Saturday, May 16, 2009

காதலில் சில சமயங்கள்...

பேசிக்கொள்ளும் நேரங்கள்
எல்லாம் துளியெனவே நகர
பேசாத நேரங்கள்தான்
ஆழியாய் சூழ்ந்து
அழுத்துகின்றன
மனதை...

சிரிப்புக்கு காரணம்
கேட்கும் தோழிக்கும்
மறுமுனையில் மனம்
கெடுக்கும் உன்
கொஞ்சலுக்கும்
நடுவே
சிக்கி நான் படும் பாடு
உனக்கெப்படி
தெரியும்?


நாம் விலகி இருக்கும்
சமயங்களில் என்னுடன்
ஒட்டி உறவாடும் அலைபேசி
உன் கூட இருக்கும்
தருணங்களில்,
கொஞ்சமே சிணுங்கினாலும்
பெரிய எதிரியாய்
தோன்றுகிறதே, ஏண்டா?

வார்த்தைகள் தொலைந்து
மெளனத்தில் சிக்கி
நாம் இருவருமே
தவித்துப்போகும்
கணங்களில்
மேலும் அழகு கூடி
விடுகிறது காதலுக்கு...

கூடிக் களித்திடும்
கணங்களை காட்டிலும்,
பிரிவுகளில் தான்
அதிகமாய் உணரப்படுகிறது
காதல்...

86 comments:

  1. பேசிக்கொள்ளும் நேரங்கள்
    எல்லாம் துளியெனவே நகர
    பேசாத நேரங்கள்தான்
    ஆழியாய் சூழ்ந்து
    அழுத்துகின்றன
    மனதை...///

    அழகுங்க... மெளனங்கள்தான் நம்மை சூழ்ந்து நின்று கழுத்தை இறுக்கும். அதை நன்றாகவே சொல்லியிருக்கீங்க. கவிதையும் அதைச்சுற்றி வரும் படங்களும் கண்ணுக்குக் குளுமை.

    குறிப்பா செல்போன் சிணுங்கள் நல்ல அவதானிப்பு.
    மெளனம் சிக்கி அழகுறும் காதல்/// வரிகள் பிரமாதம்.

    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  2. :-)))

    நல்லாயிருக்குங்க!!!

    ReplyDelete
  3. முதலாவது கவிதை தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...

    அருமையான வரிகள்...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. ஆமங்க காதலில் இப்படிதான் விலக விலக நெருக்கம் கூடும்.

    கவிதைகள் நல்லா இருக்கு. ரசித்துப் படித்தேன்.

    பேசிக்கொள்ளும் நேரங்கள்
    எல்லாம் துளியெனவே நகர
    பேசாத நேரங்கள்தான்
    ஆழியாய் சூழ்ந்து
    அழுத்துகின்றன
    மனதை...

    இது ரொம்ப பிடித்திருந்தது.
    அதேபோல் வார்த்தைகள் தொலைந்து
    மெளனத்தில் சிக்கி இதுவும் அருமை.

    ReplyDelete
  5. silla nearangalil alugai kooda sugamthaan illaiya reeeeeeeeena

    ReplyDelete
  6. உங்கள் கவிதையில் இருக்கும் காதலர்கள் அழகு அதைவிட அழகு தங்களது கவிதை!!!

    ReplyDelete
  7. //கூடிக் களித்திடும் கணங்களை காட்டிலும்,
    பிரிவுகளில் தான்
    அதிகமாய் உணரப்படுகிறது காதல்...//
    இது நல்லாயிருக்கே!
    அன்புடன் அருணா

    ReplyDelete
  8. //பேசிக்கொள்ளும் நேரங்கள்
    எல்லாம் துளியெனவே நகர
    பேசாத நேரங்கள்தான்
    ஆழியாய் சூழ்ந்து
    அழுத்துகின்றன
    மனதை...//

    ரொம்ப நல்லா இருக்கு ரீனா...

    //சிரிப்புக்கு காரணம்
    கேட்கும் தோழிக்கும்
    மறுமுனையில் மனம்
    கெடுக்கும் உன்
    கொஞ்சலுக்கும்
    நடுவே
    சிக்கி நான் படும் பாடு
    உனக்கெப்படி
    தெரியும்?//

    இந்த அனுபவம் காதலிக்கும் அனைவருக்கும் ஏற்படுவது, அதை கவிதையில் சொன்னது அழகு...

    //நாம் விலகி இருக்கும்
    சமயங்களில் என்னுடன்
    ஒட்டி உறவாடும் அலைபேசி
    உன் கூட இருக்கும்
    தருணங்களில்,
    கொஞ்சமே சிணுங்கினாலும்
    பெரிய எதிரியாய்
    தோன்றுகிறதே, ஏண்டா?
    //

    காதலில் சில சமயங்கள்...அப்படித்தான் தோன்றும்...

