Thursday, April 22, 2010

உம்மேல ஆச தான் பார்ட் 2 திக்.. திக்... திக்....

முதல் பகுதியப் படிக்க கிளிக்குங்கள்

பார்ட் 2

"ச்சீ" என்று அலறியவாறே எழுந்து உட்கார்ந்தாள் தாரிணி. அறை மெல்லிய நீல இரவு விளக்கின் வெளிச்சத்துடன் அமைதியாய் இருந்தது. 'அடச்சே! என்ன கனவு இது?" என்று எண்ணியவாறே நெற்றியில் கை வைக்க லேசாய் வியர்த்திருந்தது. மீண்டும் படுத்து தூங்க முயற்சித்தும் தூங்கவே முடியவில்லை. வெகுநேரம் விழித்திருந்தவள் விடியற்காலை மெல்ல மெல்ல உறங்கிப்போனாள். எப்போதும் 6 மணிக்கு தானாக‌வே விழித்து விடுபவள் அன்று அவளது அத்தை பல தடவை எழுப்பிய பிறகே எழுந்தாள். "ஏன் தாரிணி, உடம்பு ஏதும் சரியில்லையா?" என்றபடியே "ஏண்டி என்னமோ போல இருக்கே? முகமெல்லாம் வீங்கினாப்போல இருக்கு? நைட் சரியா தூங்கலியா?" என்று பதறினார். "அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்தை! டயர்டா இருக்கு அவ்ளோதான்" என்றவாறு நகர முற்பட்ட போது தலை விண் விண்ணென்று வலிக்கத் தொடங்கியிருந்தது. ஒரு கப் காபி குடித்தால் தேவலையாயிருக்கும் என்று தோன்றவே, சமையலறைக்குள் நுழைந்த தாரிணியிடம் தயாராய் காபியை நீட்டினார் அத்தை. 'தேங்க்ஸ் அத்தே!" என்று அதை வாங்கிக் குடிக்கத் தொடங்கினாள். மனம் அந்த கனவையே சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது. இந்த கனவு ஏற்கனவே சில முறை வந்தது போலொரு உணர்வு.
தாரிணி த‌ஞ்சையில் பிற‌ன்து வ‌ள‌ர்ந்த‌வ‌ள். இன்ஜினிய‌ரிங்க் முடித்த‌துமே அதிர்ஷ்ட‌வ‌ச‌மாய் சென்னையின் முண்ண‌னி ஐ.டி நிறுவ‌ன‌மொன்றில் வேலை கிடைத்து விட சென்னை வ‌ந்து சேர்ந்தாள். இந்த அத்தை அப்பாவின் ஒன்று விட்ட ச‌கோத‌ரி. அப்பாவின் உட‌ன் பிறந்த‌வ‌ர் யாரும் சென்னையில் இல்லாத‌தாலும், இந்த அத்தை ந‌ல்ல‌வ‌ர் என்று அவ‌ருக்கு தோன்றிய‌தாலும், அவ‌ளை ஹாஸ்ட‌லில் த‌ங்க வைக்காது இங்கே த‌ங்க வைத்தார். 'பேயிங் கெஸ்ட்' என்றாலும் அத்தை மிக ந‌ன்றாக‌வே பார்த்துக் கொள்கிறார்.

வீட்டில் அத்தை, மாமா ம‌ற்றும் அவ‌ர்க‌ளின் ம‌க‌ன் அருண் என்று மூவ‌ர்தான். அருணும் ந‌ல்ல வேலையில் கை நிறைய ச‌ம்பாதித்துக் கொண்டிருக்கிறான். ஆண் பிள்ளை இருக்கும் வீட்டில் அவ‌ளை த‌ங்க வைக்க அவ‌ள‌து அப்பா முத‌லில் ரொம்ப‌வும் யோசித்தாலும், அவ‌ன‌து ந‌ட‌வ‌டிக்கைக‌ளும் ப‌ழ‌கும் வித‌மும் அவ‌ரை வெகுவாய் க‌வ‌ர்ந்து விட்ட பின் அவ‌ர் அதிக‌மாய் அல‌ட்டிக்கொள்ள‌ வில்லை. அவ‌னும் அத‌ற்கேற்ற‌ப‌டி தான் இதுவ‌ரை ந‌ட‌ந்து வ‌ந்தான். அவ‌ன‌து அறையிலேயே எப்போதும் அடைந்துக் கொண்டு க‌ணினியை குடைந்துக் கொண்டிருப்பான். எப்போதேனும் ஒரு 'ஹாய், ஹ‌லோ', அவ‌ள‌து வேலை‌யை ப‌ற்றிய விசாரிப்புக‌ள், இவை த‌விர அவ‌ளிட‌ம் பேசுவ‌தில்லை. இத்த‌னைக்கும் தாரிணி அழ‌காக‌வே இருப்பாள்.

