Saturday, March 21, 2009

மடி சுமந்த மரணம்




என் பத்து மாதக்கனவு பலித்தது...
ரோஜாக்குவியலாய் தொட்டிலில் மலர்ந்தாய்...
உன் அழுகுரல் அமுதமாய் ஒலித்த போது,
என் பிரசவ அலறல்கள் மறந்து போயின...
உன்னை ஸ்பரிசித்து உணர்கையில் மோட்சம் பெற்றன என் கைவிரல்கள்...
நான் கனவுலகில் சஞ்சரிக்க தொடங்கினேன்...
'அம்மா' என்று என்னை எப்பொழுது அழைப்பாய்?
என் விரல் பிடித்து எப்போது நடை பழகுவாய்?
சிற்றாடை இடை உடுத்தி, பூச்சரம் வைத்து,
நெற்றி பொட்டிட்டு வளையல்கள் குலுங்க‌
சிறுமியாய் நீ வளர்ந்திடும் அழகு...
நினைக்கவே நெஞ்சம் இனிக்கின்றது என் கண்ணே!!!
நான் நினைவு திரும்புவ‌தற்குள் உனக்கு நாள் குறித்து விட்டனர்...
மனம் இருப்பின் மட்டுமே மனிதர்கள் என அறியப்படுவர்...
இவர்கள் ‌மனித உருவில் நடமாடும் மிருகங்கள்...
தாய்ப்பால் கள்ளிப்பால் ஆகிறது...
உயிர் கொடுத்த‌வ‌ன் உன‌க்கு எம‌னாய்...
கால‌ன் இப்போதெல்லாம் எருமையில் மட்டுமே வருவதில்லை...
இந்த வெளிச்ச உலகிற்கு நீ வந்திருக்கவே வேண்டாம்... என்
இருட்டான கருவறையே உனக்கு பாதுகாப்பு....

31 comments:

  1. மடி சுமந்த மரணம்

    மணம் முழுவதும் ரணம் ...

    ReplyDelete
  2. ///இந்த வெளிச்ச உலகிற்கு நீ வந்திருக்கவே வேண்டாம்... என்
    இருட்டான கருவறையே உனக்கு பாதுகாப்பு....///

    வெளிச்சம் காட்டிய வரிகள்

    ReplyDelete
  3. Good one....

    காலம் மாறுது, காட்சிகளும் மாறுது!

    ReplyDelete
  4. என் பின்னூட்டத்தின் மூலமாக உங்கள் பதிவை எட்டிப்பார்க்க நேர்ந்தது!! உங்கள் வலை முகவரியே அழகாக இருக்கிறது!

    நீங்கள் நன்றாக கவிதை எழுதுகிறீர்கள். இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை மடக்கி ஒடுக்கி எழுதினால் சரியாக இருக்கும்.. இது என் தனிப்பட்ட கருத்து!!!

    உங்களிடம் கருக்கள் நிறைய இருக்குமென்று தெரிகிறது!!! சில கவிதைகளைப் படித்த பொழுதில் தெரிகிறது!!! தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  5. என் இருட்டான கருவறையே உனக்குப் பாதுகாப்பு....

    என்ன அற்புதமான வரி இது........... புத்திர சோகத்தை என்ன அருமையாய்க் கூறியுள்ளீர்கள்

    ReplyDelete
  6. /* உன் அழுகுரல் அமுதமாய் ஒலித்த போது,
    என் பிரசவ அலறல்கள் மறந்து போயின...
    உன்னை ஸ்பரிசித்து உணர்கையில் மோட்சம் பெற்றன என் கைவிரல்கள்...*/ intha varigal thaaimaiyai matrum oru tayin vethanayatum azhagaga veli paduthu kintdrathu.. ungalin kavithaiku enathu nal vazthukal..