    //வார்த்தைகள் தொலைந்து
    மெளனத்தில் சிக்கி
    நாம் இருவருமே
    தவித்துப்போகும்
    கணங்களில்
    மேலும் அழகு கூடி
    விடுகிறது காதலுக்கு...
    //

    இது அழகு...

    //கூடிக் களித்திடும்
    கணங்களை காட்டிலும்,
    பிரிவுகளில் தான்
    அதிகமாய் உணரப்படுகிறது
    காதல்...//

    இது முற்றிலும் உண்மை...

    அனைத்து கவிதைகளும் அழகு...
    தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள் ரீனா...

    ReplyDelete
  9. ஆதவா said...

    ///அழகுங்க... மெளனங்கள்தான் நம்மை சூழ்ந்து நின்று கழுத்தை இறுக்கும். அதை நன்றாகவே சொல்லியிருக்கீங்க. கவிதையும் அதைச்சுற்றி வரும் படங்களும் கண்ணுக்குக் குளுமை.

    குறிப்பா செல்போன் சிணுங்கள் நல்ல அவதானிப்பு.
    மெளனம் சிக்கி அழகுறும் காதல்/// வரிகள் பிரமாதம்.

    தொடர்ந்து எழுதுங்கள் //

    ரீனா said...
    நன்றி... தங்கள் பின்னூட்டம் உற்சாகம் அளிக்கிறது.இந்த முறை வரியமைப்பு கொஞ்சம் தேறியிருக்கிறதா ஆதவா?

    ReplyDelete
  10. சென்ஷி said...
    :-)))

    நல்லாயிருக்குங்க!!!

    ரீனா said...
    நன்றி சென்ஷி:)))

    ReplyDelete
  11. வேத்தியன் said...
    முதலாவது கவிதை தான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...

    அருமையான வரிகள்...

    வாழ்த்துகள்...

    ரீனா said...
    நன்றி வேத்தியன்... சொன்ன மாதிரியே மறுபடி வந்துட்டீங்க! நன்றி

    ReplyDelete
  12. ஆ.முத்துராமலிங்கம் said...
    //ஆமங்க காதலில் இப்படிதான் விலக விலக நெருக்கம் கூடும்//

    ரீனா said...
    அனுபவமா சார்;))

    //கவிதைகள் நல்லா இருக்கு. ரசித்துப் படித்தேன்//


    ரீனா said...
    நன்றி முத்துராமலிங்கம்:)))

    பேசிக்கொள்ளும் நேரங்கள்
    எல்லாம் துளியெனவே நகர
    பேசாத நேரங்கள்தான்
    ஆழியாய் சூழ்ந்து
    அழுத்துகின்றன
    மனதை...

    இது ரொம்ப பிடித்திருந்தது.
    அதேபோல் வார்த்தைகள் தொலைந்து
    மெளனத்தில் சிக்கி இதுவும் அருமை.

    //தங்கள் வருகையும் தருகையும் உற்காகம் தருகிறது:)) தொடர்ந்து வருகை தரவும்//

    ReplyDelete
  13. vinu said...
    silla nearangalil alugai kooda sugamthaan illaiya reeeeeeeeena


    ரீனா said...
    நன்றி வினு... முதல் வருகைக்கும் தருகைக்கும்:))

    ReplyDelete
  14. Hari said...
    உங்கள் கவிதையில் இருக்கும் காதலர்கள் அழகு அதைவிட அழகு தங்களது கவிதை!!!

    ரீனா said...
    நன்றி ஹரி.. தொடர்ச்சியான‌ வருகைக்கும் தருகைக்கும்:)) தமிழ்ல பின்னூட்டம் போட்டிருக்கீங்க... மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  15. அன்புடன் அருணா said...
    //கூடிக் களித்திடும் கணங்களை காட்டிலும்,
    பிரிவுகளில் தான்
    அதிகமாய் உணரப்படுகிறது காதல்...//
    இது நல்லாயிருக்கே!
    அன்புடன் அருணா

    ரீனா said...
    நல்லாயிருந்ததா? :))நன்றி அருணா...

    ReplyDelete
  16. ரீனா said...
    @புதியவன்....

    மிக்க நன்றி புதியவன்:))) வரிவரியாய் ரசித்தமைக்கும் தங்கள் பின்னூட்டத்திற்கும்... மிகவும் ரசித்தேன்

    ReplyDelete
  17. ரீனா,

    கவிதைகளைச் சுருக்கலாமே!

    Romanticization? பண்ணுங்க!
    பண்ணுங்க! பண்ணிக்கிட்டே இருங்க.

    வழக்கமா கைல கிடார் இருக்குமே?

    காணுமே?

    எங்க கிடாரெல்லாம் பரண்ல இருக்கு தூசு படிஞ்சு.(”என் இனிய பொன் நிலாவே”)

    ReplyDelete
  18. @ரவிஷங்கர்...

