Tuesday, March 31, 2009

வானரம் ஆயிரம்



நீங்க யாராவது எக்ஸாம்ல பிட் அடிக்கிறது, copy அடிக்கிறது போன்ற சாதனைகளை பண்ணியிருக்கீங்களா? அப்படி பண்ணியிருந்தீங்கன்னா நிஜமாவே அது பெரிய வீரசாகசம் தாங்க... எவ்வளவு தில்லு வேணும் இதெல்லாம் பண்றதுக்குனு நான் புரிஞ்சுக்கிட்டது 7வது படிக்கும் போது...
நான் சின்ன வயசுலருருந்தே நல்லா படிக்கிற பொண்ணு. எப்பவுமே 1st ரேங்க் தான்(அட உண்மையாத்தான்ப்பா...)இப்படி போட்டியே இல்லாம 7வது வகுப்பு வரைக்கும் வந்துட்டோம். அப்போ தான் என் கிளாசுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்தா 'காயத்ரி'னு... வந்தவ ஃபர்ஸ்ட் ரேங்க்கை தட்டி பறிச்சுட எனக்கு ஒரே கடுப்பாயிடுச்சு.
எப்படியும் அடுத்து குவாட்டர்லி எக்ஸாம்ல நாம தான் 1st ரேங்க் எடுக்கணும்னு மும்முரமா களத்தில் இறங்கினேன். நான் அப்போ எங்க ஸ்கூல்லயே ப்ரைவேட்டா கம்ப்யூட்டர் கிளாஸ் போயிட்டிருந்தேன்.(வீட்ல என்னிக்கு நம்மை நிம்மதியா விட்டிருக்காங்க?) அந்த கம்ப்யூட்டர் லேப்லதான் எங்க ஸ்கூல் எக்ஸாமுக்கான கேள்வித்தாள்கள் எல்லாம் தயாராகும் போலிருக்கு.பரீட்சை ஆரம்பிப்பதற்கு முதல் நாள் எப்பவும் போல நானும் என் ஃப்ரெண்டும் கம்ப்யூட்டர் கிளாஸுக்கு போனோம். ரெண்டு பேரும் ஏதோ சின்சியரா பொட்டி தட்டிக்கிட்டு தான் இருக்கும் போது என் ஆருயிர் தோழி சும்மா இருக்காம கீழே இருந்த குப்பைத்தொட்டிய வெறிச்சு பார்த்துட்டு இருந்தவ, "இதென்னடி கார்பன் காபி மாதிரி இருக்கு" என அதிலிருந்து எதையோ எடுத்தாள்.ரெண்டு பேரும் அதென்ன என்கிற ஆராய்ச்சியில் இறங்கினோம்.(நாமதான் அப்பவே சயின்டிஸ்டுல!) அப்போதான் தெரிஞ்சுது அது எங்க எக்ஸாம் கொவஸ்டின் பேப்பர்ஸ் டைப் பண்ண யூஸ் பண்ணின கார்பன் காப்பினு... கைல மாட்டினதும் 7ஆம் கிளாஸ் பேப்பர். அப்படியே ரெண்டு குப்பைத்தொட்டிய கிளற, எல்லா சப்ஜெக்ட் பேப்பர்சும் சிக்கிடுச்சு...



