கடந்த சனிக்கிழமை இரவு 8.30 மணி இருக்கும். என் மொபைலில் ஒரு மெசேஜ் என் கல்லூரித்தோழியிடமிருந்து... "Watch zee tamil,, a wonderful movie of sam anderson” அப்படின்னு. சரி ஏதோ ஒரு இங்கிலீஷ் படத்தைத்தான் தமிழாக்கம் செஞ்சுருப்பாங்க போல.. பார்க்கலாம்னு நெனச்சேன். நானும் என் பக்கத்து வீட்டு மழலையும் சேர்ந்து ஆதித்யா சேனல் பார்த்துக்கொண்டிருந்தோம். விடுமுறை நாட்களில் அந்த மழலை (ரொம்ப மழலை இல்ல.. 5ஆம் கிளாஸ் படிக்குது) என்னுடன் எங்கள் வீட்டில் பெரும்பாலான நேரம் இருப்பது வழக்கம். அந்த படம் பார்ப்பதற்காக சேனல் மாற்றியதும் அந்த மழலையிடமிருந்து பயங்கர எதிர்ப்பு. ஒரு வழியாக அவளை சமாளித்து அந்த சேனலை வைத்தால் அப்ப்போத்தான் டைட்டில் கார்டு போட்டிருந்தாங்க. விதவிதமான கார்களை காட்டி முடிச்சுட்டு படம் ஆரம்பிச்சுது. நோஞ்சான் மாதிரி இருந்த ஒரு பொண்ணு வந்து "ஒருவனே இறைவன்" அப்படின்னு ஸ்கூல் கோயர்ல எல்லாம் பாடற மாதிரி பாட ஆரம்பிச்சுது.
"ஏய் என்னது இதுதான் நீ சொன்ன படமா? இது ஏதோ மொக்கைப்படம் மாதிரி இருக்கு? ரொம்ம்ப லோ பட்ஜெட் படம் போல் தெரியுதே?" என என் தோழியை கேட்க "இதுதான்!படம் பர்த்துட்டே இரு!இனிதான் சாம் ஆன்டர்சன் என்ட்ர்ரி" என்று பதில் வந்தது. சரின்னு படத்தை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். அப்படி ஒரு படத்தை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை.
படத்தின் ஹைலைட்ஸ்:
1. ஹீரோ ஹீரோயினை செயின் பறிக்கும் திருடர்களிடமிருந்து காப்பாற்றுகிறார். ஆனால் செயினை அவரால் காப்பாற்ற முடியவில்லை:) அதனால் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கொடுத்து "நீங்க பாடின பாட்டை பார்த்தேன். மிகவும் அருமை(அதுதாங்க அன்த முதல் துதிப்பாடல்). அதுக்கு பரிசா இந்த செயினை வெச்சுகோங்க" என்று கொடுக்க, அதற்கும் ஹீரோயின் வெட்கப்பட்டு காதலிக்க ஆரம்பிக்கிறார்.
2.ஹீரோ ஒரு ஆட்டோமொபைல் இஞ்சினியராம். இதை எப்படி காண்பித்திருப்பார்கள் என்கிறீர்கள்? அவர் கையில் ஒரு ஆல்பம் இருக்கும். சின்ன பிள்ளையில நாம் படம் எல்லாம் ஒட்டி ஒரு நோட் வெச்சுருப்போமே அது போல! அந்த நோட்ல க்ரேயான்ல பல கார்களை வரைஞ்சு வெச்சுருப்பார். இப்படித்தான் ஆட்டோமொபைல் இஞ்ஜினியர்கள் வெச்சிருப்ப்பாங்களா? யாராவது சொல்லுங்களேன்.
3.ஹீரோயினோட அப்பா ஒரு பெரிய கார்ஷோரூம் ஓனர். அங்க ஹீரோவை ஹீரோயின் கூட்டிட்டு போக, அவர் அந்த ஹீரோயினோட அப்பாகிட்ட தன்னோட க்ரேயான் புக்கை காண்பிச்சு ஒரு புதுக்கார் தயாரிக்க லோன் கேட்க அவர் மறுத்து விடுக்கிறார்.உடனே ஹீரோ அங்க ஒட்டியிருந்த ஒரு கார் போஸ்டரை காண்பிச்சு "இதையாவது கொடுங்களேன் ப்ளீஸ்" என்று கெஞ்ச "முடியாது போ"என்கிறார் அந்த அப்பா அல்பத்தனமாக. உடனே அவரது பெண் மறுநாளே திருடி கொண்டு வந்து ஹீரோவிடம் கொடுக்க காதல் வலுவடைகிறது.