    நன்றி ரவிஷங்கர்...
    :)) எங்க கிடார் invisible la?
    உங்க‌ கிடார் ஏன் தூசு படிஞ்சு போச்சு? எடுத்து க்ளீன் பண்ணி நீங்களும் ஆரம்பிங்க...("நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை")

    ReplyDelete
  19. அருமையான, மனதுக்கு நெருக்கமான காதல் கவிதைகள்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. //Hari said...
    உங்கள் கவிதையில் இருக்கும் காதலர்கள் அழகு//
    :))

    // அதைவிட அழகு தங்களது கவிதை!!!//
    :)))))))))))))))

    ReplyDelete
  21. //பேசிக்கொள்ளும் நேரங்கள்
    எல்லாம் துளியெனவே நகர
    பேசாத நேரங்கள்தான்
    ஆழியாய் சூழ்ந்து
    அழுத்துகின்றன
    மனதை.../

    உங்க முழு கவிதையும் அழகு அதில் இந்த வரிகள் மிக அழகு...

    சும்மா மனசை அள்ளும் மெளனங்கள் ஆயிரம் பேசும்...

    ReplyDelete
  22. //நாம் விலகி இருக்கும் சமயங்களில் என்னுடன் ஒட்டி உறவாடும் அலைபேசி உன் கூட இருக்கும்தருணங்களில், கொஞ்சமே சிணுங்கினாலும் பெரிய எதிரியாய் தோன்றுகிறதே, ஏண்டா?//

    ஹா ஹா மிக அழகா இருக்கு இதில் கோபம் காதல் போஸசிவ்னஸ் அதிலும் தனிமையில் இருக்கும் போது சின்ன சினுங்கள் கூட ;) நேரத்தை வீண அடிக்க கூடாது என்று சொல்லும் காதல் எல்லாம் அருமை, ... ஹ்ம்ம் கலக்குறிங்க

    ReplyDelete
  23. //வார்த்தைகள் தொலைந்து மெளனத்தில் சிக்கி நாம் இருவருமே தவித்துப்போகும் கணங்களில் மேலும் அழகு கூடி விடுகிறது காதலுக்கு...//

    அதுவும் அழகு தான் ;) அதிலும் பிரிதலில் ஒரு காதல் உண்மையை மற்றவரின் வலியை உணர்த்தும்... உங்க கவி சிறப்பாக்கா உள்ளது

    ReplyDelete
  24. நாம் விலகி இருக்கும் சமயங்களில் என்னுடன் ஒட்டி உறவாடும் அலைபேசி உன் கூட இருக்கும்தருணங்களில், கொஞ்சமே சிணுங்கினாலும் பெரிய எதிரியாய் தோன்றுகிறதே, ஏண்டா?

    கூடிக் களித்திடும் கணங்களை காட்டிலும்,
    பிரிவுகளில் தான்
    அதிகமாய் உணரப்படுகிறது காதல்...

    kathalin Unarvuhalai alahai sethukkiya sirppiye valarha un kavipayanam

    romba anubavithu eluthi irukkeenga

    alahu! alahu!! alaho alahu!!!

    ReplyDelete
  25. நாம் விலகி இருக்கும் சமயங்களில் என்னுடன் ஒட்டி உறவாடும் அலைபேசி உன் கூட இருக்கும்தருணங்களில், கொஞ்சமே சிணுங்கினாலும் பெரிய எதிரியாய் தோன்றுகிறதே, ஏண்டா?

    கூடிக் களித்திடும் கணங்களை காட்டிலும்,
    பிரிவுகளில் தான்
    அதிகமாய் உணரப்படுகிறது காதல்...


    Kathalin unarvuhalai arumayai sethukkiya sirpiye valarha un kavippayanam...

    arumayana varihal, Ivaihal anubavaththal piranthavio?

    alahu! alahu!! alaho alahu!!!

    ReplyDelete
  26. பேசிக்கொள்ளும் நேரங்கள் எல்லாம் துளியெனவே நகர பேசாத நேரங்கள்தான் ஆழியாய் சூழ்ந்து அழுத்துகின்றன மனதை...

    கண்ட நாள் கனப்பொழுதில் நகர, காணாத நாள் பல யுகங்களாய் மாறும். அழகாக சொல்லி இருக்கீங்க

    ReplyDelete
  27. சிரிப்புக்கு காரணம்
    கேட்கும் தோழிக்கும் மறுமுனையில் மனம் கெடுக்கும் உன் கொஞ்சலுக்கும் நடுவே சிக்கி நான் படும் பாடு உனக்கெப்படி
    தெரியும்?

    அழகான அவஸ்தைங்க.