எல்லாத்தையும் எடுத்துக்கிட்ட சந்தோஷத்துல தலைகால் புரியல எங்களுக்கு! குவாட்டர்லி எக்ஸாம்ல நான் 1st ரேங்கும் காயத்ரி 2nd ரேங்கும் வாங்கற அற்புத காட்சி அப்படியே கண் முன்னாடி விரியுது!குதூகலமா ரெண்டு பேரும் ட்யூஷன் வந்து சேர்ந்தோம்.(வீட்ல என்னிக்கு நம்மை நிம்மதியா விட்டிருக்காங்க?... ரிப்பீட்டு)
அங்கயும் போய் இதப்பத்திதான் சீரியஸ் டிஸ்கஷன். "என்ன அங்க பேச்சு" என்று அதட்டிய டீச்சரிடம், "ஒண்ணுமில்ல மிஸ்" என்று சொல்லி படிக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டே டிஸ்கஸ் பண்ணதுல ஒரு மாஸ்டர் பிளான் உருவாயிடுச்சு. நாங்க எவ்ளோ இரகசியமா பேசியும் எங்க கிளாஸ்மேட் ஒருத்தி பக்கத்தில் உட்கார்ந்திருந்தவ இந்த விஷயதை ஒட்டு கேட்டுருக்கா."எனக்கும் கொவஸ்டின் பேப்பர்ஸை காமிக்கணும். இல்லனா மாட்டி விடுவேன் மிஸ்கிட்ட" அப்படினு மிரட்ட ஆரம்பிசுட்டா(என்னா வில்லத்தனம்?) சரின்னு அவளையும் சேர்த்துக்கிட்டோம். ட்யூஷன் முடிஞ்சதும் எங்க வீட்டுக்கு வந்து ஒளிச்சு வெச்சுருந்த பேப்பர்ஸை எடுத்து ஆசையா பார்த்தோம். அப்போதான் கார்பன் பேப்பர்ல இருந்து எப்படி படிக்கிறதுனு டவுட்டு வந்துச்சு எங்களுக்கு."அதை xerox... எடுத்துடலாமா" என்று 3வது கூட்டாளி கேட்க "இது கருப்பா இருக்கே, ஜெராக்ஸ்ல வருமா?" என்று நான் கேட்க, "கடைக்காரனையே கேட்டு பார்ப்போம்?"னு மூணு பேரும் ஜெராக்ஸ் கடைக்கு போனோம்.



அங்க இருந்தவர் கிட்ட ஸ்டைலா தலைவி(நாந்தாங்க:)) கார்பன் பேப்பர்களை நீட்டி "இதெல்லாம் 3,3 காப்பி ஜெராக்ஸ் எடுக்கணும்"னு சொன்னேன். அந்த கடைக்காரர் ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துட்டு, அதுல ஒரு பேப்பர எடுத்து ஒரு வெள்ளை பேப்பர்ல வெச்சு அது கொவஸ்டின் பேப்பர்"னு கண்டுபிடிச்சுட்டார். அதுல வேற தெளிவா ஸ்கூல் பேரு, என்ன கிளாஸுனு போட்டு இருந்தது."எப்படி இது உங்களுக்கு கிடைச்சுது" என அவர் கேட்க "ஜெராக்ஸ் எடுக்க முடியுமா முடியாதா" என்று எகத்தாளமாக தலைவி மீண்டும் கேட்டார். "கொஞ்சம் இருங்க! எடுத்து தர்றேன்" என்றவர் பக்கத்தில் இருந்த டெலிஃபோனை சுழற்றியது எங்க ஸ்கூல் பிரின்ஸிபாலுக்கு. அவர் பேசும் போது தான் எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சுது, அந்த கடையே எங்க பிரின்ஸியோடதுதான்(இவங்கல்லாம் நம்மகிட்ட சொல்லிட்டா சைடு பிஸினஸ் ஆரம்பிக்கிறாங்க)."அங்கிள் ப்ளீஸ் அங்கிள்! போனை வெச்சுடுங்க!நாங்க போயிடறோம்" என ஓடிப்போகாமல் அங்கயே நின்னு தலைவி கெஞ்சிட்டு இருக்கும் போதே என் ஆருயிர் தோழியும், 3வது கூட்டாளியும் ஓடிப்போயிட்டாங்க. பிரின்ஸியும் அங்கு வந்து சேர என்குவைரி செஷன் ஆரம்பமானது. "என் பேர், ஓடிப்போன கயவாளிகள் பேரு, எந்த கிளாஸ்"னு எல்லாத்தையும் மிரட்டலின் பேரில் தலைவி உளறி விட்டு பின் விடுவிக்கப்பட்டாள்





