
இப்போது வலையுலகில் சுவாரஸ்யமாய் ஓடிக் கொண்டிருக்கும் சுவாரஸ்ய வலைபதிவர் விருது வைபவத்தில் என்னையும் கூட சேர்த்து விட்டிருக்கிறார் பதிவர் சக்தி அவர்கள்(ஹி ஹி ஹி..) நன்றி சக்தி. இது உண்மையிலேயே என்னை ஊக்கப்படுத்துகிறது. இத்னை தொடங்கி வைத்த செந்தழல் ரவி அவர்களுக்கும் நன்றி.
இன்னும் அறுவருக்கு இந்த விருதை நான் அளிக்கலாமாம். நான் பரிந்துரைக்கும் அறுவர்...
1. புதியவன் http://puthiyavanonline.blogspot.com/
மிக அழகாக காதல் கவிதைகள் எழுதுபவர். உயர்காதலை கருவாக, தன் காதலியை மட்டுமே கருப்பொருளாய் கொண்டு அருமையான கவிதைகளை தருபவர். உங்கள் காதலும் கவிதைகளும் இப்போது போல் எப்போதும் செழிப்பாய் வளர வாழ்த்துக்கள் புதியவன்.
2. வருத்தப்படாத வாலிபர் சங்கம் http://www.vvsangam.com/
சீரியஸாக பலப்பதிவர்கள் எழுதிக்கொண்டிருக்க சிரிக்க வைப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும் ஒரு வலைப்பூ. சிபி, சிவா, கைபுள்ள, ஜொள்ளுப்பாண்டி,இளா, தேவ் என பலர் சேர்ந்து அமைத்த சங்கத்தில் மாதம் ஒருவரை அட்லாஸ் சிங்கமாக தேர்வு செய்து எழுத வைத்து பல பணிகளுக்கு நடுவில் சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டுள்ளனர்(இதுவே ரொம்ப பெரிய விஷயமாச்சே). எனவே இந்த விருது இவர்களது சங்கத்து சிங்கங்கள் ஒவ்வொருக்கும் தனியாகவும், மொத்தமாக இவர்கள் சங்கத்துக்கும் தரப்படுகிறது. இவர்களது பணி தொடர வாழ்த்துக்கள்.
3.கரையோரக்கனவுகள் ஸ்ரீமதி http://karaiyoorakanavugal.blogspot.com/
மெல்லிய வலியை சொல்லும் காதல் கவிதைகளை எழுதுபவர். பின்னூட்டமிடும் பதிவர்களை 'அண்ணா அக்கா' என அழைத்து காலி செய்பவர். இவரது கவிதைகள் ஒவ்வொன்றுமே மிக அழகானவை. தொடர்ந்து பல காதல் கவிதை புனைய வாழ்த்துக்கள்
4.மனசுக்குள் மத்தாப்பூ திவ்யா http://manasukulmaththaapu.blogspot.com/
திவ்யா காதல் கதைகள் எழுதுவதில் வல்லவர். இவரது கதைகள் படிக்க, திரைக்கதைகளுக்கு நிகராக, அத்தனை சுவாரஸியமாக இருக்கும். கதைக்கு பொருத்தமான படங்களை எப்படித்தான் தேடிப்பிடிப்பாரோ தெரியாது.கதை நெடுக அழகிய கவிதைகள் வேறு இருக்கும். இவரது கதைகளை படித்துத்தான் எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்கும் ஆசை வந்தது. நீங்கள் இன்னும் பல அழகான கதைகள் படைக்க வாழ்த்துக்கள் திவ்யா
5. நட்புடன் ஜமால் http://adiraijamal.blogspot.com/
ஜமாலின் வலைப்பூவை காட்டிலும் மிக பிரசித்தியானவை அவரது பின்னூட்டங்கள். மிக அதிகமான வலைப்பூக்களில் இவரது பின்னூட்டங்களை காணலாம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எவர் மனமும் நோகாமல்,படைப்பை மட்டுமே விமர்சித்து, பாரபட்சமின்றி பின்னூட்டம் இடுவார். அது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. எனவே ஜமால் உங்களுக்கு இந்த விருது. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
6. மை தாட்ஸ் டா மச்சி காயத்ரி http://enpoems.blogspot.com/
க்தை, கவிதை, திரை விமர்சனம், தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் என ஒரு தளத்தில் நிற்காமல் பலவற்றில் பரிணமிப்பவர் த்மிழ்மாங்கனி என்ற காயத்ரி. மிக ஜாலியான வலைப்பூ இவருடையது. பல பல திறமைகள் உடையவர் இவர். மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள் காயத்ரி
அறுவர் என்பதால் மட்டுமே பட்டியல் இத்துடன் நிறுத்தப்படுகிறது. ஏனென்றால் சுவாரஸிய பதிவர்கள் நிறைய பேர் உள்ளனர். அத்தனை பேருக்கும் என் பணிவான வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்!