    ReplyDelete
  7. /* உன் அழுகுரல் அமுதமாய் ஒலித்த போது,
    என் பிரசவ அலறல்கள் மறந்து போயின...
    உன்னை ஸ்பரிசித்து உணர்கையில் மோட்சம் பெற்றன என் கைவிரல்கள்...*/ intha varigal thaaimaiyai matrum oru tayin vethanayatum azhagaga veli paduthu kintdrathu.. ungalin kavithaiku enathu nal vazthukal..

    ReplyDelete
  8. wow... this is simply awesome man!! toooo good!

    //கால‌ன் இப்போதெல்லாம் எருமையில் மட்டுமே வருவதில்லை..//

    நெத்தியடி!

    ReplyDelete
  9. ///இந்த வெளிச்ச உலகிற்கு நீ வந்திருக்கவே வேண்டாம்... என்
    இருட்டான கருவறையே உனக்கு பாதுகாப்பு....///


    ஆழமான வரிகள்

    ReplyDelete
  10. கவிதை முழுதும் அழகு...
    குறிப்பாக கீழ்க்காணும் வரிகளை மிகவும் ரசித்தேன்

    //உன்னை ஸ்பரிசித்து உணர்கையில்
    மோட்சம் பெற்றன என் கைவிரல்கள்...//

    //கால‌ன் இப்போதெல்லாம்
    எருமையில் மட்டுமே வருவதில்லை...
    இந்த வெளிச்ச உலகிற்கு
    நீ வந்திருக்கவே வேண்டாம்...
    என் இருட்டான கருவறையே
    உனக்கு பாதுகாப்பு....//

    நண்பர் ஆதவன் சொன்ன கருத்துக்களை நானும் சொல்லிக்கொள்கிறேன்...

    //நீங்கள் நன்றாக கவிதை எழுதுகிறீர்கள். இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை மடக்கி ஒடுக்கி எழுதினால் சரியாக இருக்கும்.. இது என் தனிப்பட்ட கருத்து!!!//

    தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள் ரீனா...

    ReplyDelete
  11. ஹேய் ரீனா... தலைப்பிலேயே இவ்வளவு வரிகளும் அடங்கிவிட்டது...!!
    திறமை அருமை..!! :))

    ReplyDelete
  12. //இவர்கள் ‌மனித உருவில் நடமாடும் மிருகங்கள்...தாய்ப்பால் கள்ளிப்பால் ஆகிறது...உயிர் கொடுத்த‌வ‌ன் உன‌க்கு எம‌னாய்...கால‌ன் இப்போதெல்லாம் எருமையில் மட்டுமே வருவதில்லை...//

    சுட்டன வரிகள்...!!

    ReplyDelete
  13. நட்புடன் ஜமால் said...
    மடி சுமந்த மரணம்

    மணம் முழுவதும் ரணம் ...

    ரீனா siad...
    அப்படியா ஜமால்?:((((( வருகைக்கு நன்றி:))))

    ReplyDelete
  14. ///ஆ.ஞானசேகரன் said...
    இந்த வெளிச்ச உலகிற்கு நீ வந்திருக்கவே வேண்டாம்... என்
    இருட்டான கருவறையே உனக்கு பாதுகாப்பு...

    வெளிச்சம் காட்டிய வரிகள்///

    ரீனா said...
    வாங்க ஞானசேகரன்... தங்கள் முதல் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது... தொடந்து வாருங்கள்...

    ReplyDelete
  15. நாகை சிவா said...
    Good one....

    காலம் மாறுது, காட்சிகளும் மாறுது!

    ரீனா SAID...
    //உண்மை தான் சிவா... காட்சிகள் சில இடங்களில் இன்னும் மாறாமலிருப்பது தான் வேதனை அளிக்கிறது. தங்கள் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி. இந்த முறை புன்னகைக்கவில்லை?!!!;P //

    ReplyDelete
  16. ஆதவா said...

