட் அடித்து கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள் என‌ ஒரு த‌ள‌த்தில் நிற்காம‌ல் ப‌ல‌வ‌ற்றில் ப‌ரிண‌மிப்ப‌வ‌ர் த்மிழ்மாங்க‌னி என்ற‌ காய‌த்ரி. மிக‌ ஜாலியான‌ வ‌லைப்பூ இவ‌ருடைய‌து. ப‌ல‌ ப‌ல‌ திற‌மைக‌ள் உடைய‌வ‌ர் இவ‌ர். மேலும் நிறைய‌ எழுத‌ வாழ்த்துக்க‌ள் காய‌த்ரி

அறுவ‌ர் என்ப‌தால் ம‌ட்டுமே ப‌ட்டிய‌ல் இத்துட‌ன் நிறுத்த‌ப்ப‌டுகிற‌து. ஏனென்றால் சுவார‌ஸிய‌ ப‌திவ‌ர்க‌ள் நிறைய‌ பேர் உள்ள‌ன‌ர். அத்த‌னை பேருக்கும் என் பணிவான‌ வாழ்த்துக்க‌ள்

Saturday, July 18, 2009

யாருக்கு யாரோ ஸ்டெப்னிகடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணி இருக்கும். என் மொபைலில் ஒரு மெசேஜ் என் கல்லூரித்தோழியிடமிருந்து... "Watch zee tamil,, a wonderful movie of sam anderson” அப்படின்னு. சரி ஏதோ ஒரு இங்கிலீஷ் படத்தைத்தான் தமிழாக்கம் செஞ்சுருப்பாங்க போல.. பார்க்கலாம்னு நெனச்சேன். நானும் என் பக்கத்து வீட்டு மழலையும் சேர்ந்து ஆதித்யா சேனல் பார்த்துக்கொண்டிருந்தோம். விடுமுறை நாட்களில் அந்த மழலை (ரொம்ப மழலை இல்ல.. 5ஆம் கிளாஸ் படிக்குது) என்னுடன் எங்கள் வீட்டில் பெரும்பாலான நேரம் இருப்பது வழக்கம். அந்த படம் பார்ப்பதற்காக சேனல் மாற்றியதும் அந்த மழலையிடமிருந்து பயங்கர எதிர்ப்பு. ஒரு வழியாக அவளை சமாளித்து அந்த சேனலை வைத்தால் அப்ப்போத்தான் டைட்டில் கார்டு போட்டிருந்தாங்க. விதவிதமான கார்களை காட்டி முடிச்சுட்டு படம் ஆரம்பிச்சுது. நோஞ்சான் மாதிரி இருந்த ஒரு பொண்ணு வந்து "ஒருவனே இறைவன்" அப்படின்னு ஸ்கூல் கோயர்ல எல்லாம் பாடற மாதிரி பாட ஆரம்பிச்சுது.

"ஏய் என்னது இதுதான் நீ சொன்ன படமா? இது ஏதோ கிறித்துவ துதிப்பாடல் மாதிரி இருக்கு? ரொம்ம்ப லோ பட்ஜெட் படம் போல் தெரியுதே?" என என் தோழியை கேட்க "இதுதான்!படம் பர்த்துட்டே இரு!இனிதான் சாம் ஆன்டர்சன் என்ட்ர்ரி" என்று பதில் வந்தது. சரின்னு படத்தை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். அப்படி ஒரு படத்தை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.
ப‌ட‌த்தின் ஹைலைட்ஸ்:

1. ஹீரோ ஹீரோயினை செயின் ப‌றிக்கும் திருட‌ர்க‌ளிட‌மிருந்து காப்பாற்றுகிறார். ஆனால் செயினை அவ‌ரால் காப்பாற்ற‌ முடிய‌வில்லை:) அத‌னால் த‌ன் க‌ழுத்தில் இருந்த செயினை கழ‌ற்றி கொடுத்து "நீங்க‌ பாடின‌ பாட்டை பார்த்தேன். மிக‌வும் அருமை(அதுதாங்க‌ அன்த‌ முத‌ல் துதிப்பாட‌ல்). அதுக்கு ப‌ரிசா இந்த செயினை வெச்சுகோங்க‌" என்று கொடுக்க‌, அத‌ற்கும் ஹீரோயின் வெட்க‌ப்ப‌ட்டு காத‌லிக்க‌ ஆர‌ம்பிக்கிறார்.