ReplyDeleteநெகிழ வைத்து விட்டீர்கள்
நன்றி தோழமையே!
மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
சூப்பர்!
ReplyDeleteவிருது பெற்ற உங்களுக்கும், உங்களால் கௌரவிக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
சங்கத்து சிங்கம் என்ற முறையில் வவாசங்கத்து சிங்கங்களுக்கு வழங்கப்பட்ட விருதிற்காக பெருமையுடன் நன்றி நவில்கிறேன்!
ReplyDeleteமுதல் வருகை என்பதால் இப்போதைக்கு அட்டெண்டன்ஸ் மட்டும்!
ReplyDeleteவிருது பெற்ற உங்களுக்கும், உங்களிடமிருந்து பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅக்கா, நன்றி!!! :)
ReplyDeleteவிருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.......
ReplyDeleteநால்வர் எனக்கு புதியவர்கள். நிச்சயம் அவர்களின் பதிவுகளையும் படிக்க முயற்சிக்கிறேன். அதோடு விருது பெற்றதற்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபுதியவன் - காதல் கவிதைகள் எழுதுவது என்றால் மனுஷனுக்கு அப்படி ஒரு அலாதி சுகம். வார்த்தைகள் எல்லாம் வருடம் முழுவதும் வேண்டுமானாலும் வரிசையில் காத்து நிற்கும் இவர் கவிகளில் அரங்கேறுவதற்கு. வாழ்த்துக்கள் புதியவன்
நட்புடன் ஜமால் - வார்த்தை வீண்விரயம். ஜமால் என்றாலே நட்பு என்று ஆனபிறகு ஏதேனும் ஒன்று இருந்தால் போதும் நண்பா. பின்னால் நின்று ஊட்டம் மட்டுமல்ல முன்னால் சென்று கைப்பிடித்து குலுக்கவும் தவறுவதில்லை. வாழ்த்துக்கள் நண்பா
@நட்புடன் ஜமால்
ReplyDeleteஉங்கள் தோழமைக்கு நாங்கள் தான் நன்றி கூற வேண்டும் ஜமால்
@பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி
ReplyDeleteவாங்க சிபி... முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வரவும்.
சரி எப்போலருந்து இந்த டைட்டில் உங்களுக்கு பின் சேர்க்கப்பட்டது???;)
வாழ்த்துக்களுக்கு நன்றி சிபி
@ அமிர்தவர்ஷினி அம்மா
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி அம்மா.. தொடர்ந்து வரவும்
@Thamizhmaangani
ReplyDeleteஅக்கா, நன்றி!!! :)
:) சரி தங்கச்சி:)
@முனைவர்.இரா.குணசீலன்
ReplyDeleteநன்றி முனைவர் அவர்களே... தொடர்ந்து வரவும்
@ S.A. நவாஸுதீன்
ReplyDeleteஉண்மை... நட்பு என்றால் ஜமால் என்றாகிவிட்டது. வருகைக்கும் தருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நவாஸ்
ஒவ்வொரு தனி வலைப்பதிவுகளையும் அழகாக விமர்சித்து கொடுத்திருக்கிறீர்கள். பதக்கம் பெறவேண்டிய வலைப்பதிவுகள்தான் அவை!
