Wednesday, April 21, 2010

உம்மேல ஆசதான்! பார்ட் 1

யார் இவன்? ஏன் என்னை இப்படி பார்க்கிறான்! அய்யோ! நான் மட்டும் எப்படி இவனுடன் இந்த அறையில் தனியாய் மாட்டிக் கொண்டேன்? என்று பல கேள்விகளுடன் அவனை விழித்து விழித்து பார்த்துக் கொண்டிருந்த தாரிணி, சுற்றும் முற்றும் அந்த அறையை சில கணங்கள் நோட்டமிட்டாள். எப்போதோ முன்பே பார்த்தது போல் தோன்றியது. வெளிர் நீல டிஸ்டெம்பர் பூச்சு சில வருடங்கள் பழையதாகி போயிருக்க, அங்கங்கே பெயர்ந்து உள் சுவரை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது. நேர் மேலே ஒரு ட்யூப் லைட் போதுமான வெளிச்சம் சிந்தியபடி இருக்க, பெரியதொரு மரக்கட்டில் அறையில் பாதி இடத்தை ஆக்ரமித்திருந்தது. அதை தவிர அருகே ஒரு சிறிய மேஜையில் கணிணியும் ஒரு நாற்காலியும் இருந்தன. அந்த அறையை முன் எப்போதோ பார்தத‌து போல் ஒரு நினைவு. கட்டிலின் பக்கவாட்டில் இரு கைகளையும் ஊன்றியபடி சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான் அவன். நல்ல சுருள் தலைமுடியுடன், சற்றே மாநிறத்தை காட்டிலும் சிகப்பாக, உயரமாக... முன்பே பார்த்தது போன்ற முகம். தாரிணியை பார்த்துக் கொண்டேயிருந்த அவன், சட்டென அவளை நோக்கி நகரவும் அவளுக்கு 'பகீர்' என்றது. அறையின் கதவு எங்கே என கண்களால் துழாவினாள். அவளுக்கு நேர் பின்னே கதவு இருப்பது புலப்பட்டதும் அதை நோக்கி பாய்ந்து அதன் கைப்பிடியை முழுப்பலம் கொண்டு திருகினாள். அது அசைந்து கொடுக்க மறுததும் தான், கதவு வெளியே தாளிடப்படிருக்கிறது என்பது புரிந்தது. அதற்குள் அவன் சிறியதொரு புன்னகையுடன் மேலும் ஓர் அடி அவளை நெருங்கியிருந்தான். தாரிணி கத்த முயற்ச்சித்தாள். 'அய்யோ இதென்ன குரலே எழும்ப மாட்டேங்குது? நான் இப்ப என்ன செய்யறது? இவன் வேறு கிட்ட கிட்ட வர்றான்... தடி எருமை!' என்று மனதுக்குள் திட்டியவாறே அவள் பின்னே நகர யத்தனிக்கவும், அவன் அவளை எட்டி பிடிக்கவும் சரியாக இருந்தது...



தொடரும்........

6 comments:

  1. தொடர்கதை எழுதவே பர்மிசன் கொடுத்துட்டாரா!

    ReplyDelete
  2. திகில் கதையா? காதல் கதையா?

    ரொமாண்டிக்கான வர்ணனை... அப்புறம் சஸ்பென்ஸ்.. குழப்புறீங்களே.

    //மாநிறத்தை விட சிகப்பு... // கறுப்பா இருந்தா புடிக்காதோ.. நறநற.

    ReplyDelete
  3. நீண்ட நாட்களுக்கு பின் வந்து இருக்கீங்க

    ஒரு தொடரோடு

    நடத்துங்க ...

    ReplyDelete
  4. @வால் பையன்: ஆமாங்க... எல்லாம் உங்க புண்ணியம்...

    @பிள்ளையாண்டான்: சிகப்பு தாங்க பிடிக்காது!அதான் அப்படி சொன்னேன்

    @ஜமால்: நன்றிங்க ஜமால்:)

    @அண்ணாமலையான்: என்ன ஓஹோ?

    @எல்.கே: அடுத்த வாட்டி எழுதறேங்க... இப்படி கேட்டு வாங்கறீங்க?

    ReplyDelete