Monday, June 7, 2010

பல நாள் திருடன் (அ) தோழன்!

அன்று எனக்கு அலுவலகத்தில் அதிகமாக ஆணி இல்லாமல் ஈ ஓட்டிக் கொண்டிருந்த போது, ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.
"ஹேய் எப்படி இருக்கே?" கொஞ்சம் பரிச்சயமான குரல் தான்.

"நல்லா இருக்கேன். நீங்க யாரு?"...

"கண்டுபிடி பார்ப்போம்"... சட்டென நினைவு வந்தது.

"சதீஷ் தானே?"

"அடிப்பாவி சொல்லவே இல்லை. அது யாரு?"

"என் கூட ஸ்கூல்ல படிச்சியே? சதீஷ்.. பொய் சொல்லாதே! சரி நீ மலேசியா போனே இல்ல? திரும்பி இந்தியா வந்தாச்சா? எப்போ வந்தே?"

"ஹலோ! நான் சதீஷ் இல்லப்பா! ராஜேஷ் கண்ணா! பார்த்தியா! சதீஷை ஞாபகம் வெச்சுருக்கே! என்னை மறந்துட்ட!" என்றதும்,

"ஏ சாரிப்பா அவன் வாய்ஸும் இதே மாதிரி தான் இருக்கும்" என்று சமாளித்து விட்டேன். "ஆமாம் நீ இந்தியா வந்தாச்சா?" என்றேன். "ஆமாம் எங்கண்ணாக்கு கல்யாணம் அதனால இந்தியா வந்திருக்கேன். சரி உன்னை எப்போ பார்க்கலாம்? இன்வைட் கொடுக்கணுமே?" என்றான். "இன்னைக்கு நான் இங்கருந்து கிளம்பவே நேரமாயிடும். நாளைக்கு பார்க்கலாம். ஒகேவா?" என்வும் சரி என்று போனை வைத்தான்.

ராஜேஷ் என்னோடு பதின் நிலை பள்ளியில் மூன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்தவன். பத்தாவது படிக்கும் போது அவனது தந்தை இறந்து விட அப்போது வேறு பள்ளிக்கு போனவந்தான். 8 வருடங்கள் கழித்து மீண்டும் பேசுகிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு இவன் ஜி டாக்கில் திடீரென பிரசன்னமாகி, நாந்தான் உன் கூட படிச்ச ராஜேஷ் இப்போ துபாய்ல எலெக்ட்ரிகல் என்ஜினியரா வேலை பார்க்கறேன் என்று சாட் செய்ய ஆரம்பித்தான். அடுத்து இவன் மூலமாக வேறு பல நண்பர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரிய வ‌ர, எல்லோருக்குமாய் ஒரு கூகிள் குரூப் தொட‌ங்கி அனைவ‌ரும் தொட‌ர்பில் இருந்து வ‌ருகிறார்க‌ள். அடுத்த நாளும் நான் கிள‌ம்ப லேட்டாகி விட்ட‌து மேலும் என் ப‌ழைய மொபைல் கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் செத்துக் கொண்டிருந்த‌து மொத்த‌மாக உயிரை விடும் த‌ருவாய்க்கு வ‌ந்து அன்று ஒரு புதிய மொபைல் வாங்க உத்தேசித்திருந்தேன். கிளம்பும் நேரத்தில் ராஜேஷின் போன் வந்தது. "சரி நான் மொபைல் வாங்க போலாம்னு இருக்கேன். நீயும் கடைக்கு வர்றியா?" என்று கேட்டு கடையின் பெயரை சொல்லி விட்டு கிளம்பினேன். சொன்னபடி இருவரும் கடைக்கு வந்து விட்டோம்.
பல மொபைல் மாடல்களை அலசி ஆராய்ந்து விட்டு ஒரு வழியாக சாம்சங் கார்பி வாங்கிக் கொண்டு பக்கத்திலிருந்த ஹோட்டலுக்கு போய் ஜூஸ் ஆர்டர் செய்தவுடன், "உனக்கு எப்போ கல்யாணம்?" என்று கேட்டான் ராஜேஷ். "வர்ற டிசம்பர் 2010க்கு முன்னாடி இருக்கும்" என்றதும், "அட இன்னும் ஆறு மாசம் தானே இருக்கு!மாப்பிள்ளை பாத்தாச்சா?"... "ஓ பார்த்தாச்சே!" "எங்கே ஃபோட்டோ காமி" என்றதும் என் மொபைலில் இருந்த ஒரு போட்டோவை காண்பித்தேன். "ம்ம் நல்லாத்தான் இருக்காரு" என்றவன் அவரது இன்ன பிற விவரங்களைப் பற்றி கேட்கவும் சொன்னேன். "என்ன? கோயம்புத்தூர்ல செட்டில் ஆகப் போறியா?" என்று அதிர்ச்சியானவன், பின்பு "நாசமாய் போ" என்பது போல் "சரி நல்லாயிரு" என்று வாழ்த்தினான்.
பின்பு இரு நாட்கள் கழித்து ஒரு அழைப்பு. "சொல்லு ராஜேஷ்" என்றதும் "சும்மா தான் ஃபோன் பண்ணினேன். என்ன பண்றே?" "நான் சும்மா தான் இருக்கேன். அப்புற‌ம்? சொல்லு!நம்ம ஃப்ரென்ட்ஸ் எல்லாருக்கும் இன்வைட் வெச்சுட்டியா? யாரையெல்லாம் பார்த்தே?" என்றேன். "ம்ம் எல்லோருக்கும் வெச்சாச்சு. அப்புறம் உன் கிட்ட ஒண்ணு சொல்லணுமே?" "சொல்லு" என்றேன். கொஞ்சம் திகிலோடுதான்... பயலோட டோனே சரி இல்லையே!


தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......

7 comments:

 1. இப்படியெல்லாம் கனவு காணாதிங்க, பயமா இருக்குல்ல!

  ReplyDelete
 2. //"ம்ம் நல்லாத்தான் இருக்காரு"// வேற வழி இருக்கா என்ன?

  ReplyDelete
 3. //இப்படியெல்லாம் கனவு காணாதிங்க, பயமா இருக்குல்ல!//


  நான் அப்ப்பிடியேஏஏஏஏ ஷாஆஆஆக் ஆயிட்டேஏஏஏஏன்!

  ReplyDelete
 4. //வேற வழி இருக்கா என்ன?//


  என்ன! எனக்கென்னங்க சும்மா எம் ஜி ஆரு மாதிரி தக தக ந்னு மின்னுவேன்!

  ReplyDelete
 5. ரைட்ட்ட்டுடுடுடூ.

  ReplyDelete
 6. தொடரின் அடுத்த பகுதிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் . . .

  ReplyDelete
 7. hii.. Nice Post

  Thanks for sharing

  More Entertainment

  For latest stills videos visit ..

  ReplyDelete