    ReplyDelete
  28. நாம் விலகி இருக்கும் சமயங்களில் என்னுடன் ஒட்டி உறவாடும் அலைபேசி உன் கூட இருக்கும்தருணங்களில், கொஞ்சமே சிணுங்கினாலும் பெரிய எதிரியாய் தோன்றுகிறதே, ஏண்டா?

    அம்மா டீவீ சீரியல் சீரியஸா பார்த்துகிட்டு இருக்கும்போது அப்பா கூப்பிட்டால் அம்மாக்கு எப்டி இருக்கும்னு கேட்டுப் பாருங்க. அதே அவஸ்தைதான்.

    ReplyDelete
  29. வார்த்தைகள் தொலைந்து மெளனத்தில் சிக்கி நாம் இருவருமே தவித்துப்போகும் கணங்களில் மேலும் அழகு கூடி விடுகிறது காதலுக்கு...

    மௌனத்தை விட சிறந்த மொழி ஏது?

    ReplyDelete
  30. கூடிக் களித்திடும் கணங்களை காட்டிலும்,
    பிரிவுகளில் தான்
    அதிகமாய் உணரப்படுகிறது காதல்...

    சொந்தங்களுக்கிடையில் உள்ள உறவு எல்லாமே அப்படிதான். கா(த்திருத்)தல் ஒரு உந்துசக்தி

    ReplyDelete
  31. கார்த்திகைப் பாண்டியன் said...
    அருமையான, மனதுக்கு நெருக்கமான காதல் கவிதைகள்.. வாழ்த்துக்கள்.

    ரீனா said...
    நன்றி கார்த்திகைப்பாண்டியன்... முதல் வருகை அல்லவா? தொடர்ந்து வரவும்:))

    ReplyDelete
  32. SUBBU said...
    //Hari said...
    உங்கள் கவிதையில் இருக்கும் காதலர்கள் அழகு//
    :))

    // அதைவிட அழகு தங்களது கவிதை!!!//
    :)))))))))))))))

    ரீனா said...
    நன்றி சுப்பு:)))முதல் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து வரவும்:))

    ReplyDelete
  33. //கூடிக் களித்திடும் கணங்களை காட்டிலும்,
    பிரிவுகளில் தான்
    அதிகமாய் உணரப்படுகிறது காதல்...//

    ரொம்ப ரசிச்ச வரிகள் உண்மையும் கூட, பிரிதலில்தான் காதலின் ஆழம் அதிகமாகுது

    நல்லாயிருக்கு ரீனா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. எம்.எம்.அப்துல்லா said...
    அட :)

    ரீனா said...
    நன்றி அப்துல்லா... வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து வாருங்கள்:))

    ReplyDelete
  35. //பேசிக்கொள்ளும் நேரங்கள் எல்லாம் துளியெனவே நகரபேசாத நேரங்கள்தான் ஆழியாய் சூழ்ந்து அழுத்துகின்றனமனதை...
    //

    மவுனமே அதிகம் ஆக்கிரமிக்கும், மவுனப்பொழுதுகளில் பலவித சத்தங்கள் கொக்கரிக்கும்... வரிகள் அனைத்தும் அருமை, அலைப்பேசியின் வரியும் ரொம்ப புடிச்சது..

    ReplyDelete
  36. Suresh said...
    உங்க முழு கவிதையும் அழகு அதில் இந்த வரிகள் மிக அழகு...

    சும்மா மனசை அள்ளும் மெளனங்கள் ஆயிரம் பேசும்...

    ரீனா said...
    நன்றி தங்கள் முதல் வருகையும் பின்னூட்டங்களும் மகிழ்ச்சி தருகின்றன. தொடர்ந்து தவறாமல் வரவும்.

    Suresh said...
    //நாம் விலகி இருக்கும் சமயங்களில் என்னுடன் ஒட்டி உறவாடும் அலைபேசி உன் கூட இருக்கும்தருணங்களில், கொஞ்சமே சிணுங்கினாலும் பெரிய எதிரியாய் தோன்றுகிறதே, ஏண்டா?//

    ஹா ஹா மிக அழகா இருக்கு இதில் கோபம் காதல் போஸசிவ்னஸ் அதிலும் தனிமையில் இருக்கும் போது சின்ன சினுங்கள் கூட ;) நேரத்தை வீண அடிக்க கூடாது என்று சொல்லும் காதல் எல்லாம் அருமை, ... ஹ்ம்ம் கலக்குறிங்க//


    ரீனா said...
    உண்மைதானே... நேரத்தை வீண் செய்யக்கூடாது இல்லையா? காலம் பொன் போன்றது;))

    ReplyDelete
  37. Suresh said...
    //வார்த்தைகள் தொலைந்து மெளனத்தில் சிக்கி நாம் இருவருமே தவித்துப்போகும் கணங்களில் மேலும் அழகு கூடி விடுகிறது காதலுக்கு...//

    அதுவும் அழகு தான் ;) அதிலும் பிரிதலில் ஒரு காதல் உண்மையை மற்றவரின் வலியை உணர்த்தும்... உங்க கவி சிறப்பாக்கா உள்ளது

    ரீனா said...
    மிக்க நன்றி... இந்த உற்சாக வார்த்தைகள் ஊக்கம் தருகின்றன‌

    ReplyDelete
  38. beauty said...

    kathalin Unarvuhalai alahai sethukkiya sirppiye valarha un kavipayanam

    romba anubavithu eluthi irukkeenga

    alahu! alahu!! alaho alahu!!!