அருண் கொஞ்ச‌ம் ந‌ன்றாக சிரித்து பேசி அவ‌ள் பார்த்தது, அவ‌ர்க‌ள‌து ப‌க்க‌த்து ஃப்ளாட் சிறுமி ரேஷ்மா அங்கு விளையாட வ‌ரும் போது தான். அவ‌ளை ம‌டியில் இருத்திக்கொண்டு க‌ணினியில் ஏதெனும் விளையாட்டு காட்டிக் கொண்டிருப்பான். மாலைக‌ளில் ரேஷ்மா அங்கு வ‌ந்துதான் விளையாடிக்கொண்டிருப்பாள்.


"ஆஃபீஸுக்கு போக‌லையா தாரிணி?" என்ற அத்தையின் குர‌ல் அவ‌ளை யோச‌னையிலிருந்து மீட்ட‌து. "இதோ கிள‌ம்பிட்டேன் அத்தே!" என்ற‌வ‌ள் சோப்பும் ட‌வ‌லுமாய் ப‌ர‌ப‌ர‌க்கத் தொட‌ங்கினாள். அரைம‌ணியில் த‌யாராகி ஆஃபீஸுக்கும் வ‌ந்து அவ‌ள‌‌து கேபினில் போய் உட்கார்ந்த பிற‌கும் கூட அந்த க‌ன‌வைப் ப‌ற்றிய சிந்த‌னையே மூளையை ஆக்ர‌மித்திருந்த‌து. "யாரேனும் என்னிட‌ம் த‌ப்பாக‌ ந‌ட‌ந்துக் கொண்டு விடுவார்க‌ளோ? அத‌ற்கான ஒரு முன்னெச்ச‌ரிக்கை தான் இந்த‌ க‌ன‌வோ? இந்த க‌ன‌வுக‌ளை 'இ.எஸ்.பி' என்று ஏதோ பேர் சொல்லி அழைப்பார்க‌ளே' என்று என்னெ‌ன்ன‌வோ யோசித்துக்கொண்டே த‌ன் வேலையில் மூழ்க தொட‌ங்கினாள்.

சிறிது நேரத்தில் அவளது டீம் லீடர் வசந்த் அவளது கேபினுக்கு வந்து "தாரிணி இந்த வீக் ஒரு முக்கியமான ப்ரொஜெக்ட் கம்ப்ளீட் செஞ்சாகணும். இன்னிக்கு நைட் ஷிஃப்ட்டா எக்ஸ்டென்ட் பண்ணிக்கோங்க!" என்றான்.. "நைட் ஷிஃப்ட்டா? யார் யாரெல்லாம் வொர்க் பண்ணாப்போறோம்?" என்றாள் கலக்கத்துடன். "நான், நீ, மகேஷ் மட்டும் தான் இன்னிக்கு இருப்போம். நாளைக்கு இன்னும் மூணு பேர் இருப்பாங்க" என்றான். தாரிணியின் மூளயில் சின்னதாய் ஒரு சிகப்பு எச்ச‌ரிக்கை குறி அணைந்து அணைந்து எரிந்தது. உடனே "இல்லை இன்னிக்கு எனக்கு நைட் ஷிஃப்ட் வேண்டாம்" என்றாள் உறுதியான குரலில். "இப்படி சொன்னா என்ன பண்ண முடியும்? மத்தவங்க எல்லாரும் இன்னிக்கு இருக்க முடியாதுங்கறதுக்கு ரொம்ப வேலிட் ரீஸன்ஸ் சொல்லியிருக்காங்க தாரிணி. உனக்கு அப்படி எதுவும் இருக்காதுன்னு நெனைக்கறேன். இருந்தா சொல்லு பாப்போம்" என்றான் வசந்த் சரளமான ஆங்கிலத்தில். 'என்ன சொல்வது இவனிடம்? என் கனவு என்னை பயமுறுத்துகிறது என்றா?' என்று யோசித்தவளைப் பார்த்து "i dont think you have any valid reason. please cooperate with us. or else give me an explanation letter" என்று சொல்லி விட்டு நகர்ந்து போனான் அவன். 'என் கனவு இன்றே பலிக்க போகிறதா என்ன? ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன் நான் என தெரியவில்லையே' என்று மனதில் கவலையுடன் உட்கார்ந்து விட்டாள் தாரிணி. இன்று ஏதோ நிகழப் போகிறது என்று அவளது உள்ளுணர்வு அழுத்தமாய் கூறியது