சோகமாய் நடந்து வந்த எனக்கு தெருமுனையில் பாவமான மூஞ்சியோட நின்னுட்டு இருந்த கயவாளிகளை பார்த்ததும் கோபம் கோபமாய் வந்த்து."என்னடி ஆச்சு"னு கேட்டவங்க கிட்ட "நம்ம பேரெல்லாம் எழுதுக்கிட்டாரு பிரின்ஸி"னு புள்ளைக ரொம்பவே பயந்து போயிட்டாங்க. "இப்போ என்ன பண்றது?" என கேட்டவர்களிடம் "பேசாம பிரின்ஸிகிட்ட இனி இப்படி பண்ணலனு மன்னிப்பு கேட்போமா?" என்று யோசனை சொன்னது தலைவிதான். 3பேரும் அங்க போனா கடை பூட்டியிருக்கு."பிரின்ஸி வீடு பக்கத்திலதான். அங்கயே போயிடுவோமா?"‍இப்போது யோசனை 3ஆம் கூட்டாளியிடமிருந்து. அப்பவே இரவு ஒன்பது மணி. சரின்னு மூணு பேரும் அங்க போய் நின்னா, எங்க பிரின்ஸி ஈஸி சேர்ல சாஞ்சுக்கிட்டு விசாரணையை முதல்ல இருந்து தொடங்கிட்டாரு அவங்க வீட்டு வராந்தாலேயே. அந்த பக்கமா எங்கயோ சைக்கிள்ல‌ போன ஆருயிர் தோழியோட தம்பி எங்களை அங்க பார்த்துட்டு போய் அவ வீட்ல சொல்லிட்டான். ஏற்கனவே எங்க மூணு பேரையும் காணோம்னு தேடிட்டு இருந்த எங்க குடும்பம் பிரின்ஸி வீட்ல அசெம்பிள் ஆயிடுச்சு."சார்!நான் எப்பவும் 1st ரேங்க் தான் எடுப்பேன் இனி இப்படில்லாம் பண்ண மாட்டேன்" என தலைவி அழுது கொண்டே சொல்ல, உடனே ஆருயிர் தோழி "நான் எப்பவுமே 2ND ரேங்க் தான் சார்" என்றாள். "நான் எப்பவுமே 3rd ரேங்க் தான் சார்" இது 3ஆம் கூட்டாளி(மேடம் மினிமம் 3 சப்ஜெக்க்ட்டாவது ஃபெயில் ஆவாங்க). இதை கேட்டுட்டு எங்க பிரின்ஸி எங்க யாரையுமே நம்பாம கேவலமே ஒரு லுக்கு விட்டுட்டு விசாரணையை தொடர்ந்தார். நைட் இன்னும் சாப்பிடாத்தால டயர்டாயி நாங்க கெஞ்சறத நிறுத்திட்டோம். 2 மணி நேரம்... கதற கதற எங்க வீட்டில இருக்குறவங்க கெஞ்சி கூத்தாடி "இனி இப்படிலாம் பசங்க பண்ண மாட்டாங்க! விஷயத்தை பெருசு பண்ண வேணாம்"னு சொல்லி வீட்டுக்கு கூட்டிட்டு வர நைட் 11 மணி ஆயிடுச்சு.வீட்டுக்கு வந்து தனியா ஒரு விசாரணை கமிஷன். தலைவி இப்போது தேம்பி தேம்பி விக்கி விக்கி அழுது கொண்டிருந்தார். " ஏன் அக்கா அழர"னு என் தம்பி கிட்ட வந்து கேட்க, "ஒண்ணுமில்லடா அந்த கார்பன் பேப்பர் எல்லாத்தையும் அவங்களே எடுத்துக்கிட்டாங்கடா" என்றவளை எங்கப்பா முறைச்சாரு பாருங்க! அதுக்கப்புறம் இந்த வீரசாகசம் பக்கமெல்லாம் போறதே இல்ல!....

பி.கு: மூன்று வானரங்கள் சேர்ந்து செய்த சேட்டை என்பதால் இந்த தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. மற்றப்படி இது யார் எதிர்பார்ப்பையும் புண்படுத்துவதற்கல்ல;)))


57 comments:

  1. மிகவும் சுவாரசியமான அனுபவம் தான்...