2.ஹீரோ ஒரு ஆட்டோமொபைல் இஞ்சினிய‌ராம். இதை எப்ப‌டி காண்பித்திருப்பார்க‌ள் என்கிறீர்க‌ள்? அவ‌ர் கையில் ஒரு ஆல்ப‌ம் இருக்கும். சின்ன‌ பிள்ளையில‌ நாம் ப‌ட‌ம் எல்லாம் ஒட்டி ஒரு நோட் வெச்சுருப்போமே அது போல‌! அந்த‌ நோட்ல‌ க்ரேயான்ல‌ ப‌ல‌ கார்க‌ளை வ‌ரைஞ்சு வெச்சுருப்பார். இப்ப‌டித்தான் ஆட்டோமொபைல் இஞ்ஜினியர்கள் வெச்சிருப்ப்பாங்க‌ளா? யாராவது சொல்லுங்க‌ளேன்.

3.ஹீரோயினோட‌ அப்பா ஒரு பெரிய‌ கார்ஷோரூம் ஓன‌ர். அங்க‌ ஹீரோவை ஹீரோயின் கூட்டிட்டு போக‌, அவ‌ர் அந்த‌ ஹீரோயினோட‌ அப்பாகிட்ட‌ த‌ன்னோட‌ க்ரேயான் புக்கை காண்பிச்சு ஒரு புதுக்கார் த‌யாரிக்க‌ லோன் கேட்க‌ அவ‌ர் ம‌றுத்து விடுக்கிறார்.உட‌னே ஹீரோ அங்க‌ ஒட்டியிருந்த‌ ஒரு கார் போஸ்ட‌ரை காண்பிச்சு "இதையாவ‌து கொடுங்க‌ளேன் ப்ளீஸ்" என்று கெஞ்ச‌ "முடியாது போ"என்கிறார் அந்த‌ அப்பா அல்ப‌த்த‌ன‌மாக‌. உடனே அவ‌ர‌து பெண் ம‌றுநாளே திருடி கொண்டு வ‌ந்து ஹீரோவிட‌ம் கொடுக்க‌ காத‌ல் வ‌லுவ‌டைகிற‌து.

4.இப்ப‌டி செழித்து வ‌ள‌ரும் காத‌லுக்கு வில்லியாக‌ க‌ன‌டாவிலிருந்து வ‌ந்து குதிக்கிறார் ஹீரோவின் க‌ல்லூரிக்கால‌ காத‌லி.இவர் முகம் மட்டுமே படத்தில் பார்க்கும்படி இருந்தது. ஹீரோவுக்கு க‌ன‌டாவிலியே வேலை வாங்கி த‌ருவ‌தாக‌ அவ‌ர் சொல்ல‌ ம‌ன‌ம் த‌டுமாறுகிறார் ந‌ம் ஹீரோ(ப‌ட‌ம் முழுக்க‌ க‌ன‌டாவை க‌ன்ன‌டா என்றே சொல்லுவார்க‌ள்). கனடா காத‌லியுட‌ன் இவ‌ர் டூய‌ட் பாடுவ‌தை பார்த்து கோபித்து கொண்டு போய் விடுகிறார் லோக்க‌ல் காத‌லி. க‌டைசியில் யாரை ஹீரோ ம‌ண‌க்கிறார் என்ப‌து தான் க‌தை. அப்பாடா... சொல்லி முடிச்சுட்டேன்(உங்க‌ளுக்கும் ப‌டிச்சு முடிச்சுட்டேன்னு இருக்குமே?)

6. ப‌ட‌ம் முழுதும் ஹீரோவை முடிந்த‌வ‌ரை கேவ‌ல‌ப்ப‌டுத்தியிருப்பார்க‌ள் அந்த‌ இரு பெண்க‌ளும் டைர‌க்ட‌ரும். இருவ்ரிட‌மும் "ப்ளீஸ் நான் உன்னையே க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிறேனே" என்று அவ‌ர் கெஞ்ச‌ "முடியாது போ" என்று லோக்க‌ல் காத‌லி ம‌றுத்து விட‌ 'போனால் போக‌ட்டும்' என்று ஏற்றுக்கொள்கிறார் க‌ன‌டா காத‌லி.

7. டூய‌ட்க‌ளில் பாவ‌ம் ஹீரோயின்க‌ள் த‌னியாக‌வே ஆடுகிறார்க‌ள்(?!) ம‌ர‌த்தை சுற்றி சுற்றி குரோட்ட‌ன் செடிக‌ளின் ந‌டுவே புகுந்து ஆடும் பாட‌ல் காட்சிக‌ளை யாருமே ச‌மீப‌த்திய‌ ப‌ட‌ங்க‌ளில் பார்த்திருக்க‌வே முடியா‌து. அத்த‌னை புதுமை. ஹீரோவின் டான்ஸ் அதிலும் புதுமை. தோளை ம‌ட்டுமே குலுக்கி ஏதோ ட்ரை ப‌ண்ணியிருக்கார். முக‌த்தில் கொஞ்ச‌மாவ‌து ஒரு எக்ஸ்பிர‌ஷ‌ன் இருக்க‌ணுமே... ம்ஹூம். சோக‌ம், அழுகை, காத‌ல், சிரிப்பு எல்லாத்துக்கும் ஒரே மாதிரி பார‌ப‌ட்ச‌மின்றி முக‌த்தை வெச்சுருப்பார்.


