Saturday, May 2, 2009

கடற்கரையில் ஒரு மாலை...




எதிர்பார்த்து நிற்கையில் கால் விரல்களை மட்டுமே தீண்டிச்சென்று,
சலிப்புடன் திரும்புகையில் வேகமாய் வந்து இடை நனைக்கும் பேரலைகள்...
எஙிருந்தோ மிதந்து வந்து முகத்தில் பட்டுத்தெறிக்கும் சோப்புக்குமிழிகள்...
இலக்கின்றி வானில் போக்கு காட்டி அலையும் காற்றாடிகள்...
பார்க்கும் காட்சிகளனைத்தும் உன் காதலையே நினைவுப்படுத்துகின்றன...
நெருங்கி விலகி அலைகளாய் உன் நினைவுகள்...
மீண்டும் வீடு திரும்புகிறேன் உயிர் நனைத்த‌ காதலுடன்...

14 comments:

  1. கடற்கரையில் ஒரு மாலையில் காதலுடன் ரசித்திருக்கிறீர்கள்...ரம்மியமான ரசனை...

    //கவிதை?//

    இதிலென்ன சந்தேகம் ரீனா...

    வரிகளின் அமைப்புகளில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்...வாழ்த்துக்கள் ரீனா...

    ReplyDelete
  2. அழகாய் நனைக்கிறது வரிகள் ரீனா..:)))

    ReplyDelete
  3. எதிர்பார்த்து நிற்கையில்
    கால் விரல்களை மட்டுமே தீண்டிச்சென்று,
    சலிப்புடன் திரும்புகையில்
    வேகமாய் வந்து
    இடை நனைக்கும் பேரலைகள்...

    எங்கிருந்தோ மிதந்து வந்து
    முகத்தில் பட்டுத்தெறிக்கும்
    சோப்புக்குமிழிகள்...

    இலக்கின்றி வானில்
    போக்கு காட்டி அலையும்
    காற்றாடிகள்...

    பார்க்கும் காட்சிகளனைத்தும்
    உன் காதலையே நினைவுப்படுத்துகின்றன...
    நெருங்கி விலகி அலைகளாய்
    உன் நினைவுகள்...
    மீண்டும் வீடு திரும்புகிறேன்
    உயிர் நனைத்த‌ காதலுடன்...

    --------------------------

    இப்படி வரிகளை (ஒரு சுமாராக) அமைத்திருக்கிறேன். முதல் வரியிலிருந்து பிர்மாதமான கவிதை தொடங்குகிறது. அதிலும் அந்த காட்சி.... விரல்களை நனைத்துச் செல்லும் அலைகள்....... இன்னும் அழியாமல் மனதோரம்....

    அழகு அழகு!!! வரியமைப்பை சரியாகச் செய்யுங்கள்!!! கவிதைகளை உரைநடை அமைப்பில் படிக்க முடிவதில்லை!!

    ReplyDelete
  4. புதியவன் said...
    கடற்கரையில் ஒரு மாலையில் காதலுடன் ரசித்திருக்கிறீர்கள்...ரம்மியமான ரசனை...

    ரீனா said...
    நன்றி புதியவன்...

    //கவிதை?//

    இதிலென்ன சந்தேகம் ரீனா...

    :ppp

    வரிகளின் அமைப்புகளில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்...வாழ்த்துக்கள் ரீனா...

    நன்றி புதியவன்... ஏனோ எனக்கு வரி அமைப்பு அத்தனை சரியாய் செய்ய தெரியவில்லை. முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  5. அழகாய் நனைக்கிறது வரிகள் ரீனா..:)))

    ரீனா said..
    நன்றி நவீன்... டவல் வேண்டுமா:pp

    ReplyDelete
  6. ஆதவா said...
    ...

    --------------------------

    இப்படி வரிகளை (ஒரு சுமாராக) அமைத்திருக்கிறேன். முதல் வரியிலிருந்து பிர்மாதமான கவிதை தொடங்குகிறது. அதிலும் அந்த காட்சி.... விரல்களை நனைத்துச் செல்லும் அலைகள்....... இன்னும் அழியாமல் மனதோரம்....

    அழகு அழகு!!! வரியமைப்பை சரியாகச் செய்யுங்கள்!!! கவிதைகளை உரைநடை அமைப்பில் படிக்க முடிவதில்லை!!


    ரீனா said...
    நன்றி ஆதவா:))உங்கள் ஆதங்கம் புரிகிறது... அடுத்த முறை நல்ல வரியமைப்பில் எழுத முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  7. ரொம்ப அழகான உயிர் நனைத்தல்....
    அன்புடன் அருணா

    ReplyDelete
  8. அழகான வரிகள் ரீனா.....

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. //அன்புடன் அருணா said...
    ரொம்ப அழகான உயிர் நனைத்தல்....
    அன்புடன் அருணா//


    நன்றி அருணா...:))

    ReplyDelete
  10. Kannan said...
    அழகான வரிகள் ரீனா.....

    வாழ்த்துக்கள்



    நன்றி கண்ணன்... தங்கள் தொடர்ச்சியான வருகை மகிழ்ச்சி தருகிறது

    ReplyDelete
  11. இந்தத் தலைப்பு ஈர்த்தது. நல்லா இருக்கு. (நான் 'கடற்கரையில் ஒரு காலை' என்று கொஞ்ச நாட்கள் முன் எழுதியிருந்தேன். 'மாலை' என்ன சொல்கிறது என்று பார்க்க வந்தேன்)

    அனுஜன்யா

    ReplyDelete
  12. நன்றி சென்ஷி:))

    ReplyDelete
  13. நன்றி அனுஜன்யா:))

    ReplyDelete