    ரீனா said...
    மிக்க நன்றி ப்யூட்டி... தங்கள் தருகையை மிகவும் ரசித்தேன். தொடர்ந்து வாருங்கள்

    ReplyDelete
  39. S.A. நவாஸுதீன் said...
    பேசிக்கொள்ளும் நேரங்கள் எல்லாம் துளியெனவே நகர பேசாத நேரங்கள்தான் ஆழியாய் சூழ்ந்து அழுத்துகின்றன மனதை...

    கண்ட நாள் கனப்பொழுதில் நகர, காணாத நாள் பல யுகங்களாய் மாறும். அழகாக சொல்லி இருக்கீங்க

    ரீனா
    உங்க‌ள‌து பின்னூட்ட‌மே க‌விதையாக இருக்கிற‌து ந‌வாஸுதீன்

    S.A. நவாஸுதீன் said...
    //சிரிப்புக்கு காரணம்
    கேட்கும் தோழிக்கும் மறுமுனையில் மனம் கெடுக்கும் உன் கொஞ்சலுக்கும் நடுவே சிக்கி நான் படும் பாடு உனக்கெப்படி
    தெரியும்?//

    அழகான அவஸ்தைங்க...
    //வார்த்தைகள் தொலைந்து மெளனத்தில் சிக்கி நாம் இருவருமே தவித்துப்போகும் கணங்களில் மேலும் அழகு கூடி விடுகிறது காதலுக்கு...//

    மௌனத்தை விட சிறந்த மொழி ஏது?


    ரீனா said...
    ம்ம்ம்.. உண்மைதாங்க ந‌வாஸுதின். த‌ங்க‌ள் ர‌ச‌னை ம‌கிழ்ச்சி அளிக்கிற‌து.


    S.A. நவாஸுதீன் said...
    கூடிக் களித்திடும் கணங்களை காட்டிலும்,
    பிரிவுகளில் தான்
    அதிகமாய் உணரப்படுகிறது காதல்...

    சொந்தங்களுக்கிடையில் உள்ள உறவு எல்லாமே அப்படிதான். கா(த்திருத்)தல் ஒரு உந்துசக்தி

    ரீனா said...
    அனுப‌வ‌ம் பேசுகிற‌து...;)) த‌ங்க‌ள் வ‌ருகைக்கு மிக்க ந‌ன்றிக‌ள் ந‌வாஸ். தொடர்ந்து வந்து உற்சாக‌ம் த‌ர‌ வேண்டும்

    ReplyDelete
  40. அபுஅஃப்ஸர் said...
    //கூடிக் களித்திடும் கணங்களை காட்டிலும்,
    பிரிவுகளில் தான்
    அதிகமாய் உணரப்படுகிறது காதல்...//

    ரொம்ப ரசிச்ச வரிகள் உண்மையும் கூட, பிரிதலில்தான் காதலின் ஆழம் அதிகமாகுது

    நல்லாயிருக்கு ரீனா வாழ்த்துக்கள்

    ரீனா said...
    தங்கள் முதல் வருகைக்கும் ரசனைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டங்களுக்கும் மிகவும் நன்றி அபு அஃப்சர்... தொடர்ந்து வரவும்

    ReplyDelete
  41. அபுஅஃப்ஸர் said...
    //பேசிக்கொள்ளும் நேரங்கள் எல்லாம் துளியெனவே நகரபேசாத நேரங்கள்தான் ஆழியாய் சூழ்ந்து அழுத்துகின்றனமனதை...
    //

    மவுனமே அதிகம் ஆக்கிரமிக்கும், மவுனப்பொழுதுகளில் பலவித சத்தங்கள் கொக்கரிக்கும்... வரிகள் அனைத்தும் அருமை, அலைப்பேசியின் வரியும் ரொம்ப புடிச்சது..