    //(இவங்கல்லாம் நம்மகிட்ட சொல்லிட்டா சைடு பிஸினஸ் ஆரம்பிக்கிறாங்க)//

    அடைப்புகுறிக்குள் கொடுத்திருப்பவை அனைத்தும்
    குறும்பின் உச்சம்...

    ReplyDelete
  2. புதியவன் said...

    //அடைப்புகுறிக்குள் கொடுத்திருப்பவை அனைத்தும்
    குறும்பின் உச்சம்...//

    மிக்க நன்றி புதியவன்:))))

    ReplyDelete
  3. சரியான வானரமா இருக்கும் போலிருக்கே

    ReplyDelete
  4. //நட்புடன் ஜமால் said...
    சரியான வானரமா இருக்கும் போலிருக்கே

    REENA said...

    மூணு வானரத்தில எந்த வானரத்தை சொல்றீங்க ஜமால்?

    ReplyDelete
  5. ஆயிரத்தில் மூனு தானே!

    ReplyDelete
  6. hahaha...காயத்ரிய எதிர்த்தா இப்படி தான் ஆகும்! :)

    //வீட்ல என்னிக்கு நம்மை நிம்மதியா விட்டிருக்காங்க?//

    ஹாஹா...ஐயோ பாவம். எல்லாரும் வீட்டுலயும் இதே கதை தானா?

    ReplyDelete
  7. :)))

    தப்ப தப்பு இல்லாம பண்ணனும் அப்ப தான் அது தப்பே இல்லனு ஆகும்.

    மைண்ட்ல வச்சுக்கோங்க... அடுத்த முறை வெற்றி உங்களுக்கே !

    ReplyDelete
  8. ஹா,,...நல்லா இருக்குங்க....

    பிடி அடிக்கக் கூட தெரியாம மாட்டிக்கிட்ட உங்களை எங்கள் பிட் அடிக்கும் அணியிலிருந்து விலக்கிவிடுகிறேன்.... ஹாஹா///

    நான் இதுவரையிலும் பிட் அடிச்சதே இல்லை!!! ஏன்னா...... நான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப நல்ல பையன்!!!! ஹி ஹி

    பள்ளிகால நினைவுகள்!!!!! வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. Oru murai seithalum athu veea sagasamae thalaivi :-)

    ReplyDelete
  10. Kannan said...
    Oru murai seithalum athu veea sagasamae thalaivi :-)

    ரீனா said...
    நன்றி கண்ணன்:)) இத வீரசாகசம்னு ஒத்துக்கிட்டதுக்கு...

    ReplyDelete
  11. ஆதவா said...
    ஹா,,...நல்லா இருக்குங்க....

    ரீனா said...
    நன்றி ஆதவா:))

    ஆதவா said...
    நான் இதுவரையிலும் பிட் அடிச்சதே இல்லை!!! ஏன்னா...... நான் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப நல்ல பையன்!!!! ஹி ஹி

    ரீனா said...
    நாங்க நம்பிட்டோம்... ஹிஹிஹி

    ReplyDelete
  12. நாகை சிவா said...
    :)))

    தப்ப தப்பு இல்லாம பண்ணனும் அப்ப தான் அது தப்பே இல்லனு ஆகும்.

    மைண்ட்ல வச்சுக்கோங்க... அடுத்த முறை வெற்றி உங்களுக்கே

    ரீனா said...
    சிவா... இந்த முறை கேட்காமலேயே புன்னகைத்து விட்டீர்கள். வெரி குட் பாய்:))))... தப்ப தப்பில்லாம பண்ண அப்போ எனக்கு ட்ரெய்னிங் பத்தல:( என்ன பண்றது? அடுத்த முறை உங்களிடம் ஆலோசனை கேட்டு செய்கிறேன்

    ReplyDelete
  13. Thamizhmaangani said...
    hahaha...காயத்ரிய எதிர்த்தா இப்படி தான் ஆகும்! :)

    ரீனா said
    :)))) காய‌த்ரி உங்க‌ள‌ எதிர்க்க‌ முடியுமா யாராவ‌து...?
    இந்த பேர யூஸ் பண்ணும் போதே உங்க ஞாபகம் வந்தது... ஹிஹி

    ReplyDelete
  14. பிட்டா நானெல்லாம் கோனார் நோட்ஸ வச்சே எழுதிருக்கேன்!