    //என் பின்னூட்டத்தின் மூலமாக உங்கள் பதிவை எட்டிப்பார்க்க நேர்ந்தது!! உங்கள் வலை முகவரியே அழகாக இருக்கிறது!//

    ரீனா said...

    //வாருங்கள் ஆதவா! தங்கள் முதல் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வலைப்பெயர் அழகாக இருக்கிறதா? நன்றி:)))//

    ReplyDelete
  17. ஆதவா said...
    நீங்கள் நன்றாக கவிதை எழுதுகிறீர்கள். இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை மடக்கி ஒடுக்கி எழுதினால் சரியாக இருக்கும்.. இது என் தனிப்பட்ட கருத்து!!!

    ரீனா
    ///அப்படியா ஆதவா?நிச்சயம் முயற்சிக்கிறேன்... ஆனாலும் உங்க கவிதை அளவுக்கு... கஷ்டம் தான்:)))///


    ஆதவா said...

    உங்களிடம் கருக்கள் நிறைய இருக்குமென்று தெரிகிறது!!! சில கவிதைகளைப் படித்த பொழுதில் தெரிகிறது!!! தொடர்ந்து எழுதுங்கள்

    ரீனா said...
    //கண்டிப்பாக... அதற்கு தங்கள் உற்சாகம் இப்போது போல் எப்போதும் தேவை//

    ReplyDelete
  18. nila said...
    //என் இருட்டான கருவறையே உனக்குப் பாதுகாப்பு....

    என்ன அற்புதமான வரி இது........... புத்திர சோகத்தை என்ன அருமையாய்க் கூறியுள்ளீர்கள்//

    ரீனா said...
    அப்படியா நிலா? ம்ம்ம்... இந்த வலைப்பூவில் நிலா முதல்முறை கால் பதித்தமைக்கு மிக்க நன்றி... அடிக்கடி வந்து வெளிச்சம் காட்டுங்க‌...

    ReplyDelete
  19. Thamizhmaangani said...
    wow... this is simply awesome man!! toooo good!

    //கால‌ன் இப்போதெல்லாம் எருமையில் மட்டுமே வருவதில்லை..//

    நெத்தியடி!

    ரீனா said...
    ஹாய் காயத்ரி... நெத்தியடியா? நன்றி... நீங்க வந்தது ரொமப சந்தோஷமா இருக்கு

    ReplyDelete
  20. பிரியமுடன் பிரபு said...
    ///இந்த வெளிச்ச உலகிற்கு நீ வந்திருக்கவே வேண்டாம்... என்
    இருட்டான கருவறையே உனக்கு பாதுகாப்பு....///


    ஆழமான வரிகள்


    ரீனா said...
    நன்றி பிரபு தங்களுடைய கவிதை தாக்கம் இன்னும் இருக்கிறது மனதில்...

    ReplyDelete
  21. புதியவன் said...
    கவிதை முழுதும் அழகு...
    குறிப்பாக கீழ்க்காணும் வரிகளை மிகவும் ரசித்தேன் கீழ்க்காணும் வரிகளை மிகவும் ரசித்தேன்

    ரீனா SAID...
    /// வாங்க புதியவன்... இந்த வரிகளை மிகவும் ரசித்தீர்களா? சந்தோஷமா இருக்குங்க... தங்கள் கருத்து noted... கவிதைகளின் வார்த்தை அமைப்பு திறனை இன்னும் மேம்படுத்த முயற்சிக்கிறேன். again... உங்க லெவலுக்கு வர்ரது கஷ்டம்தான்:))///

    ReplyDelete
  22. நவீன் ப்ரகாஷ் said...
    ஹேய் ரீனா... தலைப்பிலேயே இவ்வளவு வரிகளும் அடங்கிவிட்டது...!!
    திறமை அருமை..!! :))

    ரீனா said...
    ஹாய் நவீன் ஜி... திறமை அருமையா???? நன்றி கவிஞரே!