    ரீனா said..
    ம்ம்ம்... மவுனமான கணங்கள் காதலில் அதிகம் தான் இல்லையா? நன்றிங்க‌

    ReplyDelete
  42. ரீனாவா இது..?? ஆஹா..... "காதல் சில சமயங்கள்" என்னை பல தடவை வாசிக்க வைக்க விட்டது... :)))

    ReplyDelete
  43. //பேசிக்கொள்ளும் நேரங்கள் எல்லாம் துளியெனவே நகரபேசாத நேரங்கள்தான் ஆழியாய் சூழ்ந்து அழுத்துகின்றனமனதை...//

    ஏற்கனவே கொஞ்சிக்கொண்டிருக்கும் கவிதையில் அழகான தமிழும் கொஞ்சுவது மிகவும் அருமை...!! :))

    ReplyDelete
  44. //சிரிப்புக்கு காரணம்
    கேட்கும் தோழிக்கும்மறுமுனையில் மனம் கெடுக்கும் உன் கொஞ்சலுக்கும்நடுவே சிக்கி நான் படும் பாடு உனக்கெப்படி
    தெரியும்?//

    அட அப்படியே சிரிச்சுகிட்டே இருப்பீங்களா ரீனா..? கொஞ்சல்கள் நடுவே ஏன் சிரிக்கிறீங்க..? ;)))

    அழகான உணர்வுகள்... மிக அழகான வரிகளில்... !! :)))

    ReplyDelete
  45. //நாம் விலகி இருக்கும் சமயங்களில் என்னுடன் ஒட்டி உறவாடும் அலைபேசி உன் கூட இருக்கும்தருணங்களில், கொஞ்சமே சிணுங்கினாலும் பெரிய எதிரியாய் தோன்றுகிறதே, ஏண்டா?//

    இதென்னா இப்படி ஒரு அப்பாவி மாதிரி கேள்வி ரீனா..? எதிரியாய் தோன்றினால் தூக்கிபோடுங்க அலைபேசியை... ;))))

    ReplyDelete
  46. //வார்த்தைகள் தொலைந்து மெளனத்தில் சிக்கி நாம் இருவருமே தவித்துப்போகும் கணங்களில் மேலும் அழகு கூடி விடுகிறது காதலுக்கு...//

    மிக மிக அழகான வரிகள்.. உணர்வுகள்... மிகவும் ரசித்தேன்...!!

    ReplyDelete
  47. //கூடிக் களித்திடும் கணங்களை காட்டிலும்,
    பிரிவுகளில் தான்
    அதிகமாய் உணரப்படுகிறது காதல்...//

    அட அப்படியா என்ன..? :)))
    ரீனா இந்த கவிதை தொகுப்பு மிகவும் அழகான வரிகளால் நெய்யப்பட்டிருக்கிறது... அடிக்கடி இப்படி கவிதைகள் அரங்கேறுமா..? :)) வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  48. //நாம் விலகி இருக்கும் சமயங்களில் என்னுடன் ஒட்டி உறவாடும் அலைபேசி உன் கூட இருக்கும்தருணங்களில், கொஞ்சமே சிணுங்கினாலும் பெரிய எதிரியாய் தோன்றுகிறதே, ஏண்டா?//

    aircel la irundu CALLER TUNE ku phone panraangalo?? :P

    nalla irukunga kavidai.. arumai..

    ReplyDelete
  49. ungaludaiya gal story(2008) padithean eeaan reena ponnua ippadi behave pannuranga neenga kooda oru ponnu thaanea konjam villakkam solla koodatha are they really love or not i am in a exact situation now so that i am asking help me to come out from this problem plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

    ReplyDelete
  50. கவனம் ! காதிலில் உருகிப் பொய் விடப்போகிறிங்க

    ReplyDelete
  51. vinu said...
    ungaludaiya gal story(2008) padithean eeaan reena ponnua ippadi behave pannuranga neenga kooda oru ponnu thaanea konjam villakkam solla koodatha are they really love or not i am in a exact situation now so that i am asking help me to come out from this problem plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

    REENA SAID...
    vinu i saw d cooment u've put abt tat aasai megangal story post. sorry to know tat u're in d same kind of situation. even tats a true story except for the climax. not every gal is like tat. sila samayangalil boys kuda ponnunga jovial ah pazagaratha love nu thappa nenaikarathundu.watever it may be, let the gal understand ur love. if she's lucky she'll understand. don worry. cheer up vinu. ALL THE BEST

    ReplyDelete
  52. VINU DONNO WHETHER U'LL SEE MY REPLY HERE. SO I'VE POSTED THE SAME IN YOUR BLOG TOO

    ReplyDelete
  53. கபா said...
    கவனம் ! காதிலில் உருகிப் பொய் விடப்போகிறிங்க

    reena said...
    நன்றி கபா... காதலில் உருகுதல் நல்ல விஷயம் தானே:))

    ReplyDelete
  54. Aparnaa said...
    //நாம் விலகி இருக்கும் சமயங்களில் என்னுடன் ஒட்டி உறவாடும் அலைபேசி உன் கூட இருக்கும்தருணங்களில், கொஞ்சமே சிணுங்கினாலும் பெரிய எதிரியாய் தோன்றுகிறதே, ஏண்டா?//

    aircel la irundu CALLER TUNE ku phone panraangalo?? :P

    nalla irukunga kavidai.. arumai..

    reena said...
    நன்றி அபர்ணா... நாங்க அதுக்கு தான் "do not disturb" option ஆக்டிவேட் செஞ்சுட்டோம்ல?