    நானும் பர்ஸ்ட் ரேங்க் தாங்க!

    ReplyDelete
  15. ha ha ha.......very gud experience and also one of the unforgettable moments too!!

    ReplyDelete
  16. தலைப்பே தவில் அடிக்குதே... :)))
    உங்களுக்கு வாலெல்லாம் இருக்குங்களா அம்மணி..? ;)))))

    ReplyDelete
  17. //நான் சின்ன வயசுலருருந்தே நல்லா படிக்கிற பொண்ணு. எப்பவுமே 1st ரேங்க் தான்//

    என்னைப் போல் ஒருத்தி...ஹீஹிஹிஹிஹி நெசமாத்தேன் ரீனா..?:))))

    ReplyDelete
  18. //எனக்கும் கொவஸ்டின் பேப்பர்ஸை காமிக்கணும். இல்லனா மாட்டி விடுவேன் மிஸ்கிட்ட" அப்படினு மிரட்ட ஆரம்பிசுட்டா(என்னா வில்லத்தனம்?) //

    அம்மணி...அங்கங்க இப்படி அடைப்புக்குறிகுள்ள இருகுற விமர்சனம் எல்லாம் ஜூப்பரா இருக்குங்கோ.... ;))))

    ReplyDelete
  19. ஏனுங்கம்மணி.... நீங்க எப்பவுமே ஃபர்ஸ்ட் ரேங்கே தான் எடுக்கனுமா..??? ஹீரோயினியாத்தேன் நடிப்பேன்னு அப்போ இருந்தே அடம்....!! ஏன் நீங்க இந்த் ஈரோயினிக்கு தோழியா எல்லாம் நடிக்க மாட்டீயளோ...!! :))))))

    ReplyDelete
  20. ரீனா கலக்கிப்புட்டீய.... சிரிச்சுகிட்டே இருக்கேன்....:)))))

    அப்பப்போ இன்னும் இதே மாதிரி பின்னிப் பெடலெடுங்க தாயி...!! :))))

    ReplyDelete
  21. ///
    நீங்க யாராவது எக்ஸாம்ல பிட் அடிக்கிறது, copy அடிக்கிறது போன்ற சாதனைகளை பண்ணியிருக்கீங்களா?
    ///

    யாரப்பாத்து என்ன கேள்வி கேட்டுபுட்டீங்க!!!!
    நாங்களெல்லாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    சரி சரி விடுங்க

    ReplyDelete
  22. ///
    எவ்வளவு தில்லு வேணும் இதெல்லாம் பண்றதுக்குனு
    ///

    அப்படியா?
    ?
    ?
    ?
    ?

    ReplyDelete
  23. ///
    நாமதான் அப்பவே சயின்டிஸ்டுல!
    ///


    ஹி ஹி ஹி

    ReplyDelete
  24. ///
    (என்னா வில்லத்தனம்?)
    ///

    அதுதானே
    என்னா வில்லத்தனம்?

    ReplyDelete
  25. ///
    இவங்கல்லாம் நம்மகிட்ட சொல்லிட்டா சைடு பிஸினஸ் ஆரம்பிக்கிறாங்க)."
    ///


    மாட்டுனுங்களா???/

    ReplyDelete
  26. கயவாளித்தனம் பன்னலாம் ஆனால் மாட்டக்கூடாது

    ReplyDelete
  27. Namaku epayume entha paritcha examu results na bayam.. but ethula bit adika muyarchita ungaluku enathu manamarntha paratukal!!

    "Bitadipathu matravaruku nanmai tarumenil

    Teemai ilatha seyal"

    ReplyDelete
  28. Namaku epayume entha paritcha examu results na bayam.. but ethula bit adika muyarchita ungaluku enathu manamarntha paratukal!!

