Friday, June 18, 2010

எனக்கான உன் கவிதைகள்....2


நாழிகைக் கொருமுறையேனும்
நினைவேறிடும் நிகழ்வில்,

நானுனக்கு தந்திட

யாதுள்ளதென எண்ணுகையில்,

என்னிருப்பில் மிச்சம் தாய் புகட்டிய தமிழொன்றே...

உனைத் தோள் சாய்த்துப் பதிவு செய்த

நிழற்படத்தின் நேரெதிரில்,

கூர் பார்வைஅதில் பதித்து,

இமையோரம் நீர் முட்ட

தமிழ் தந்தேன்...


******************

மார் புசித்த மழலையின் வாசம்,

இதழ் நனைத்த பூக்களின் தேசம்,

குளிர் மிகுந்து வாடையில் வீசும்,

இரவெரிக்கும் இறுக்கம் உன் சுவாசம்....


********************

பால் வெளியும் போதுமில்லை

புன்னகைக்கு...

சூல் கொண்ட பூவனங்கள்

முகிழ்த்தலொத்த

தேவதைக்கு....


*********************

பி. கு: என்னடா... இந்த பொண்ணுக்கு ஒரு கவிதையே ஒழுங்கா எழுத வராதே! எப்படி ஒரே ஸ்ட்ரெட்ச்ல மூணு கவிதையெல்லாம் போஸ்ட் பண்ணுதுன்னு யாரும் சந்தேகப்பட வேண்டாம்! இதெல்லாம் நான் எழுதினதே இல்லை! என்னவர் எனக்காக எழுதினதாக்கும்...(என்ன? 'போதும் ரொம்பத்தான் அலட்டிக்காதே'ன்னு ஏதோ மைன்ட் வாய்ஸ் கேக்குது... சரி சரி எல்லாம் இருக்குறதுதானே... கண்டுக்காதீங்க) இந்த மாதிரி இன்னும் நிறைய ஸ்டாக் இருக்குறதால இனி அடிக்கடி இப்படி போஸ்ட் பண்ணப்படும் என்று அறிவித்துக் கொள்(ல்)கிறேன்....

42 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஆஹா...இப்படியெல்லாம் நடக்குதா?

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. //ஆஹா...இப்படியெல்லாம் நடக்குதா?//


    இப்பிடி மட்டும் தான் நடக்குது!

    ReplyDelete
  7. இதுக்கு தான் சென்னை போனிங்களா தல!, எழுதி மெயில்ல அனுப்பியிருக்கலாமே!

    ReplyDelete
  8. //இதுக்கு தான் சென்னை போனிங்களா தல!, //


    பின்ன ! திமுகல சேரப் போனேன்னு நெனச்சிட்டீங்களா!

    ReplyDelete
  9. //மெயில்ல அனுப்பியிருக்கலாமே!//


    இதெல்லாம் யூத் மேட்டர் உங்களுக்கு புரியாது! பொண்ணுக்கு இஸ்கூல் விடற நெரமாச்சு ! போயி அத கவனிங்க

    ReplyDelete
  10. இதெல்லாம் நான் எழுதினதே இல்லை! என்னவர் எனக்காக எழுதினதாக்கும்..

    ... so sweet!

    ReplyDelete
  11. ஹம்ம் நல்லா இருக்கு

    ReplyDelete
  12. மார் புசித்த மழலையின் வாசம்,

    இதழ் நனைத்த பூக்களின் தேசம்,

    குளிர் மிகுந்து வாடையில் வீசும்,

    இரவெரிக்கும் இறுக்கம் உன் சுவாசம்....//

    பாராட்டுக்கள்.
    இத எழுதியவர்க்கு!

    ReplyDelete
  13. Avar kitta sollidarenga karunakarasu

    ReplyDelete
  14. யார் எழுதினாலும் .. நல்ல கவிதை இது பாராட்டுக்கள் ...