8.படத்தின் பெயர் தான் இதில் உச்சப்பட்ச காமெடியே. "யாருக்கு யாரோ? ஸ்டெப்னி". இதற்கு க்ளைமாக்ஸில் ஒரு விளக்கம் வேறு. "அது ஸ்டெப்னி அல்ல ஸ்டெப்பு நீ" என்று. உஸ்ஸ்ஸ்... அப்பா..

நான் ம‌ட்டும் இந்த‌ ப‌ட்த்தை பார்த்து ர‌சித்த‌து போதாது என்று என்று, என் தோழிக்கு வேறு மெசேஜ் அனுப்ப‌, பாவ‌ம்... அவ‌ளும் என் கொடுமையால் இன்த‌ ப‌ட‌த்தை பார்த்தாள். ப‌ட‌த்திற்கு ந‌டுவே திடீரென‌ என்னுட‌ன் இருந்த‌ ம‌ழ‌லை "அக்கா என்னால இந்த‌ ப‌ட‌த்தை பார்க்க‌ முடிய‌ல‌!சேன‌லை மாத்துங்க‌" என‌ மிர‌ட்டியும் பயனில்லாமல் போக‌வே எழுந்து டிவியை ஆஃப் செய்து விட்டு போய் விட்டாள். ஆனாலும் நாங்க‌ ம‌றுப‌டி ஆன் ப‌ண்ணி ப‌ட‌த்தை பார்த்தோமில்ல‌...


ப‌ட‌த்தின் முடிவில் நான் புரிந்து கொண்ட‌து...

1. ஜே.கே.ரித்தீஷூம் டி.ராஜேன்த‌ரும் மிக‌ ந‌ல்ல‌ ந‌டிக‌ர்க‌ள். இனி யாரும் அவ‌ர்க‌ளை கிண்ட‌ல் செய்ய‌க்கூடாது, ஆமா... சொல்லிட்டேன்.

2.ராம‌ராஜ‌ன் அப்ப‌டி ஒன்றும் மோச‌ம்மான‌ ட்ரெஸ்ஸிங்க் சென்ஸ் உடைய‌வ‌ர் அல்ல‌. என்ன அழ‌காய் டிரெஸ் ப‌ண்ணுவார் அவ‌ர்.

3.இனி ஃப்ரெண்ட்ஸ் சொல்றாங்க‌ன்னு ந‌ம்ம்ம்பி எந்த‌‌ ப‌ட‌த்தையும் பார்க்க‌ கூடா‌து

Monday, July 13, 2009

சுவாசத்தேடல்கள்
நின்று, நடந்து, சிரித்து, பேசி விடைக்கொடுத்த(?!) இடங்களை காணும்போது
உன் இதமான நினைவுகள் மனதில்
அலைமோதுகின்றன...
ஏனோ இப்போது அவற்றில் இதம் குறைந்து நெஞ்சை அழுத்தி
தொண்டையை அடைக்கின்றன...
எங்கோ உன் தொலைந்த அடையாளங்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்...
அவை தொலைந்தவையா அல்லது உடைந்தவையா என
தெரியாமலேயே...
காதல் கண்ணாடி உடைகையில் நினைவுப்பிம்பங்கள்
சிதறினாலும் அவை அழிவதேயில்லை...
உன் காதல் மனதை அழுத்தி உயிரை எடுக்கும் முயற்சிகளால்,
ஏனோ மரண நினைவுகள் மனதில் எட்டிப்பார்க்கின்றன
அவ்வப்போது...
ஒரு வேளை அம்முயற்சிகள் வெல்லக்கூடும்...
வென்றாலென்ன...?
என்னை உயிர்ப்பிக்க உன் மூச்சு எந்த நொடியும்,
காற்றில் கலந்து என் நாசி தேடி வரும் என,
இப்போதிலிருந்தே தேடிக்கொண்டிருக்கிறேன்...
முகத்தில் மோதும் காற்றில் உன் சுவாசத்தை,
என் நுரையீரல்கள் வலிக்க....

நவீனுக்கு திருமண நல்வாழ்த்துக்கள்வலைப்பதிவர் நண்பர் நவீன் பிரகாஷிற்கு கடந்த‌ ஜுலை 10ஆம் தேதி திருமணம். நவீன் ஜி தெவிட்டாத காதல் கவிதைகள் படைப்பதில் வல்லவர் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அவரது காதல் வாழ்வு சிறப்புற வாழ்த்துவோம்:)))... வாழ்த்துக்கள் நவீன். இனி இன்னும் சிறப்பான காதல் வழியும்(;) )கவிதைகளை வெகு சீக்கிரம் எதிர்ப்பார்க்கிறோம்.