    "Bitadipathu matravaruku nanmai tarumenil

    Teemai ilatha seyal"

    ReplyDelete
  29. Namaku intha paritcha, result, mark elam bayam ithula Bit adika muyarchita ungaluku enathu manamartha parathukal..

    bit patri thiruvalur kurugayil..

    "Bitadipathu matravaruku nanmai payakumanil

    Athuteemai elatha seyal"!!!

    ReplyDelete
  30. வால்பையன் said...
    பிட்டா நானெல்லாம் கோனார் நோட்ஸ வச்சே எழுதிருக்கேன்!

    நானும் பர்ஸ்ட் ரேங்க் தாங்க!

    ரீனா said...
    உங்க பேரை பார்த்தாலே தெரியுது;))

    ReplyDelete
  31. ஸ்ரீமதி said...
    Akka super.. :)))))))))))

    ரீனா said...
    நன்றி ஸ்ரீமதி

    ReplyDelete
  32. Sasirekha Ramachandran said...
    ha ha ha.......very gud experience and also one of the unforgettable moments too!!

    ரீனா said...
    நன்றி சசிரேகா... முதல் வருகையல்லவா இது? நன்றி நன்றி:))

    ReplyDelete
  33. சந்தனமுல்லை said...
    :-)))))) சுவாரசியம்!

    REENA said...
    நன்றி முல்ஸ்... இப்படி தானே உங்கள எல்லாரும் கூப்பிடுவாங்க‌

    ReplyDelete
  34. ஜொள்ளுப்பாண்டி said...
    //தலைப்பே தவில் அடிக்குதே... :)))
    உங்களுக்கு வாலெல்லாம் இருக்குங்களா அம்மணி..? ;)))))//

    இருக்கு இருக்கு சுருட்டி வெச்சுருக்கேன்... பாண்டி

    ReplyDelete
  35. ஜொள்ளுப்பாண்டி said...
    //நான் சின்ன வயசுலருருந்தே நல்லா படிக்கிற பொண்ணு. எப்பவுமே 1st ரேங்க் தான்//
    என்னைப் போல் ஒருத்தி...ஹீஹிஹிஹிஹி நெசமாத்தேன் ரீனா..?:))))


    ரீனா said...
    அந்த வான‌ர‌ங்க‌ள‌ விட‌ மோச‌மா இருப்பீங்க‌ போலிருக்கு... ஏன் பாண்டி இப்ப‌டி?

    ReplyDelete
  36. ஜொள்ளுப்பாண்டி said...
    //அம்மணி...அங்கங்க இப்படி அடைப்புக்குறிகுள்ள இருகுற விமர்சனம் எல்லாம் ஜூப்பரா இருக்குங்கோ.... ;))))

    ரீனா said...

    எல்லாம் த‌ங்க‌ள் ஆசிர்வாத‌ம் தான் ஜி... ந‌ன்றி

    ReplyDelete
  37. ஜொள்ளுப்பாண்டி said... ஏனுங்கம்மணி.... நீங்க எப்பவுமே ஃபர்ஸ்ட் ரேங்கே தான் எடுக்கனுமா..???

    ரீனா said...
    ஹீரோயினியாத்தேன் நடிப்பேன்னு அப்போ இருந்தே அடம்....!! ஏன் நீங்க இந்த் ஈரோயினிக்கு தோழியா எல்லாம் நடிக்க மாட்டீயளோ...!! :))))))


    ஹீரோயினியா ந‌டிக்கிர‌து எம்புட்டு க‌ஷ்ட‌ம் தெரியுமா? டான்ஸ் ஆட‌ணும், பாட்டு பாட‌னும், ட‌ப்பிங் கொடுக்க‌ணும், இந்த‌ ஹீரோ வில்ல‌ன் உங்க‌ள‌ மாதிரி காமெடிய‌ன் எல்லாத்தையும் ச‌மாளிக்க‌ணும்... இம்புட்டு சாக‌ச‌ம் பண்ண‌ணும் தெரிஞ்சுக்கோங்க‌

    ReplyDelete
  38. ♥ தூயா ♥ Thooya ♥ said...
    kikikiki

    REENA said...
    சிரிக்கிறிக்கீங்களா தூயா? :))) நன்றி

    ReplyDelete
  39. Hari said...
    Namaku epayume entha paritcha examu results na bayam.. but ethula bit adika muyarchita ungaluku enathu manamarntha paratukal!!

