Friday, April 23, 2010

ஒரு கணம்...





நீங்கும் நிமிடத்தில் உயிர் உறுத்தும் விரலசைவில்

பிரிவனைத்தும் அணிவகுக்கும்...

நீ நிறைந்த நேரங்கள் நிலாக் கிண்ணம் நிறைத்து நிமிடத்தில் உருகும்...

பார்வை மறையுமுன் முகம் நிழற்படமாய் நினைவேறும்...

விரல் சேர்த்து நடக்காத பாதை நிலம் கடந்தும் நீளும்...

இதழ் சேர்க்க மறந்திட்ட முத்தங்கள் விண்ணெங்கும் மின்மினியாய் கண்சிமிட்டும்...

7 comments:

  1. என்னாங்க இது பழைய வண்டிய வாங்கி ரீமாடல் பண்ண மாதிரி இருக்கு!

    ReplyDelete
  2. டீ ராஜேந்தர் தோத்துட்டார் போங்க!

    ReplyDelete
  3. கவிதை சீக்கிரமே முடிஞ்சிட்ட மாதிரி இருக்கே, ம்ம்... நல்லாருக்குங்க.

    ReplyDelete
  4. //
    விரல் சேர்த்து நடக்காத பாதை நிலம் கடந்தும் நீளும்...

    இதழ் சேர்க்க மறந்திட்ட முத்தங்கள் விண்ணெங்கும் மின்மினியாய் கண்சிமிட்டும்...
    //

    ரொம்ப நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  5. @வால் பையன்:
    //என்னாங்க இது பழைய வண்டிய வாங்கி ரீமாடல் பண்ண மாதிரி இருக்கு!//

    நீங்க வண்டி விடறீங்களே அதே மெக்கானிக் தாங்க டிங்கரிங் பண்ணாரு.. அதான் அப்படி தெரியுது

    //டீ ராஜேந்தர் தோத்துட்டார் போங்க!//

    அட நிஜமாவா? தேங்க் யூ வாலு

    ReplyDelete
  6. @ஆதவா...
    //கவிதை சீக்கிரமே முடிஞ்சிட்ட மாதிரி இருக்கே, ம்ம்... நல்லாருக்குங்க.//

    ஆதவா ரிட்டர்ன்ஸ் ஆ? வாங்க வாங்க...

    ReplyDelete
  7. @வேலு:
    //ரொம்ப நல்லாயிருக்குங்க//

    நன்றிங்க வேலு...

    ReplyDelete