Monday, December 15, 2008

மாலை மலரும் இந்நோய்....





காதினோர‌ம் உன் குரல் கேட்கையில் செவிமடல்கள் மலர்ந்துப் போகும்…

மெல்லியதாய் விழும் வார்த்தைகளில் என் நிலை மறந்துப்போகும்…

செவி சுமக்கும் முத்த சப்தங்கள் காற்றில் தடங்களற்று கரைந்து போகும்…

நிதர்சனப்பரிமாணம் உணரா கணங்கள் அழகான‌ கற்பனைகளில் கனன்றுப்போகும்...

உன் செல்லப்பெயர் அழைப்புகளில் தொட்டில் குழந்தையாய் மனம் தவழ்ந்துப்போகும்…

மறுதினம் முழுமையும் இதழ்கள் ஒளித்துகொண்ட புன்னகையுடன் மந்தகாசமாய் ஒளிரும்...

காதலின் செங்கோலில் கனவுகள் களமிறங்கி நம்மில் ஆதிக்கம் செலுத்த‌…

என் பொய்யான மறுப்புகளை மறைக்காமல் வெளிப்படுத்தித்தொலைக்கும் இந்த காதலுடனான‌ போராட்டம் தொடர...

கனவுகள் விரிந்து விரிந்து விடியலுக்குப்பின்னும் விழித்தங்கி...

ரகசியங்கள் பேசி பேசி தொலைந்து போகும் பல இரவுகளில்,

சிற்றின்பம் சிற்சில சமயங்களில் செவிவழியும் நுகரப்படுகிறது செல்போன்களில்...

4 comments:

  1. //செவி சுமக்கும் முத்த சப்தங்கள் காற்றில் தடங்களற்று கரைந்து போகும்…//

    //சிற்றின்பம் சிற்சில சமயங்களில் செவிவழியும் நுகரப்படுகிறது செல்போன்களில்...//

    உண்மை சொல்லும் அழகான வரிகள்...

    ReplyDelete
  2. //கனவுகள் விரிந்து விரிந்து விடியலுக்குப்பின்னும் விழித்தங்கி...

    ரகசியங்கள் பேசி பேசி தொலைந்து போகும் பல இரவுகளில்,

    சிற்றின்பம் சிற்சில சமயங்களில் செவிவழியும் நுகரப்படுகிறது செல்போன்களில்... //


    மிக அழகான உணர்வுகளை மேலும் அழகாக்குகின்றன உங்கள் வரிகள்....
    மிகவும் ரசித்தேன்.... :)))

    ReplyDelete
  3. புதியவன் said..
    //செவி சுமக்கும் முத்த சப்தங்கள் காற்றில் தடங்களற்று கரைந்து போகும்…//

    //சிற்றின்பம் சிற்சில சமயங்களில் செவிவழியும் நுகரப்படுகிறது செல்போன்களில்...//

    உண்மை சொல்லும் அழகான வரிகள்...

    ரீனா said...
    //நன்றி புதியவன்... உண்மை சில சமயங்களில் இனிப்பாகவும் இருக்கிறது:))))//

    ReplyDelete
  4. நவீன் ப்ரகாஷ் said...
    //மிக அழகான உணர்வுகளை மேலும் அழகாக்குகின்றன உங்கள் வரிகள்....
    மிகவும் ரசித்தேன்.... :)))//


    ரீனா said...
    //நன்றி நவீன் ப்ரகாஷ்... :))))//

    ReplyDelete