4.இப்படி செழித்து வளரும் காதலுக்கு வில்லியாக கனடாவிலிருந்து வந்து குதிக்கிறார் ஹீரோவின் கல்லூரிக்கால காதலி.இவர் முகம் மட்டுமே படத்தில் பார்க்கும்படி இருந்தது. ஹீரோவுக்கு கனடாவிலியே வேலை வாங்கி தருவதாக அவர் சொல்ல மனம் தடுமாறுகிறார் நம் ஹீரோ(படம் முழுக்க கனடாவை கன்னடா என்றே சொல்லுவார்கள்). கனடா காதலியுடன் இவர் டூயட் பாடுவதை பார்த்து கோபித்து கொண்டு போய் விடுகிறார் லோக்கல் காதலி. கடைசியில் யாரை ஹீரோ மணக்கிறார் என்பது தான் கதை. அப்பாடா... சொல்லி முடிச்சுட்டேன்(உங்களுக்கும் படிச்சு முடிச்சுட்டேன்னு இருக்குமே?)
5. படம் முழுதும் ஹீரோவை முடிந்தவரை கேவலப்படுத்தியிருப்பார்கள் அந்த இரு பெண்களும் டைரக்டரும். இருவ்ரிடமும் "ப்ளீஸ் நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேனே" என்று அவர் கெஞ்ச "முடியாது போ" என்று லோக்கல் காதலி மறுத்து விட 'போனால் போகட்டும்' என்று ஏற்றுக்கொள்கிறார் கனடா காதலி. ஆனால் அவரும் கூட 'அவ புத்திசாலி. உன்னை என் தலையில கட்டிட்டு அவ எஸ்கேப்பாயிட்டா' என்று மனப்பொருமலொடுதான் ஹீரோவை ஏற்றுக்கொள்கிறார். பின்னே.. மொத சீன்ல அவங்க பாடினதுக்கு கிஃப்ட்டா கொடுக்கப்பட்டது இந்த பொண்ணோட செயின் தானாம்... என்ன கொழுப்பு பாருங்க.
6. டூயட்களில் பாவம் ஹீரோயின்கள் தனியாகவே ஆடுகிறார்கள்(?!). சுய கோரியோகிராபி போல... மரத்தை சுற்றி சுற்றி குரோட்டன் செடிகளின் நடுவே புகுந்து ஆடும் பாடல் காட்சிகளை யாருமே சமீபத்திய படங்களில் பார்த்திருக்கவே முடியாது. அத்தனை புதுமை. ஹீரோவின் டான்ஸ் அதிலும் புதுமை. தோளை மட்டுமே குலுக்கி ஏதோ ட்ரை பண்ணியிருக்கார். முகத்தில் கொஞ்சமாவது ஒரு எக்ஸ்பிரஷன் இருக்கணுமே... ம்ஹூம். சோகம், அழுகை, காதல், சிரிப்பு எல்லாத்துக்கும் ஒரே மாதிரி பாரபட்சமின்றி முகத்தை வெச்சுருப்பார். யோசிச்சா எக்ஸ்பிரஷனில்லாமன்னு சொல்ல முடியாது, டேய்நாதஸ்க்கு செந்தில் ஒரு முகபாவம் கொடுப்பாரே, அந்த பாவத்தை ஹீரோவின் திருமுகத்தில் படம் முழுக்க பார்க்கலாம்.
7. படத்தின் பெயர் தான் இதில் உச்சப்பட்ச காமெடியே. "யாருக்கு யாரோ? ஸ்டெப்னி". இதற்கு க்ளைமாக்ஸில் ஒரு விளக்கம் வேறு. "அது ஸ்டெப்னி அல்ல ஸ்டெப்பு நீ" என்று. உஸ்ஸ்ஸ்... அப்பா.. அதுக்கு நாம இல்ல, படத்துல அந்த ரெண்டாவது ஹீரோயினே காறி துப்புவது தனி விசேஷம்.