    ReplyDelete
  55. நவீன் ப்ரகாஷ் said...
    //ரீனாவா இது..?? ஆஹா..... "காதல் சில சமயங்கள்" என்னை பல தடவை வாசிக்க வைக்க விட்டது... :)))//

    reena said...
    வாங்க நவீன் ஜி...உங்க blog-a follow பண்ணும் போது இந்த அளவு கூட எழுதலைன்னா எப்படி நவீன்ஜி?

    நவீன் ப்ரகாஷ் said...
    //ஏற்கனவே கொஞ்சிக்கொண்டிருக்கும் கவிதையில் அழகான தமிழும் கொஞ்சுவது மிகவும் அருமை...!! :))//

    reena said..
    காதல் கவிதைகளில் தாங்கள் ஆழி என்றால் நான் அதில் ஒரு சிறு துளி தான் நவீன்

    நவீன் ப்ரகாஷ் said...
    அட அப்படியே சிரிச்சுகிட்டே இருப்பீங்களா ரீனா..? கொஞ்சல்கள் நடுவே ஏன் சிரிக்கிறீங்க..? ;)))

    அழகான உணர்வுகள்... மிக அழகான வரிகளில்... !! :)))

    reena said...
    நீங்க எப்படி... gap விடாம கொஞ்சிட்டே இருப்பீங்களோ? சரி சரி... எக்ஸ்பர்ட் சொன்னா கேட்டுக்க வேண்டியது தானே

    நவீன் ப்ரகாஷ் said...
    மிக மிக அழகான வரிகள்.. உணர்வுகள்... மிகவும் ரசித்தேன்...!!

    reena said...
    நன்றி நன்றி நவீன்... உன்மையில் உங்கள் பின்னூட்டங்கள் அனைத்தையும் மிகவும் ரசித்தேன்

    ReplyDelete
  56. கனவுகளின் முகவரி

    அறிய வந்தேன்

    மெளனமாய் செல்கிறேன்

    காதல் வரிகள்
    வார்த்தைகளை
    மெளனமாக்கி விட்டன

    அருமை ரீனா ...

    ReplyDelete
  57. நாம் விலகி இருக்கும் சமயங்களில் என்னுடன் ஒட்டி உறவாடும் அலைபேசி உன் கூட இருக்கும்தருணங்களில், கொஞ்சமே சிணுங்கினாலும் பெரிய எதிரியாய் தோன்றுகிறதே, ஏண்டா?

    wow really superb reena

    ReplyDelete
  58. வாழ்த்துகள்!

    உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

    உங்கள் வருகைக்கு நன்றி,

    அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

    நன்றி
    தமிழ்ர்ஸ்

    ReplyDelete
  59. வாழ்த்துகள்!

    உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

    உங்கள் வருகைக்கு நன்றி,

    அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

    நன்றி
    தமிழ்ர்ஸ்

    ReplyDelete
  60. Hi Reena..

    Chance ae illa .. Superb ma ...

    All lines are very Nice ...

    ReplyDelete
  61. பேசிக்கொள்ளும் நேரங்கள் எல்லாம் துளியெனவே நகரபேசாத நேரங்கள்தான் ஆழியாய் சூழ்ந்து அழுத்துகின்றன மனதை...

    ஏனோ மனதை வலம் வருகிறது திரும்ப திரும்ப இந்த வரிகள்!

    அழகிய கவிதை ரீனா!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  62. Superb Kavithai reena:))

    very well written........keep writing more:)

    ReplyDelete
  63. Divya said...
    Superb Kavithai reena:))

    very well written........keep writing more:)

    reena said...
    thank u divya... im happy tat u read my blog... thank u

    ReplyDelete
  64. நட்புடன் ஜமால் said...
    கனவுகளின் முகவரி

    அறிய வந்தேன்

    மெளனமாய் செல்கிறேன்

    காதல் வரிகள்
    வார்த்தைகளை
    மெளனமாக்கி விட்டன

    அருமை ரீனா ...

    ரீனா said.,..
    நன்றி ஜமால்... இப்போல்லாம் இந்தப்பக்கம் எப்பவாச்சும் தான் வர்றீங்க?

    ReplyDelete
  65. Kannan said...
    Hi Reena..

    Chance ae illa .. Superb ma ...

    All lines are very Nice ...

    reena said...
    hi kannan... thank u pa...

