Monday, July 13, 2009

சுவாசத்தேடல்கள்




நின்று, நடந்து, சிரித்து, பேசி விடைக்கொடுத்த(?!) இடங்களை காணும்போது
உன் இதமான நினைவுகள் மனதில்
அலைமோதுகின்றன...
ஏனோ இப்போது அவற்றில் இதம் குறைந்து நெஞ்சை அழுத்தி
தொண்டையை அடைக்கின்றன...
எங்கோ உன் தொலைந்த அடையாளங்களை
தேடிக்கொண்டிருக்கிறேன்...
அவை தொலைந்தவையா அல்லது உடைந்தவையா என
தெரியாமலேயே...
காதல் கண்ணாடி உடைகையில் நினைவுப்பிம்பங்கள்
சிதறினாலும் அவை அழிவதேயில்லை...
உன் காதல் மனதை அழுத்தி உயிரை எடுக்கும் முயற்சிகளால்,
ஏனோ மரண நினைவுகள் மனதில் எட்டிப்பார்க்கின்றன
அவ்வப்போது...
ஒரு வேளை அம்முயற்சிகள் வெல்லக்கூடும்...
வென்றாலென்ன...?
என்னை உயிர்ப்பிக்க உன் மூச்சு எந்த நொடியும்,
காற்றில் கலந்து என் நாசி தேடி வரும் என,
இப்போதிலிருந்தே தேடிக்கொண்டிருக்கிறேன்...
முகத்தில் மோதும் காற்றில் உன் சுவாசத்தை,
என் நுரையீரல்கள் வலிக்க....

16 comments:

  1. நின்று, நடந்து, சிரித்து, பேசி விடைக்கொடுத்த(?!) இடங்களை காணும்போது
    உன் இதமான நினைவுகள் மனதில்
    அலைமோதுகின்றன...


    நிச்ச‌ய‌மா இதை ஆமோதிக்கிறேன்

    ReplyDelete
  2. இங்கும் ஒரு தேடல் காதல் தேடல்

    நல்லாயிருக்குங்க கவிதையாவும் இல்லாமல் உறைநடையாமலும் இல்லாமல்

    எழுத்துக்களை மாற்றிப்போட்டு கோர்வையா எழுதினால் கவிதை முழுமையடையும்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எங்கோ உன் தொலைந்த அடையாளங்களை
    தேடிக்கொண்டிருக்கிறேன்...
    அவை தொலைந்தவையா அல்லது உடைந்தவையா என
    தெரியாமலேயே...\\

    அருமை.

    என்னை உயிர்ப்பிக்க உன் மூச்சு எந்த நொடியும்,
    காற்றில் கலந்து என் நாசி தேடி வரும் என,
    இப்போதிலிருந்தே தேடிக்கொண்டிருக்கிறேன்...]]

    முகத்தில் மோதும் காற்றில் உன் சுவாசத்தை,
    என் நுரையீரல்கள் வலிக்க....]]

    வீரியம்.

    ReplyDelete
  4. காதல் கண்ணாடி உடைகையில் நினைவுப்பிம்பங்கள்
    சிதறினாலும் அவை அழிவதேயில்லை.

    அருமை

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தேடல் ரொம்ப நல்லா இருக்கு ரீனா.

    என்னை உயிர்ப்பிக்க உன் மூச்சு எந்த நொடியும்,
    காற்றில் கலந்து என் நாசி தேடி வரும் என,
    இப்போதிலிருந்தே தேடிக்கொண்டிருக்கிறேன்...
    முகத்தில் மோதும் காற்றில் உன் சுவாசத்தை,
    என் நுரையீரல்கள் வலிக்க....

    ரசித்த வரிகள்

    ReplyDelete
  7. நின்று, நடந்து, சிரித்து, பேசி விடைக்கொடுத்த(?!) இடங்களை காணும்போது
    உன் இதமான நினைவுகள் மனதில்
    அலைமோதுகின்றன...
    \\
    கண்டிப்பாக

    ReplyDelete
  8. காதல் கண்ணாடி உடைகையில் நினைவுப்பிம்பங்கள்
    சிதறினாலும் அவை அழிவதேயில்லை...
    \\
    சத்தியமான உண்மை

    ReplyDelete
  9. @ அபுஅஃப்ஸர்
    உண்மைதான் அபு அஃப்ஸர்... இன்னும் வார்த்தைகோர்வை அவ்வளவாய் வசப்படவில்லை... வருகைக்கும் தருகைக்கும் நன்றி

    ReplyDelete
  10. @ நட்புடன் ஜமால்
    வாங்க ஜமால்... தருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. sakthi said...
    காதல் கண்ணாடி உடைகையில் நினைவுப்பிம்பங்கள்
    சிதறினாலும் அவை அழிவதேயில்லை.

    அருமை


    நன்றி சக்தி...

    ReplyDelete
  12. rajan RADHAMANALAN said...
    வாழ்த்துகள் ரீனா

    நன்றிங்க ராதாமணாளன்... ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க இல்ல?

    ReplyDelete
  13. S.A. நவாஸுதீன் said...
    தேடல் ரொம்ப நல்லா இருக்கு ரீனா

    மிக்க நன்றி நவாஸ்

    ReplyDelete
  14. @ rose
    நன்றி ரோஸ்:)))

    ReplyDelete
  15. //உன் காதல் மனதை அழுத்தி உயிரை எடுக்கும் முயற்சிகளால்,
    ஏனோ மரண நினைவுகள் மனதில் எட்டிப்பார்க்கின்றன
    அவ்வப்போது...
    ஒரு வேளை அம்முயற்சிகள் வெல்லக்கூடும்...
    வென்றாலென்ன...?//

    அருமை...நல்ல தமிழ்வளம்!!!

    ReplyDelete