நான் மட்டும் இந்த பட்த்தை பார்த்து ரசித்தது போதாது என்று என்று, என் இன்னொரு தோழிக்கும் வேறு செய்தி அனுப்ப, பாவம்... அவளும் என் கொடுமையால் இந்த படத்தை பார்த்தாள். படத்திற்கு நடுவே திடீரென என்னுடன் இருந்த மழலை "அக்கா என்னால இந்த படத்தை பார்க்க முடியல!சேனலை மாத்துங்க" என மிரட்டியும் பயனில்லாமல் போகவே எழுந்து டிவியை ஆஃப் செய்து விட்டு போய் விட்டாள். ஆனாலும் நாங்க மறுபடி ஆன் பண்ணி படத்தை பார்த்தோமில்ல...
1. ஜே.கே.ரித்தீஷூம் டி.ராஜேந்தரும் மிக நல்ல நடிகர்கள். இனி யாரும் அவர்களை கிண்டல் செய்யக்கூடாது, ஆமா... சொல்லிட்டேன்.
2.ராமராஜன் அப்படி ஒன்றும் மோசம்மான ட்ரெஸ்ஸிங்க் சென்ஸ் உடையவர் அல்ல. என்ன அழகாய் டிரெஸ் பண்ணுவார் அவர்.
3.இனி ஃப்ரெண்ட்ஸ் சொல்றாங்கன்னு நம்ம்ம்பி எந்த படத்தையும் பார்க்க கூடாது
me the 1st
ReplyDeletepadichutu varenpa
ReplyDelete8.படத்தின் பெயர் தான் இதில் உச்சப்பட்ச காமெடியே. "யாருக்கு யாரோ? ஸ்டெப்னி". இதற்கு க்ளைமாக்ஸில் ஒரு விளக்கம் வேறு. "அது ஸ்டெப்னி அல்ல ஸ்டெப்பு நீ" என்று. உஸ்ஸ்ஸ்... அப்பா
ReplyDelete\\
hahahaha
3.இனி ஃப்ரெண்ட்ஸ் சொல்றாங்கன்னு நம்ம்ம்பி என்த படத்தையும் பார்க்க கூடாது
ReplyDelete\\
padaththai fulla paarthuttu ithula dialogue verayakum
பொறுமையா பார்த்தது மட்டுமில்லாம அதுக்கு விமர்சனம் வேறயா. உங்களுக்கு லொள்ளு ஜாஸ்திங்க
ReplyDeleteநீங்கள் புரிந்து கொண்டதிலேயே 3ஆவது தாங்க சூப்பரு ...
ReplyDeleteபாவம் சாம் - இப்படி கிழிச்சி இருக்கிங்க
@ rose,,,
ReplyDelete//தேங்க்ஸ் மற்றும் வாழ்த்துக்கள் ரோஸ்... 1ஸ்ட் வந்ததுக்கு... ரசித்து படித்தமைக்கு நன்றிங்க( ரசிச்சு படிச்சீங்கன்னு நானே முடிவு பண்ணிட்டேன்ல)... டயலாக் இல்லீங்க,,, என் ஆதங்கத்தை வேற யார் கிட்ட சொல்றது? சொல்லுங்க//
S.A. நவாஸுதீன்...
ReplyDeleteபொறுமையா பார்த்தது மட்டுமில்லாம அதுக்கு விமர்சனம் வேறயா. உங்களுக்கு லொள்ளு ஜாஸ்திங்க
//லொள்ளு ஜாஸ்தி எல்லாம் இல்லீங்க...கொஞ்சம் தான். நன்றி நவாஸ்//
@நட்புடன் ஜமால்
ReplyDeleteபாவம் சாம் - இப்படி கிழிச்சி இருக்கிங்க
//நீங்க வேற ஜமால்... அவருக்கு சப்போர்ட் எல்லாம் பண்ணாதீங்க... சாம் ஆடின டான்ஸ பாருங்க... இரக்கப்படவே தோணாது//
அதை ஒளிப்பரப்பு செய்யும்போது அந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள் என்று சொல்லி மெயில் பண்ணாமல் இருந்தீங்களே, கோடி புண்ணியம் உங்களுக்கு
ReplyDeleteபடத்தோட பேரே காமெடியா இருக்கே..
