Wednesday, March 2, 2011

தபு சங்கர்கள் ஜாக்கிரதை!!!



நம் காதல் சொல்ல
புதுமொழியாய்
உன் புன்னகையும்,
என் கையெழுத்தும்!!




அபூர்வமாய் சில நாட்கள்
நீ சீக்கிரமே துயில் கொள்வாய்
நான் இரவெல்லாம்
வெயில் கொள்வேன்!



உன் மிரட்டல்களுக்கெல்லாம்
பயந்தவனில்லை;
அதட்டல்தான் கொஞ்சம்
அசைத்து பார்க்கிறது!



வேறெவரும் தங்குவதற்கில்லை;
ஊராரும் பெறுவதற்கில்லை;
எனக்கே எனக்காய்
நீ!!!!





மெல்ல சிரிக்கிறாயா,
சோம்பல் முறிக்கிறாயா,
தெரியவில்லை;
இங்கு புரையேறித் துடிக்கிறது
காதல்!

19 கனவில் வந்தவர்கள்:

# கவிதை வீதி # சௌந்தர் said...

கவிதையாலே மிரட்டல்..
பயமாயிருக்கிறது எனக்கு..
உங்களுக்கு என்னவாகபோகிறதோ என்று..

வாழ்த்துக்கள்..

நட்புடன் ஜமால் said...

இங்கு புரையேறித் துடிக்கிறது காதல்!

nice words ...

சி.பி.செந்தில்குமார் said...

>>>அபூர்வமாய் சில நாட்கள்
நீ சீக்கிரமே துயில் கொள்வாய்
நான் இரவெல்லாம்
வெயில் கொள்வேன்!


ம் ம் ஜெயிச்சுட்டீங்க

reena said...

இதை எழுதினது என் கணவர்ங்க.. அதனால தான் அப்படி ஒரு தலைப்பு... நன்றிங்க செளந்தர்

reena said...

நன்றி ஜமால் :)நலமா?

reena said...

சி.பி.செந்தில்குமார் said...
//அபூர்வமாய் சில நாட்கள்
நீ சீக்கிரமே துயில் கொள்வாய்
நான் இரவெல்லாம்
வெயில் கொள்வேன்!//

நான் உங்க ப்ளாக்கை ரெகுலரா படிச்சுட்டு இருப்பேங்க.. விமர்சனங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு.

சி.கருணாகரசு said...

கடைசி கவிதை மிக நல்லாயிருக்கு.... பாராட்டுக்கள்.

reena said...

நன்றிங்க கருணாகரசு

பிரியமுடன் பிரபு said...

Nice

தமிழ் அமுதன் said...

அருமை..!

☀நான் ஆதவன்☀ said...

நல்லாயிருக்குங்க.

//இதை எழுதினது என் கணவர்ங்க.. அதனால தான் அப்படி ஒரு தலைப்பு.//

:)

reena said...

நன்றி பிரபு, ஜீவன் சார் மற்றும் ஆதவன் :))

asiya omar said...

நல்லாயிருக்கு கவிதையும் ஜோதிகாவின் படங்களும்.எனக்கும் ஜோதிகாவை மிகவும் பிடிக்கும்.

மாணவன் said...

கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்போல அந்தளவிற்கு சிறப்பான வரிகளுடன் அழகான கவிதை....

வாழ்த்துக்கள் :)

மாணவன் said...

//உன் மிரட்டல்களுக்கெல்லாம்
பயந்தவனில்லை;
அதட்டல்தான் கொஞ்சம்
அசைத்து பார்க்கிறது!//

சூப்பர்... :)

revathy rkrishnan said...

@asiya omar நன்றி மேடம்

நன்றி மாணவன். நல்ல ப்ரொபைல் பெயர்

அரசன் said...

அனைத்தும் அருமைங்க

reena said...

நன்றி அரசன்

Mathu said...

அனைத்தும் அருமை

Post a Comment