    ReplyDelete
  15. பி. கு: என்னடா... இந்த பொண்ணுக்கு ஒரு கவிதையே ஒழுங்கா எழுத வராதே! எப்படி ஒரே ஸ்ட்ரெட்ச்ல மூணு கவிதையெல்லாம் போஸ்ட் பண்ணுதுன்னு யாரும் சந்தேகப்பட வேண்டாம்! இதெல்லாம் நான் எழுதினதே இல்லை! என்னவர் எனக்காக எழுதினதாக்கும்...(என்ன? 'போதும் ரொம்பத்தான் அலட்டிக்காதே'ன்னு ஏதோ மைன்ட் வாய்ஸ் கேக்குது... சரி சரி எல்லாம் இருக்குறதுதானே... கண்டுக்காதீங்க) இந்த மாதிரி இன்னும் நிறைய ஸ்டாக் இருக்குறதால இனி அடிக்கடி இப்படி போஸ்ட் பண்ணப்படும் என்று அறிவித்துக் கொள்(ல்)கிறேன்....

    /////

    உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

    ReplyDelete
  16. Nandri krp...
    Vaanga prabu. Intha pakkam romba naal kazichu vareenga

    ReplyDelete
  17. is that youuuuuuuuuuuuuuuuu reena jillu.............

    ReplyDelete
  18. Hi,

    Naga ellam pathu vayasulleayea pallikoodathukku bunk adichavanga itheallam jujipi materu...


    its ok ok namooru kararai verai correct panniteenga vera enna solla althe best.... ooru pakkam vantha konjam sollunga aappu

    ellam ok adikadi post poda marunthudatheengoooooooo @ jillunu oru kathal

    ReplyDelete
  19. ரீனா....வந்தேன் வந்தேன்.
    வருவேன் இன்னும்.கவிதைகள் நல்லாவே இருக்கு.தொடர்ந்தும் எழுதச்சொல்லுங்க உங்க அவரை !

    ReplyDelete
  20. @prabu:
    nanri prabu:)
    @hema:
    kandippa solrenga
    @vinu:
    unga oorkaararai naan correct pannitaalum... Unga oor kusumbu thaan ulaga prasitham aache.

    ReplyDelete
  21. engapa next post pottu pala naal aachea niyabagam irrukka

    ReplyDelete
  22. very nice blog........plz visit my blog if time permits.............http://lets-cook-something.blogspot.com/

    ReplyDelete
  23. நல்லாயிருக்கு
    உங்கள் அவருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. நல்லாருக்குங்க! நல்லாருங்க.. :-))

    வாழ்த்துகள் இருவருக்கும்!

    ReplyDelete
  25. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    ReplyDelete
  26. பி.கு. சூப்பர் அதுமட்டுமில்ல கவிதையும் சூப்பர்.

    ReplyDelete
  27. உங்க கவிதை ஓகே ரகம்.கவிதையை விட பிளாக்கின் லே அவுட் டிசைன் சூப்பரா இருக்கு,மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. நிறைய எழுதச் சொல்லுங்க அம்மணி!

    ReplyDelete
  29. அட யாரு புதுசாக ஜோதிகா நம்ம ப்ளாக் வந்திருக்கங்கன்னு பார்த்தால்,அட்டகாசமாய் இருக்கே உங்க ப்ளாக்.அருமையான கவிதை.

    ReplyDelete
  30. நல்ல எழுதியிருக்காக உங்க வீட்டுகாரர்....

    ReplyDelete
  31. சேக்காளி ராஜனுக்கும் செல்வி ரேவதிக்கும் என்னுடைய வாழ்த்துக்களை அப்படியே பாஸ் பண்ணி விடுங்க வால்ஸ்!


    சந்தர்ப்பம் அமையும் பொது நேரில் பார்த்து வாழ்த்திவிட்டு, நல்லாக் கும்மலாம்!

    :-))))

    ReplyDelete
  32. நல்லா இருக்குங்க ..!!

    ReplyDelete
  33. வாழ்த்துக்கள் ரேவதி செல்லம்.

    ReplyDelete
  34. வாழ்த்துகள் இருவருக்கும்!

    ReplyDelete
  35. வாழ்த்துகள் இருவருக்கும்!

    ReplyDelete
  36. தம்பதிகள் இருவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  37. Revathy, feeling a sort of embarrassed to post a comment in English in this beautiful blogcorner ;)I simply loved these poems :) your husband's dedications were extremely romantic and looked right from the bottom of his heart :)

    ReplyDelete
  38. hii.. Nice Post

    Thanks for sharing

    More Entertainment

    For latest stills videos visit ..

    ReplyDelete