ReplyDelete@அபுஅஃப்ஸர்
ReplyDelete//நன்றி அபு... அடுத்த தடவை இப்படி பண்றேன்//
@பிரியமுடன்.........வசந்த்..
ReplyDelete//படத்தோட பேரே காமெடியா இருக்கே..//
பேர் மட்டுமா காமெடி? நன்றி வசந்த்... முதல் வருகை இல்லையா? தொடர்ந்து வருக
எல்லாமே காமடியா இருக்கே...
ReplyDeleteசாம் ஆண்டர்சனை கிண்டல் செய்யாதீர்கள். ஆட்டோ வரும்!
ReplyDelete-இப்படிக்கு
அகில உலக சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம், அமெரிக்கா branch!
@சந்ரு
ReplyDeleteஎல்லாமே காமடியா இருக்கே...
//உண்மை சந்ரு... காமெடி மட்டுமில்ல... கொடுமையும் கூட.
தங்கள் முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வரவும்//
@Thamizhmaangani
ReplyDelete//சாம் ஆண்டர்சனை கிண்டல் செய்யாதீர்கள். ஆட்டோ வரும்!
-இப்படிக்கு
அகில உலக சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம், அமெரிக்கா branch!//
வாங்க காயத்ரி... ரொம்ப நாளா இந்த பக்கம் வரவே இல்ல?
சாம்க்கு ரொம்ப சப்போர்ட் பண்றீங்க. விட்டா தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் வரிசையில் சேர்த்துடுவீங்க போல...
நான் ஒருவருஷம் முன்னாடியே பார்த்துட்டேனே :))
ReplyDelete@எம்.எம்.அப்துல்லா...
ReplyDeleteநான் ஒருவருஷம்
ஒரு வருஷம் முன்னாடியே வந்த கொடுமையா இது? சூப்பரு.
தங்கள் வருகைக்கு நன்றி அப்துல்லா... தொடர்ந்து வரவும்
ஆமா, படம் முழுவதையுமே பார்த்தீர்களா? எப்படிங்க முடிந்தது?
ReplyDelete@Mohan...
ReplyDeleteபடத்தின் ஆரம்ப காட்சி முதல் சிரிச்சுகிட்டு தாஙக இருந்தேன். கூடவே என் ஃப்ரன்ட் கிட்ட குறுஞ்செய்தியில் படத்தை பத்தி கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்ததால முழுப் படத்தையும் எப்படியோ பார்த்துட்டேன்
ஐயோ youtube ல ஒரு காமெடி பாடு வருமே.. அந்த படமா.. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா சாமி அந்த படத்தையும் கடைசி வரைக்கும் உக்காந்து பாத்ருகின்களே, உங்களுக்கு ரொம்ப மன தகிரியம் சாமி. உங்கள தான் சிங்களவனோட சண்டை போடா அனுப்பனும்.
ReplyDelete@நிலா முகிலன்
ReplyDeleteதைரியத்தை இப்படி பாராட்டியதற்கு நன்றி நிலா முகிலன்
super super super:):):) ஆனா நீங்கல்லாம் ரொம்ப லேட். நான் மொதமொதல்ல படிச்ச இடுகையே இந்தப் படத்தப் பத்தித்தான், பாலாஜியோட பதிவுன்னு நினைக்கிறேன்:):):)
ReplyDelete//
ReplyDelete1. ஜே.கே.ரித்தீஷூம் டி.ராஜேன்தரும் மிக நல்ல நடிகர்கள். இனி யாரும் அவர்களை கிண்டல் செய்யக்கூடாது, ஆமா... சொல்லிட்டேன்.
2.ராமராஜன் அப்படி ஒன்றும் மோசம்மான ட்ரெஸ்ஸிங்க் சென்ஸ் உடையவர் அல்ல. என்ன அழகாய் டிரெஸ் பண்ணுவார் அவர்.//
:):):)
உங்க நிலைமை எனக்கு நல்லா புரியுது .....
ReplyDeleteதிரைக்கதையை நீங்க ஏன் நாவலா வெளியிடக்கூடாது !