    நவீன் ப்ரகாஷ் said...
    //இவர்கள் ‌மனித உருவில் நடமாடும் மிருகங்கள்...தாய்ப்பால் கள்ளிப்பால் ஆகிறது...உயிர் கொடுத்த‌வ‌ன் உன‌க்கு எம‌னாய்...கால‌ன் இப்போதெல்லாம் எருமையில் மட்டுமே வருவதில்லை...//

    சுட்டன வரிகள்...!!

    ரீனா said....
    தங்களுக்கு என் செலவில் burnoல்.. அனுப்புகிறேன்... சும்மா ஜோக்கு, கோவிச்சுக்காதிங்க நவீன்... தங்கள் வருகையும் தருகையும் அருமை... மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

    ReplyDelete
  23. ///உன் அழுகுரல் அமுதமாய் ஒலித்த போது,என் பிரசவ அலறல்கள் மறந்து போயின...///

    Alagana varigal reena...

    ReplyDelete
  24. ///உன்னை ஸ்பரிசித்து உணர்கையில் மோட்சம் பெற்றன என் கைவிரல்கள்...////

    Unarchi poorvamana sindhanai!!!

    Ungal kavi payanam thodara en vazhthukal...

    ReplyDelete
  25. //உன்னை ஸ்பரிசித்து உணர்கையில்
    மோட்சம் பெற்றன என் கைவிரல்கள்...//

    அழகான வரிகள்....நெகிழ்ந்தது மனது.
    அன்புட்ன் அருணா

    ReplyDelete
  26. அன்புடன் அருணா said...
    //உன்னை ஸ்பரிசித்து உணர்கையில்
    மோட்சம் பெற்றன என் கைவிரல்கள்...//

    அழகான வரிகள்....நெகிழ்ந்தது மனது.
    அன்புட்ன் அருணா

    ரீனா SAID...
    வாங்க அருணா... தங்கள் ரசிப்புக்கும் அன்புக்கும் மிக்க நன்றி:)))

    ReplyDelete
  27. //Hari said...
    /* உன் அழுகுரல் அமுதமாய் ஒலித்த போது,
    என் பிரசவ அலறல்கள் மறந்து போயின...
    உன்னை ஸ்பரிசித்து உணர்கையில் மோட்சம் பெற்றன என் கைவிரல்கள்...*/ intha varigal thaaimaiyai matrum oru tayin vethanayatum azhagaga veli paduthu kintdrathu.. ungalin kavithaiku enathu nal vazthukal..///

    ரீனா SAID...
    தாய்மையின் வேதனை உணர்த்தியதா வரிகள்? மிக்க நன்றி ஹரி... தொடர்ந்து வரவும்

    ReplyDelete
  28. Kannan said...
    ///உன்னை ஸ்பரிசித்து உணர்கையில் மோட்சம் பெற்றன என் கைவிரல்கள்...////

    Unarchi poorvamana sindhanai!!!

    Ungal kavi payanam thodara en vazhthukal...

    ரீனா SAID...
    வாங்க கண்ணன் தங்கள் தொடர்ச்சியான வருகையும் அழகான தருகைகளும் மகிழ்ச்சி தருகின்றது

    ReplyDelete
  29. :((( இன்னமும் இந்த கொடும நடந்துட்டுத்தான் இருக்குதுன்னு நெனக்கும்போது கஷ்டமாத்தான் இருக்குது...

    இதே கருத்துல நான் முன்ன போட்ட கவிதை...
    http://veyililmazai.blogspot.com/2008/05/blog-post_19.html

    ReplyDelete
  30. மனம் முழுவதும் கணம் ரணமாக

    அன்புடன்
    கருணா கார்த்திகேயன்

    ReplyDelete
  31. //இந்த முறை புன்னகைக்கவில்லை?!!!;P //

    :))))

    உங்க ஆசைய ஏன் கெடுப்பானே ;)

    ReplyDelete