    ReplyDelete
  66. sakthi said...
    நாம் விலகி இருக்கும் சமயங்களில் என்னுடன் ஒட்டி உறவாடும் அலைபேசி உன் கூட இருக்கும்தருணங்களில், கொஞ்சமே சிணுங்கினாலும் பெரிய எதிரியாய் தோன்றுகிறதே, ஏண்டா

    wow really superb reena

    reena said...
    உங்கள் முதல் வருகையல்லவா? மகிழ்ச்சி... தொடர்ந்து வரவும்

    ReplyDelete
  67. chuumma oru attendance pottutu pogamlamnu vartaaaaaa cheekiram puthiya pathivu podungappa

    ReplyDelete
  68. sari sari puthiya padipu eppoluthu poduvathaaga utheasam 15, 17 naal aguthiilea dailyyum vanthu vanthu eamanthuttu pogireanpa

    ReplyDelete
  69. உங்களின் ப்லோக்கேருக்கு நான் வருவது முதல் முறை..
    கவிதைகள் சூப்பர்..அருமை.

    ReplyDelete
  70. //கூடிக் களித்திடும்
    கணங்களை காட்டிலும்,
    பிரிவுகளில் தான்
    அதிகமாய் உணரப்படுகிறது
    காதல்.//

    ஓ..அப்படிங்களா.

    உண்மைதான்.

    ReplyDelete
  71. //கொஞ்சமே சிணுங்கினாலும்
    பெரிய எதிரியாய்
    தோன்றுகிறதே, ஏண்டா? //

    எல்லாம் அந்த கன்றாவி காதல்தான். (ஐய்யயோ ஒரே ஃப்லீங்ஸ் ஆயிபோச்சு.. எங்கடி இருக்கற என் செல்லம்.)

    ReplyDelete
  72. //கூடிக் களித்திடும்
    கணங்களை காட்டிலும்,
    பிரிவுகளில் தான்
    அதிகமாய் உணரப்படுகிறது
    காதல்...//

    ரணமான கணங்களின்
    இதமான வருடல்கள்..
    சுகமான சுமைகளின்
    மிதமான உளறல்கள்..

    சூப்பர்!

    ReplyDelete
  73. //அதிகமாய் உணரப்படுகிறது
    காதல்...//

    ஆதலினால் காதல் செய்வீர்.......ம் சும்மாவா சொன்னார்

    ReplyDelete
  74. நல்ல கனவுகள்...மிக நல்ல கவிதைகள்!
    மிக மிக நல்ல முகவரி!!வாழ்த்துக்கள் ரீனா..

    ReplyDelete
  75. This comment has been removed by the author.

    ReplyDelete
  76. எல்லா கவிதைகளும் அழகு!!!தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    அம்மு.
    http://ammus-recipes.blogspot.com

    ReplyDelete
  77. வியா (Viyaa) said...
    உங்களின் ப்லோக்கேருக்கு நான் வருவது முதல் முறை..
    கவிதைகள் சூப்பர்..அருமை.

    நன்றி வியா... தொடர்ந்து வருக... அழகான பெயர் உங்களுடையது.

    ReplyDelete
  78. இராவணன் said...
    //கூடிக் களித்திடும்
    கணங்களை காட்டிலும்,
    பிரிவுகளில் தான்
    அதிகமாய் உணரப்படுகிறது
    காதல்.//

    ஓ..அப்படிங்களா.

    உண்மைதான்.


    நன்றி இராவணன்... எப்படிங்க இப்படியெல்லாம் புனைப்பெயர்:)))

    ReplyDelete
  79. sankarfilms said...
    nalla pathivu
    sk


    nandri sk

    ReplyDelete
  80. @கிருஷ்ணா

    ரணமான கணங்களின்
    இதமான வருடல்கள்..
    சுகமான சுமைகளின்
    மிதமான உளறல்கள்..

    சூப்பர்!

    நன்றி கிருஷ்ணா... மீண்டும் வருக‌

    ReplyDelete
  81. ஷோபிகண்ணு said...
    //அதிகமாய் உணரப்படுகிறது
    காதல்...//

    ஆதலினால் காதல் செய்வீர்.......ம் சும்மாவா சொன்னார்

    ம்ம்ம்ம்... பாரதியைத்தானே சொல்கிறீர்கள்?;))

    ReplyDelete
  82. பா.ராஜாராம் said...
    நல்ல கனவுகள்...மிக நல்ல கவிதைகள்!
    மிக மிக நல்ல முகவரி!!வாழ்த்துக்கள் ரீனா..


    நன்றி ராஜாராம்,,, மீண்டும் வருக‌

    ReplyDelete
  83. Ammu Madhu said...
    எல்லா கவிதைகளும் அழகு!!!தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    அம்மு.

    நன்றி அம்மு... தொடர்ந்து வரவும்

    ReplyDelete
  84. rajan RADHAMANALAN said...
    ''மனம் கெடுக்கும் உன் கொஞ்சலுக்கும்நடுவே ''

    அழகாய் இருக்கிறது!

    நன்றி ராஜன் ராதாமணாளன்... தங்கள் வருகைக்கும் தருகைக்கும்

    ReplyDelete