    "Bitadipathu matravaruku nanmai tarumenil

    Teemai ilatha seyal"

    REENA said...
    கலக்கலா குறள் எல்லாம் சொல்றீங்க ஹரி... நன்றி:))

    ReplyDelete
  40. பிரியமுடன் பிரபு said...
    ///
    எவ்வளவு தில்லு வேணும் இதெல்லாம் பண்றதுக்குனு
    ///

    அப்படியா?
    ?
    ?
    ?//

    REENA said...
    ஆமாங்க.. இப்படி மாட்டிக்கிட்டு திட்டு வாங்கவும் தில்லு வேணும்ல?

    ReplyDelete
  41. பிரியமுடன் பிரபு said..
    //நாமதான் அப்பவே சயின்டிஸ்டுல!
    ///


    ஹி ஹி ஹி
    //


    REENA said...
    உண்மைய சொன்னா நம்பாம என்ன சிரிப்பு? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு/

    ReplyDelete
  42. பிரியமுடன் பிரபு said..
    கயவாளித்தனம் பன்னலாம் ஆனால் மாட்டக்கூடாது
    REENA said...
    உண்மை தான்... என்ன செய்ய?:((

    ReplyDelete
  43. //
    நீங்க யாராவது எக்ஸாம்ல பிட் அடிக்கிறது, copy அடிக்கிறது போன்ற சாதனைகளை பண்ணியிருக்கீங்களா?
    //
    நல்ல அனுபவம்..
    ஆனா, சின்ன திருத்தம்.. நீங்க பண்ணுனது தில்லுமுல்லு..
    மேலும் பிட்டடிச்ச அனுபவத்த கீழ இருக்கற லிங்க்ல வந்து பாக்கலாம்..


    http://wettipedia.blogspot.com/2009/03/blog-post_24.html

    ReplyDelete
  44. 1st ரேங்க் எடுக்கற ஆளா இருந்து எங்கள் இனத்திலிருந்து வேறுபட்டாலும்ம்ம்.. பிராடுத்தனம் பண்ணிய செயலில் "எங்கள் இனமடா(டி) நீ.."

    ReplyDelete
  45. எங்க ஆளையே காணோம்???

    ReplyDelete
  46. நல்லா இருக்கு ரீனா

    // இவங்கல்லாம் நம்மகிட்ட சொல்லிட்டா சைடு பிஸினஸ் ஆரம்பிக்கிறாங்க)//

    :))))))))))))))

    ReplyDelete
  47. Chinna vayasule payangara KDya irukeenga :P

    ReplyDelete
  48. சுரேஷ் குமார் said...
    //1st ரேங்க் எடுக்கற ஆளா இருந்து எங்கள் இனத்திலிருந்து வேறுபட்டாலும்ம்ம்.. பிராடுத்தனம் பண்ணிய செயலில் "எங்கள் இனமடா(டி) நீ.."//

    நன்றி சுரேஷ்:))

    ReplyDelete
  49. Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
    :)
    ரீனா said...
    :)))

    ReplyDelete
  50. Karthik said...
    Chinna vayasule payangara KDya irukeenga :P
    ரீனா said...
    :))) எல்லாம் உங்களை மாதிரி தான்

    ReplyDelete
  51. அட நீங்க ஜோதிகா இரசிகையா???

    நானும்ங்க :))

    ReplyDelete
  52. //நான் ஆதவன் said...
    அட நீங்க ஜோதிகா இரசிகையா???

    நானும்ங்க :))//

    அட கேக்கவே சந்தோஷமா இருக்கு ஆதவன்

    ReplyDelete
  53. அட இவ்ளவு தானா.... நாங்கலாம் எவ்ளவு சேட்ட பண்ணிருகோம் !!!

    ReplyDelete