@rapp
ReplyDeletesuper super super:):):) ஆனா நீங்கல்லாம் ரொம்ப லேட். நான் மொதமொதல்ல படிச்ச இடுகையே இந்தப் படத்தப் பத்தித்தான், பாலாஜியோட பதிவுன்னு நினைக்கிறேன்:):):)
அப்படிங்களா? நன்றிங்க ராப். சரி உங்க நிஜப்பெயர் என்னங்க? உங்க பெயர் பத்தின பதிவை படிச்சும் கண்டுப்பிடிக்கவே முடியல
rajan RADHAMANALAN said...
ReplyDelete//உங்க நிலைமை எனக்கு நல்லா புரியுது .....
திரைக்கதையை நீங்க ஏன் நாவலா வெளியிடக்கூடாது !//
ஏங்க இப்படில்லாம்?
நன்றி ராஜன் ராதாமணாளன்... தங்கள் வருகைக்கும் தருகைக்கும்
ஆப் பண்ணிட்டு போனத மெனக்கெட்டு
ReplyDeleteபோட்டு பாத்திருகீயலே என்னத்த சொல்ல
கடசீ மூணு வரி சிரிப்பு தாங்கல....
:)
நல்லவேளை சொன்னீங்க....நான் என் தோழி சொன்னான்னு பார்க்கலாம்னு இருந்தேன்!!
ReplyDeleteஎன்னங்கஉங்களுக்கு கிண்டலா போச்சா.....???
ReplyDeleteதங்க தலைவர் ... அகில உலக அழகு நாயகன் ... எங்கள் சாம் அன்டேர்சன் அவர்களை கிண்டல் செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்........!!!!
நான் காலேஜ் படித்துக்கொண்டிருந்த பொழுது ஹாஸ்டலில் இந்த படம் தான் போட்டார்கள் பார்த்தேன்:(
ReplyDelete//ராமராஜன் அப்படி ஒன்றும் மோசம்மான ட்ரெஸ்ஸிங்க் சென்ஸ் உடையவர் அல்ல. என்ன அழகாய் டிரெஸ் பண்ணுவார் அவர்.//
சரியா சொனீங்க...அந்த சாம் ஆண்டர்சன்னுக்கு மனசுல ஆம்பள ச்நேகானு நினைப்புவேற..படம் புல்லா அவனோட எலி பல்ல காட்டிக்கிட்டே இருப்பன்..கொடும..அதுவும் டான்சை பாக்கணுமே பிரபுதேவாலாம் இவர்ட்ட அசிச்டன்ட்டாதான் சேரனும்..தோள்ள குலுக்கிட்டு குதிச்சு குதிச்சு ஒரு ஸ்டேப் போடுவார் பார்க்க கண் கோடி வேணும்..அந்த டன்ச்சை பார்ததுனாலோ என்னவோ கண்ல கிடப்பார்வை வந்து கண்ணாடி போட்டுட்டேன்:(
என் லைப்ல இந்த மாறி ஒரு படத்தை பார்த்ததே இல்லை..கொடுமைடா சாமி..
அன்புடன்,
அம்மு.
உங்கள் வருகைக்கும் , தருகைக்கும் நன்றி அம்மு !!!!!
ReplyDeletesam anderson என்று youtube.com தளத்தில் சென்று தந்து பார்க்கவும் .
ReplyDeleteஎதற்கும் அருகில் ஆம்புலன்ஸ் வசதி அருகில் இருக்கின்றதா என்று ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள் .
எனக்குப் பிடித்த ஒரு சுட்டி :
http://www.youtube.com/watch?v=DUjt_XCGu00
சாம் ஆண்டர்சன் பேரு மட்டும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கு ஆனா... ஆளு ஒரே டேஞ்சர் போல.
ReplyDeleteஇதுல டிவிடி வேறவிட்டுருக்கானுங்களா எந்த மனசாட்சியும் இல்லை ஆளுக
ஹலோ... தலகீழா நின்னு தன்னி குடிச்சாலும் இப்படி ஒரு படத்தை யாரும் இனி தர முடியாது.. என்ன வேனும்னாலும் சொல்லிக்கோங்க....
ReplyDelete