தொடரும்

11 comments:

  1. //இன்று ஏதோ நிகழப் போகிறது என்று அவளது உள்ளுணர்வு அழுத்தமாய் கூறியது //

    என்னமா பில்ட் அப் ஏத்தறாங்க ! யப்பா சாமி - பொம்மை 3க்கு அக்கா தான் டைரடக்கரு

    ReplyDelete
  2. //அருணும் ந‌ல்ல வேலையில் கை நிறைய ச‌ம்பாதித்துக் கொண்டிருக்கிறான். //

    இங்கே அருண் என குறிப்பிடப் படுவது வால் பையன் இல்லையே !

    ReplyDelete
  3. //"i dont think you have any valid reason. please cooperate with us. or else give me an explanation letter"//

    தொரை இங்கிலீசெல்லாம் பேசுது

    ReplyDelete
  4. எப்ப போடுவீங்க எப்ப போடுவீங்க - மூனாவது பாகம் எப்ப போடுவீங்க !

    ReplyDelete
  5. முன்றாவது பாகம் எப்போது?

    ReplyDelete
  6. யக்கா, அந்த பேரை மாத்துங்கக்கா!
    ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கலாய்க்காதிங்கக்கா!

    ReplyDelete
  7. // Venkatesh said...

    முன்றாவது பாகம் எப்போது?//


    உம்ம கோவில் கட்டி தான்யா கும்பிடனும்!

    ReplyDelete
  8. ராஜன் said...

    //அருணும் ந‌ல்ல வேலையில் கை நிறைய ச‌ம்பாதித்துக் கொண்டிருக்கிறான். //

    இங்கே அருண் என குறிப்பிடப் படுவது வால் பையன் இல்லையே !//


    சம்பாரிக்கிறதுன்னு வர்றதால நிச்சயமா நானில்ல தல! நான் சம்பாரிக்கிறது சரக்குக்கும், சைடிஷ்சுக்குமே பத்த மாட்டிங்குது!

    ReplyDelete
  9. @ராஜன்: ராம் கோபால் வர்மாவே முன்னாடியே கேட்டாருங்க டைரெச்ட் பண்ண நான்ந்தான் முடியாதுன்னுட்டேன்.


    //இங்கே அருண் என குறிப்பிடப் படுவது வால் பையன் இல்லையே !// இல்லை இல்லை ஆம்மா ஆம்மா இல்லை...

    //தொரை இங்கிலீசெல்லாம் பேசுது// A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

    @வெங்கடேஷ்... சீக்கிரமே

    @தமீம்: நன்றி்ங்க‌

    @வால்பையன்: நான் உங்களுக்கு அக்காவா? மாத்த முடியாது போங்க‌

    // Venkatesh said...

    முன்றாவது பாகம் எப்போது?//
    உம்ம கோவில் கட்டி தான்யா கும்பிடனும்!

    @வால்பையன்: உங்களுக்கு என்னங்க அவ்ளோ பொறாமை?

    ReplyDelete