ReplyDelete@ஆதவா
ReplyDeleteநல்வரவு ஆதவா... எங்க போயிட்டீங்க இவ்ளோ நாளா?
நட்புத் தென்றல் ஜமாலுக்கு விருது வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ரீனா...
ReplyDeleteநன்றி தமிழரசி... முதன்முறையாக வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்... தொடர்ந்து வருக
ReplyDelete//
ReplyDeleteசரி எப்போலருந்து இந்த டைட்டில் உங்களுக்கு பின் சேர்க்கப்பட்டது???;)//
பின் சேர்க்கப்பட்டதல்ல! முன் சேர்க்கப்படது!
பிரிஃபிக்ஸாத்தான போட்டிருக்கேன்!
நேத்துலேர்ந்துதான்!
விருது பெற்றதற்காக உங்களுக்கும், உங்களிடமிருந்து விருதுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்:):):)
ReplyDelete:)
ReplyDeleteவாழ்த்துக்கள்!
நம்ம பெயரையும் சேர்த்து கூவியதுக்கு நன்றிங்கோ :)
வாழ்த்துக்கள்
ReplyDeleteவிருது வழங்கிய விதம் அருமை ரீனா
ReplyDeleteவிருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
பிரபலப் பதிவர் நாமக்கல் சிபி said...
ReplyDelete//பின் சேர்க்கப்பட்டதல்ல! முன் சேர்க்கப்படது!பிரிஃபிக்ஸாத்தான போட்டிருக்கேன்!நேத்துலேர்ந்துதான்!//
புது டைட்டில் புதுப்புது ப்ளாக்... கலக்குறீங்க சிபி
rapp said...
ReplyDeleteவிருது பெற்றதற்காக உங்களுக்கும், உங்களிடமிருந்து விருதுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்:):):)
நன்றி அட்லாஸ் சிங்கமே...தொடர்ந்து வருக
நாகை சிவா said...
ReplyDelete:)
வாழ்த்துக்கள்!
நம்ம பெயரையும் சேர்த்து கூவியதுக்கு நன்றிங்கோ :)
//நான் கேக்கறதுக்கு முன்னாடியே இந்த வாட்டி சிரிச்சுட்டீங்க... நன்றி சிவா//
@sakthi
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி சக்தி...
அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteவிருது வழங்கிய விதம் அருமை ரீனா
//அப்படியா... நன்றி அபு//
//சங்கத்து சிங்கம் என்ற முறையில் வவாசங்கத்து சிங்கங்களுக்கு வழங்கப்பட்ட விருதிற்காக பெருமையுடன் நன்றி நவில்கிறேன்!/
ReplyDeleteஅதே நன்றி... நன்றி ஜிஸ்டர்.. :)
இராம்/Raam said...
ReplyDelete//சங்கத்து சிங்கம் என்ற முறையில் வவாசங்கத்து சிங்கங்களுக்கு வழங்கப்பட்ட விருதிற்காக பெருமையுடன் நன்றி நவில்கிறேன்!/
அதே நன்றி... நன்றி ஜிஸ்டர்.. :)
நன்றி பிரதர்....
வாழ்த்துக்கள்..
ReplyDeleteவிருதுக்கும் நமக்கும் ரொம்ப தூரம் ..இப்போ இல்லங்க படிக்றப்ப இருந்துதான் ...இருந்தாலும் உங்களுக்கும் ...உங்களால் கௌரவிக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!....அவ்வ்வ்வ் ..:-)
ReplyDeleteஎங்கே பதிவுகள்
ReplyDeleteநீண்ட இடைவெளியாயிற்று
வாருங்கள் சீக்கிரம்.
அட நீங்க வேற! வர வர
ReplyDeleteஎனக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதறதில்லை ...
அவ்வ்வ்வ்வ்வ்ளோ பிஸி!!!!!
எனக்கும் அதே கேள்விதான் ஜமால். சீக்கிரம் எழுதுங்க ரீனா.
ReplyDeleteஅனுஜன்யா
சும்மா சொல்லக் கூடாது.... கும்முன்னு இருக்கு!
ReplyDelete